கொவிட் 19 காலத்தில் ஜும்ஆ பள்ளியல்லாதவற்றிலும் ஜும்ஆ நடத்தலாம் : உலமா சபை

1 1,758

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை ஜும்ஆ பள்ளியல்லாத ஏனைய மஸ்ஜத்கள், தக்கியாக்கள் மற்றும் ஸாவியாக்களில் நிறைவேற்ற முடியும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா குழு அறிவித்துள்ளது. எனினும் இந்த அனுமதியானது கொவிட் 19 அச்சுறுத்தல் நீங்கும் வரைக்குமே என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்கம் அனுமதித்த எண்ணிக்கையை விட அதிகமானோர் ஒன்றுகூடி ஜும்ஆ தொழுகையில் ஈடுபடுவது சிரமம் எனக் கருதப்படும் இடங்களில் ஜும்ஆவை நிறைவேற்ற சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் லுஹர் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றும் உலமா சபையின் பத்வா பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் முழு விபரம் வருமாறு :

ஜுமுஆவை நிறைவேற்றுவது மார்க்கத்தில் மிகமுக்கிய கடமைகளில் ஒன்றாகும். அதனை நிறைவேற்றுவதற்கு மார்க்கத்தில் பல வழிகாட்டல்களும் நிபந்தனைகளுமுள்ளன. அவற்றைப் பேணிநடப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். அத்துடன் தற்போது நிலவும் கோவிட் 19 அசாதாரண நிலையைக் கவனத்திற்கொண்டு சுகாதார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிட்டுள்ள வழிகாட்டல்களைப்பேணி ஜுமுஆவை நிறைவேற்றுதல் வேண்டும்.

கோவிட் 19 பரவலைத் தடுப்பதற்காக, மதஸ்தலங்களில் ஒன்றுகூடுவோரின் எண்ணிக்கையை சுகாதார அதிகாரிகள் மட்டுப்படுத்தியுள்ளதால் அதனை விட அதிக எண்ணிக்கையுடையோர் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

ஜுமுஆக் கடமை நிறைவேறுவதற்கு நிரந்தரக் குடியிருப்பாளர்கள், பருவவயதை அடைந்த 40 ஆண்கள் சமுகமளித்திருப்பது ஷாபிஈ மத்ஹபின்படி கட்டாயம் என்பதால், நிரந்தரக் குடியிருப்பாளர்கள் 40 ஆண்கள் ஒவ்வொரு ஜுமுஆவிலும் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இடநெருக்கடி அல்லது சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்மை அல்லது வேறு காரணங்களினால், 40 பேரைவிட குறைவான எண்ணிக்கையிருப்பின் அவர்கள் ழுஹ்ர் தொழுதுகொள்ள வேண்டும்.

இடநெருக்கடியின் காரணமாக ஓர் ஊரில் பல இடங்களிலும் ஜுமுஆத் தொழமுடியும் என்ற மார்க்க சலுகையின் அடிப்படையில், தற்போதைய சூழலில் சமூக இடைவெளியை பேணி அனைவரும் ஒன்றுசேர்ந்து ஜுமுஆவை நிறைவேற்ற முடியாது என்ற நிலையில், பிரதேசக் கிளை ஜம்இய்யாக்களின் ஆலோசனையுடன் உரிய அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று ஜுமுஆ மஸ்ஜித்கள் ஏனைய மஸ்ஜித்கள், தக்கியாக்கள், ஸாவியாக்கள் போன்ற இடங்களில் ஜுமுஆவை நிறைவேற்றிக் கொள்ளல். சுகாதார அதிகாரிகள் (PHI) அனுமதியளிப்பின் மத்ரஸாக்கள், மண்டபங்கள், பொது இடங்கள் போன்றவற்றிலும் ஜுமுஆவை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

நோய், பிரயாணம், பயம், மழை தொழுகைக்கு செல்லமுடியாத நிர்ப்பந்தம் போன்ற காரணங்களினால் ஜுமுஆவுடைய கடமையை நிறைவேற்றாமல் விடுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

கோவிட் 19 அசாதாரண சூழ்நிலையில், அரசாங்கம் அனுமதிக்கும் எண்ணிக்கையினரை விட அதிகமானோர் ஒன்று சேர்வது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சமூக இடைவெளியைப் பேணி ஊரிலுள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து ஜுமுஆவை நிறைவேற்றுவது சிரமம் என்பதால், ஜுமுஆவை நிறைவேற்ற சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் ழுஹ்ருடைய தொழுகையை தொழுது கொள்வது போதுமானது. நிர்ப்பந்த நிலையில் ஜுமுஆவை நிறைவேற்ற முடியாமல் போனதால், ஜுமுஆவை விட்ட குற்றம் ஏற்படாது. மாறாக அதற்குரிய நன்மை கிடைக்கும்.

