உடல் அடக்கம் செய்யப்படுவதால் கொரோனா வைரஸ் பரவுவதில்லை

0 1,578

டாக்டர் மரீனா தாஹா ரிபாய்
தமிழில்: ஏ.ஆர். ஏ.பரீஸ்
நன்றி: அருண வார இதழ்

கொவிட் -19 வைரஸ் நோய் காரணமாக மரணிப்போரின் உடலை என்ன செய்வது? எப்படிக் கையாள்வது? என்பது தொடர்பாக எந்தவொரு நாட்டிலும் இல்லாத சர்ச்சை எமது நாட்டில் இடம்பெற்றுவருவது அனைவரும் அறிந்த விடயமாகும்.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா எனும் அபாயகரமான வைரஸ் காரணமாக மரணிக்கும் நோயாளர்களின் உடல்களைத் தகனம் செய்வது இன்று பேசு பொருளாகியுள்ளது. கொவிட் -19 வைரஸினால் மரணித்தவர்களின் உடல்களைத் தகனம் செய்வது மக்களின் உரிமைகளுக்கு தீங்காக அமையுமா? என்பது தொடர்பில் பல்வேறு துறைகளைச் சேர்ந்தோர் வெளியிடும் கருத்துகள் விஞ்ஞான ரீதியிலான அத்தாட்சிகளுக்கு முரணானதாக அமைந்துள்ளது.

அனைத்து தொற்று நோய்களும் உலகில் அடிக்கடி தோன்றி மிக மோசமான நிலைமைகளை உருவாக்கியுள்ளன. இவ்வாறான தொற்று நோய்கள் காரணமாக மரணித்தவர்கள் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதால் மையவாடிகளில் மண் மாசுபடுகிறது எனும் கருத்து சமூகத்தில் மேலெழுந்துள்ளது. இவ்வாறு மண் மாசுபடுவதன் மூலம் அருகிலுள்ள மக்களுக்கு சவால்கள் ஏற்படுகின்றன என்றால் வரலாற்றில் ஏற்பட்ட மலேரியா,கொலரா வைரஸ், காசநோய், எபோலா ஆகிய நோய்களின் தாக்கத்தினால் சவால்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்நோய் காரணமாக தனியாக மற்றும் கூட்டமாக உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. நவீன தொழில்நுட்பம் மற்றும் நடவடிக்கைகள் மூலம் விஷேட நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் இவ்வாறான சவால் ஏற்பட்டதாக ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இவ்வாறு அடக்கம் செய்யப்பட்ட மண் மாசுபடுமென்றால் எபோலா போன்ற மிகவும் பயங்கர, இலகுவில் தொற்றுக் கூடிய நோய்கள் செங்கமாலை மற்றும் எச்.ஐ.வி நோய்கள் காரணமாக மரணிப்போரின் உடல்கள் அபிவிருத்தி அடைந்த நாடுகள் உட்பட உலகெங்கும் உள்ள நாடுகளில் அடக்கம் செய்யப்பட்டிருக்காது. இறந்த உடல்களில் பக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்கள் நீண்ட காலம் உயிர்வாழ முடியாது என்ற காரணத்தினால் இவ்வாறு அடக்கம் செய்யப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

மேலுமொரு குறிப்பிட்டுக் கூறவேண்டிய காரணம் என்னவென்றால், உணவு சமிபாட்டுத் தொகுதியில் உயிர்வாழும் உயிரணுக்கள் முறையாக அடக்கம் செய்யப்படாத உடல்களின் கழிவுகள் வெளியேறுவது இயற்கையாக இடம்பெறும். இதனாலேயே உணவு சமிபாட்டுத் தொகுதிக்கு அண்மித்து பக்டீரியாவினால் பாதிக்கப்பட்டு மரணித்தவர்களில் உடல்கள் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டு சீல்வைக்கப்பட்ட பைகளுக்குள் உட்படுத்தப்படுகின்றன.

சமிப்பாட்டுத் தொகுதியை அண்மித்து பலவகையான வைரஸ்கள் இருக்கின்றன. இவ்வாறான வைரஸ் நோய்களுக்குள்ளாகி மரணித்தவர்களின் உடல்கள் மூலம் மாத்திரம் சூழலுக்கு பரவச் செய்யப்படுவதில்லை. வெளியேற்றப்படுவதில்லை. சுகாதார மற்றும் பாதுகாப்பு முறையிலன்றி மலக்கழிவு குழிகள் அமைக்கப்படாமை போன்ற காரணங்களினாலும் இந்த வைரஸ் சூழலுக்கு வெளியேற்றப்படலாம். இதற்கு உதராணமாக செங்கமாலை (A HEPATITIS) வைரஸைக் குறிப்பிடலாம். இந்த வைரஸ் ஒருவரிலிருந்து மற்றவருக்குத் தொற்றுவது மலக்கழிவுகளின் மூலமாகும். வாய் மூலம் இவ்வைரஸ்கள் (FACE -ORAL ROUTE) உட்பிரவேசிக்கின்றன.

