பாகிஸ்தான் இஸ்ரேலை அங்கீகரிக்காது : இம்ரான் கான்

0 889

எம்.ஐ.அப்துல் நஸார் 

பலஸ்தீனியர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பலஸ்தீன தேசம் உருவாக்கப்படும் வரை தனது நாடு இஸ்ரேலை அங்கீகரிக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

உள்ளூர் ஊடகமான துன்யா நியூஸுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அளித்த நேர்காணலில், இஸ்ரேலுடனான உறவை சீராக்க கடந்த வாரம் அமெரிக்காவின் ஏற்பாட்டிலமைந்த ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் ஏற்றுக்கொண்டிருந்த நிலையில் பூடகமாக கருத்துத் தெரிவித்த அவர், இஸ்ரேலை ஒரு நாடாக இஸ்லாமாபாத் அங்கீகரிக்காது எனத் தெரிவித்தார்.

எந்த நாடு எப்படி நடந்துகொண்ட போதிலும் எமது நிலைப்பாடு தெளிவானது. எமது நிலைப்பாடு பாகிஸ்தானின் ஸ்தாபகர் காயிதே அஸாம் மொஹமட் அலி ஜின்னாஹ்வினால் 1948 இல் தெளிவுபடுத்தப்பட்டதாகும். அதாவது பலஸ்தீனியர்களுக்கு அவர்களின் உரிமைகள் வழங்கப்பட்டு  நியாயமான தீர்வு வழங்கப்படாத வரையில் இஸ்ரேலை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனபதே அந்த நிலைப்பாடாகும் எனவும் கான் தெரிவித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.