இவ்விடயத்தில் ஊர் ஜமாஅத்தினர் தமது மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி, முடியுமானவர்கள் ஜுமுஆவை நிறைவேற்றுவதுடன், ஏனையவர்கள் ழுஹ்ருடைய தொழுகையை தொழுதுகொள்ளல் வேண்டும்.

எமது நாட்டில் மஸ்ஜித்களுக்கு பொறுப்பாகவுள்ள வக்ஃப் சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் வழிகாட்டல்களையும் கவனத்திற் கொள்ளவும்.

குறிப்பு : ஓர் ஊரில் பல இடங்களில் ஜுமுஆ நடாத்துவதற்குரிய சலுகை, தற்பொழுது நாட்டில் நிலவும் கோவிட் 19 நெருக்கடி நிலை நீங்கும் வரையாகும். இந்நெருக்கடி நிலை நீங்கி நாடு இயல்புநிலைக்கு திரும்பியதன் பின்பு, இவ்வாறு பல இடங்களிலும் ஜுமுஆக்களை நடாத்துவதை நிறுத்தி, வழமையாக ஜுமுஆ நடைபெற்ற இடங்களில் மாத்திரம் ஜுமுஆக்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதே, மார்க்க விதிகளின்படி ஜுமூஆக்கள் நிறைவேறுவதற்கு காரணமாக அமையும்.

மேற்கூறப்பட்ட முறைகளில் ஓர் ஊரில் பல இடங்களில் ஜுமுஆ நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்துகொள்ள முடியாதவர்கள் பத்வாப் பிரிவின் துரித இலக்கத்தை 0117490420 தொடர்பு கொள்ளவும். – Vidivelli

1 Comment
  1. Noor Nizam says

    “The Muslim Voice” predicted that the ACJU will once again interfere in matters of the Sri Lanka Wakf Board and will try “MESS UP” with the authorities. The Wakf Board has already stipulated clear advice and issued instructions falling in line with the advice of the DHS Dr. Anil Jayasinghe and the Health Ministry/Public Health Services. With the above announcement, the ACJU has “JUST DONE” what “The Muslim Voice” had predicted and the above instructions/news published is “JUST A PUBLICITY STUNT” by the ACJU. The Wakf Board instructions can be confirmed on: http://www.jaffnamuslim.com/2020/06/blog-post_657.html & https://ceylontoday.lk/news/sl-wakfs-board-gives-green-light-for-all-mosques-to-reopen:
    It seems that the ACJU is ‘NOT” following the “WAY OF LIFE” stipulated in the Holy Quran and the “SUNNAH” of the Holy Prophet Mohamed (S.A.L). Theys are determined to lead the Muslims in Sri Lanka on the path of “DECEPTION and HOODWINKING”. The ACJU and its hierarchy including Moulavi Rizvi (so-called) Mufthi are determined to still continue doing this because they fear that their hold on the humbleness of the Muslim Jamath/Umma in Sri Lanka is begininmg to “ERRORD FAST” and the Sri Lanka Muslims are begining to follow the “REAL AND TRUE ISLAMIC WAY OF LIFE” revealed in the HOLY QURAN and enlightened in the SUNNA, Insha Allah.
    It is time-up that they should follow the guidance provide in the “HOLY QURAN” as stated below, Insha Allah.
    1. Being loyal and having love for one’s country is a part of the Islamic faith. The Quran states, “O ye who believe, obey God and obey the Prophet and obey those in authority from among you” (4:60).
    2. Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves. And when Allah intends for a people ill, there is no repelling it. And there is not for them besides Him any patron.
    The ACJU and Moulavi Rizvi (so-called) Mufthi has still NOT answered the question raised by “The Muslim Voice” numerous times regarding a large block of land in Colombo 12 which they received from former President Mahinda Rajapaksa when they were politically flirting with the UPFA/SLFP government and no one knows what happened to this block of state land that the ACJU got from Mahinda. IS IT NOT TIME UP NOW THAT THEY REVEAL THE TRUTH ABOUT THIS LAND AND WHETHERE THEY SOLD THIS STATE LAND AND WHAT HAPPENED TO THE MONEY?
    Noor Nizam – Convener “The Muslim Voice”.

Leave A Reply

Your email address will not be published.