கொவிட் 19 சுவாசத் தொகுதிக்கு அண்மித்த வைரஸ் என்பதுடன் அது உணவு சமிபாட்டுத் தொகுதி வைரஸுடன் எவ்விதத்திலும் சமனானதோ அல்லது தொடர்புடையதோ அல்ல.

இதே வேளை கொரேனா வைரஸ் தொற்று காரணமாக மரணித்த ஒருவரின் உடலை அடக்கம் செய்யதால் மையவாடிகளின் மண், நீர் மற்றும் சூழல் மாசடைவதால் மக்களின் சுகாதாரத்துக்கு பாதிப்புகள் ஏற்படும் நிலைமை ஏற்படலாம் என ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானபீட பேராசிரியை மெத்திகா விதானகே எழுதிய கட்டுரையொன்றில் தெரிவித்துள்ளார். அவர் அதில் விஞ்ஞான ரீதியிலான காரணங்களை முன்வைப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கது. அதில் உள்ளடங்கியுள்ளவைகள் வாசகர்களை தவறான வழிக்கு இட்டுச் சென்றுள்ளதென்பதை கவலையுடன் குறிப்பிட்டாக வேண்டியுள்ளது.

பக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகள் நீர்வளங்கள் ஊடாக ஆறுகள், வாய்க்கால்கள் கிணறுகள் என்பவற்றில் கலந்து நீண்ட காலம் உயிர்வாழும் நிலைமை இருப்பதாக பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் 19 வைரஸ் கொழுப்பு படலத்தினால் மூடப்பட்ட SINGLE STRANDED RNA உடன் கூடிய வைரஸாகும். இந்த வைரஸை குளோரின் போன்ற சாதாரண கிருமி நீக்கி மூலம் அழித்துவிட முடியும். வீடுகளில் அடிக்கடி உபயோகப்படுத்தும் பிளீச்சிங் பவுடர் (BLEACHING POWDER) மூலமும் முடியும். சவர்க்காரம் மூலமும் கொழுப்புப் படிவத்தை இல்லாமற் செய்ய முடியும் என்பதால் வைரஸ் செயிலிழக்கும் நிலைமைக்கு உள்ளாகும்.

பல்வேறு காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி குளோரின் கலக்கப்படாத நீரில் கொரோனா வைரஸின் ஆயுட்காலம் சுமார் இரு தினங்களாகும். அசுத்த நீரில் 99.9 வீத வைரஸ் 2 முதல் 4 தினங்களுக்கு செயற்படும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2020 மார்ச் மாதம் உலக சுகாதார அமைப்பு வெளியீட்டுள்ள water sanitation, hygiene and water management for the COVID-19 எனும் அறிக்கையில் அசுத்தமான நீரின் மேல் கொவிட் 19 வைரஸ் தங்கியிருப்பதாக எவ்வித ஆதாரங்களுமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உணவு சமிபாட்டுத் தொகுதியை அண்மித்த வைரஸ் வெளியில் கொழுப்புப் படலமற்ற வைரஸாகும். இந்த வைரஸுக்கு அசுத்த நீரினுள் உயிர்வாழும் இயலாமை மற்றும் குறிப்பிட்ட தூரம் பயணிக்கும் இயலுமை இருக்கிறது. கொவிட் 19 எனும் வைரஸ் சுவாச தொகுதியை அண்மித்து செயற்படும் வைரஸ். அது உணவு சமிபாட்டுத் தொகுதியுடன் எவ்வித தொடர்பும் கொண்டதாக இல்லை என்பதை மீண்டும் குறிப்பிடாக வேண்டும். இந்த வைரஸ் தொற்று உள்ளவரிடமிருந்து சுவாசம் மூலமாகவே ஆரோக்கியமான ஒருவக்குத் தொற்றுகிறது.

இந்த வைரஸ் தொற்றினால் இறப்பவர்களின் உடல்கள் உரிய முறையில் சுற்றப்பட்டு எவ்வித கசிவுகளும் ஏற்படாத வகையில் சீல்வைக்கப்பட்ட பிளாஸ்ரிக். உடல்பைக் (BODY BAG)க்குள் உட்படுத்தப்பட்டதன் பின்பே அடக்கம் செய்யப்படுகிறது. என்றாலும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கொவிட் 19 நோயினால் மரணித்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும்போது உடல் body bagக்குள் உட்படுத்தப்படுவது தேவையற்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 வைரஸ் சுவாச வழியாக வெளிவரும் சுவாசம் மூலம் மாத்திரம் போஷிக்கப்படுவதால் உடல் அடக்கம் செய்யப்படுவதன் மூலம் பரவுவதற்கு வாய்ப்பில்லை.

