வடக்கு கிழக்கு யுத்த பாதிப்பு: முஸ்லிம்கள் நஷ்டஈடு கோரி போதுமானளவு விண்ணப்பிக்கவில்லை

0 738

யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் பாதிக்­கப்­பட்ட மக்களில் பெரும்­பா­லானோர் நஷ்­ட­ஈடு கோரி விண்­ணப்­பிக்­காமை அறி­யப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் பகு­தி­களைச் சேர்ந்த அநேகர் அறி­யாமை கார­ண­மாக விண்­ணப்­பிக்கத் தவ­றி­யுள்­ளனர். யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட அசையும், அசை­யாத சொத்­து­க­ளுக்கும் மத நிலை­யங்­க­ளுக்­கு­மான நஷ்­ட­ஈ­டு­க­ளுக்கு  விண­்ணப்­பிக்­கா­த­வர்கள் உட­ன­டி­யாக விண்­ணப்­பிக்­கும்­படி வடக்கு அபி­வி­ருத்தி, மீள்­கு­டி­யேற்றம், புனர்­வாழ்வு பிர­தி­ய­மைச்சர் காதர் மஸ்தான் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நஷ்­ட­ஈ­டுகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

“யுத்­தத்­தினால் ஏற்­பட்ட உயி­ரி­ழப்­பு­க­ளுக்கும் அமைச்சு நஷ்­ட­ஈ­டுகள் வழங்கி வரு­கி­றது என்­றாலும் அறி­யாமை கார­ண­மாக யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட வட, கிழக்கு மக்கள் நஷ்­ட­ஈடு கோரி விண்­ணப்­பிக்கத் தவ­றி­யுள்­ளனர். அவ்­வா­றா­ன­வர்கள் வடக்கு அபி­வி­ருத்தி மீள் குடி­யேற்றம் மற்றும் புனர்­வாழ்வு அமைச்­சி­ட­மி­ருந்து அதற்­கான விண்­ணப்­பங்­களைப் பெற்றுக் கொள்ள முடியும். விண்­ணப்­பங்கள் கிடைக்கப் பெற்­றதும் அவை ஆரா­யப்­பட்டு, உறு­திப்­ப­டுத்­தப்­பட்டு சேத விபரங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு நஷ்டஈடுகள் வழங்கப்படும். இதற்கான நடவடிக்கைகளில் அமைச்சின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.