மாயமான சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கி துருக்கியில் உள்ள தூதரகத்தில் கொலை செய்யப்பட்டதை சவூதி அரேபியா முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய தனது உளவு பிரிவு அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளதாகவும் சவூதி அரேபியா அறிவித்துள்ளது.
கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜமால் அமெரிக்காவிலுள்ள வொஷிங்டன் போஸ்டில் சவூதி அரசை விமர்சித்தும் குறிப்பாக அதன் இளவரசர் முகம்மது பின் சல்மானை விமர்சித்தும் கட்டுரைகளை எழுதி வந்தார்.
துருக்கியைச் சேர்ந்த பெண்ணை ஜமால் திருமணம் செய்யவிருந்த நிலையில், கடந்த 2 ஆம் திகதி துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி தூதரக அலுவலகத்துக்குச் சென்றவர் மாயமானார்.
இவ்விவகாரம் தொடர்பாக, சவூதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை சந்தேக நபர்களாக குறிப்பிட்டு துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவூதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஓடியோ ஆதாரத்தையும் வெளியிட்டது.
சவூதி பத்திரிகையாளர் ஜமால் மாயமான விவகாரத்தில் நாளுக்கு நாள் பல அதிர்ச்சியான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சவூதி அரேபியா தூதரகத்தின் உள்ளே ஜமால், விரல்கள் துண்டிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, பின்னர் அவரது தலை துண்டிக்கப்பட்டு கொடூர