ரம்ஸி ராஸீக்கை உடன் விடுவிக்குக ; சமூக வலைத்தளங்களில் அழுத்தம்

0 780

சமூ­க­ வ­லைத்­தள செயற்­பாட்­டா­ள­ரான ரம்ஸி ராஸீக் கைது செய்­யப்­பட்டு சுமார் 120 நாட்­க­ளுக்கும் அதி­க­மான காலம் விசா­ர­ணை­க­ளின்றித் தடுத்­து­ வைக்­கப்­பட்­டி­ருக்கும் நிலையில், அவர் நிபந்­த­னைகள் எவை­யு­மின்றி உட­ன­டி­யாக விடு­தலை செய்­யப்­பட வேண்டும் என்ற அவ­ருக்கு ஆத­ர­வான கோஷம் சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் வலுத்­தி­ருக்­கி­றது.

சமூ­க­வ­லைத்­தள செயற்­பாட்­டா­ள­ரான ரம்ஸி ராஸீக்கின் மீது சுமத்­தப்­பட்­டி­ருக்கும் அனைத்துக் குற்­றச்­சாட்­டுக்­களும் நீக்­கப்­பட்டு, எவ்­வித நிபந்­த­னை­க­ளு­மின்றி அவர் உட­ன­டி­யாக விடு­தலை செய்­யப்­பட வேண்டும் என்று ஏற்­க­னவே சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபை குறிப்­பிட்­டி­ருந்­தது. அவர் முறை­யாக சட்­டத்­த­ர­ணி­யொ­ரு­வரின் உத­வியை நாடு­வ­தற்கும், உற­வி­னர்­க­ளுடன் பேசு­வ­தற்கும் அனு­மதி மறுக்­கப்­ப­டு­வ­தாகச் சுட்­டிக்­காட்­டிய மன்­னிப்­புச்­சபை, அவர் பல்­வேறு நோய்­நி­லை­மை­களைக் கொண்­டி­ருப்­பதால் முறை­யான சுகா­தாரப் பாது­காப்பு வச­தி­க­ளற்ற சிறைச்­சாலை சூழ­லினால் அவ­ருக்கு ஏற்­ப­டக்­கூ­டிய விளை­வுகள் தொடர்பில் ராஸீக்கின் குடும்­பத்­தினர் கவ­லை­ய­டைந்­துள்­ள­தா­கவும், எனவே அவரை உட­ன­டி­யாக விடு­தலை செய்­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தது. 

ஓய்­வு­பெற்ற அரச உத்­தி­யோ­கத்­தரும் சமூ­க­வ­லைத்­தள செயற்­பாட்­டா­ள­ரு­மான ரம்ஸி ராஸீக்­கினால் அவ­ரது பேஸ்புக் பக்­கத்தில் இடப்­பட்ட பதி­வொன்­றுக்­காக, அவர் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு விசா­ர­ணை­க­ளின்றித் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இந்­நி­லையில் அவர் உட­ன­டி­யாக விடு­தலை செய்­யப்­பட வேண்டும் என்ற கோஷம் சமூக வலைத்­த­ளங்­களில் வலுத்­து­வ­ரு­கின்­றது. ரம்ஸி ராஸீக்கின் விடு­த­லையை வலி­யு­றுத்தி விடு­தலை இயக்கம் என்ற அமைப்பு அதன் பேஸ்புக் பக்­கத்தில் செய்­தி­ருக்கும் பதிவில் கூறி­யி­ருப்­ப­தா­வது:

நீரி­ழிவு, மூட்­டு­வாதம் உள்­ளிட்ட பல்­வேறு நோய்­நி­லை­மை­களால் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் ரம்ஸி ராஸீக் 120 இற்கும் மேற்­பட்ட நாட்­க­ளாகத் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார். தற்­போது அவர் சுய­மாக நடப்­ப­தற்­குக்­கூட இய­லாத நிலை­யி­லி­ருப்­ப­தா­கவே அவ­ரு­டைய சகோ­தரர் தெரி­வித்­தி­ருக்­கிறார். ரம்ஸி ராஸீக்­கிற்கு உட­ன­டி­யாக சத்­தி­ர­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்று மருத்­து­வர்கள் பரிந்­து­ரைத்­தி­ருக்­கின்­றனர்.

எம்மில் பலரும் அர­சியல் பதி­வொன்றை சமூ­க­வ­லைத்­த­ளத்தில் பதி­வேற்றம் செய்­வ­தற்கு முன்­ன­தாக இரு­முறை சிந்­திப்­ப­தில்லை. ஏனெனில் எம்­மு­டைய கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­து­வது எமது அடிப்­படை உரி­மை­யாகும். ரம்­ஸியும் அத­னையே செய்தார்.

அவர் இன­வா­தத்­திற்கு எதி­ரான போராட்­டத்­திற்­கா­கவே தனது பேனை­யையும் கணி­னியின் தட்­டச்­சுப்­ப­ல­கை­யையும் பயன்­ப­டுத்­தினார். அவர் தனது அடிப்­படை உரி­மையைப் பயன்­ப­டுத்­தி­ய­மைக்­காக உயிர் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் உள்ளானார்.

அதற்காக அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்படுவதற்குப் பதிலாக அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்களாகிய நாம் ரம்ஸி ராஸீக்கின் குடும்பத்தாரின் பதற்றத்தினை இங்கு பதிவுசெய்வதுடன், நிபந்தனைகள் எவையுமின்றி அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம் என்று அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.