மேலும் பேராசிரியை மெத்திகா கூறுவது போன்று அடக்கம் செய்யப்பட்ட உடல் உக்கிப்போகும் போது இரசாயன தாதுக்கள் சூழலுக்கு வெளிப்படுத்தப்படுவது சாதாரண நிகழ்வாகும். இந்நிகழ்வு கொவிட் 19 வைரஸினால் இறந்தவர்களின் உடல்களுக்கு மாத்திரம் உரித்தானதல்ல.

இந்த வைரஸ் நீர்வளங்களுடன் கலந்து கிணறுகளுக்குள் கசிவதற்கு இயலும் என விஞ்ஞான ரீதியில் உறுதியாகியுள்ளதாக மேலுமொரு கருத்து உருவாகியுள்ளது. பக்டீரியா போன்றல்லாத வைரஸ் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு உயிர்க்கலங்கள் அவசியமாகும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இறப்பின் பின்பு உடலின் உயிர்க்கலங்களின் ஒக்சிஜன் அளவு குறைகிறது. இந்நிலையில் வைரஸ் அதிகரிப்பது தடைப்படுகிறது.

அவ்வாறாயின் இந்நோய் பரவுவது பண்டங்களின் மீதான வைரஸினாலா என எவரும் கேள்வியெழுப்பலாம். தற்போதுதைய ஆய்வுகளின் தரவுகளின் படி இந்தவைரஸ் பித்தளை மீது 3 மணித்தியாலங்களும், கார்ட்போட் மீது 24 மணித்தியாலங்களும், பிளாஸ்ரிக் அல்லது உலோகம் மீது 2-3 நாட்கள் உயிருடன் இருக்கும். ஏதோ ஒரு வகையில் வைரஸ் மண்ணில் இருந்தாலும் பின்பு அழிந்துவிடும் அதே போன்று இந்த வைரஸ் சூரிய ஒளி, உஷ்ணம், மண்ணின் அமிலத்தன்மை போன்ற சூழல்காரணமாக அழிவுக்குள்ளாகிவிடும். அத்தோடு இறந்தவர்களின் உடல் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படுவதற்கு முன்பு தொற்று நீக்கிக்கு உட்படுத்தப்படுகிறது.

அப்படியென்றால் இந்த வைரஸ் உயிருடன் கசிவுக்குள்ளாகி சீல் வைக்கப்பட்டுள்ள BODY BAG ஊடாக வெளியேறி நீருடன் கலந்து நீரிலும் உயிருடன் இருந்து மீண்டும் அருகிலுள்ள மக்கள் பாவனைக்கு உபயோகப்படுத்தும் நீருடன் சேர்ந்து நோயைப் பரப்பும் தன்மை, நிலைமை இருக்குமா என்பதை இதை வாசிக்கும் வாசிக்கும் நீங்கள் தீர்மானிக்கலாம்.

மேலும் உலகம் சுகாதார ஸ்தானம் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, மலேசிய, அமெரிக்கா, ஈரான் அல்லது இந்தியா போன்ற நாடுகள் வெளியிட்டுள்ள வழிகாட்டல்களில் (GUIDE LINES) இந்நோயினால் இறந்தவர்களில் உடல்கள் தகனம் மாத்திரம் செய்யப்பட்ட வேண்டுமென குறிப்பிடப்பட்டில்லை. சீனாவில் தகனம் செய்யப்படவேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளமை விஞ்ஞான ரீதியிலான காரணங்களினால் அல்ல. அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் ஏற்பட்டால் நிலம் மற்றம் நேரம் என்பவற்றை முகாமைத்துவம் செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதனாலாகும். இது முகாமைத்துவத்துவத்துக்கான ஏற்பாடேயன்றி விஞ்ஞான ரீதியுடன் தொடர்பு பட்டதல்ல.

கொவிட் 19 நோயினால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய தீர்மானித்தால் அது அவதானம் மிக்க நடவடிக்கை என பேராசிரியை மெத்திகா விதானகே தெரிவித்துள்ள கருத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்குக் காரணம் சாதாரணமாக உடலொன்று அடக்கம் செய்யப்படுவது உரிய முறைகளின் படியாகும். உரிய தரத்துடனாகும். உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களின் படியாகும். அதன்படி நீர் கட்டமைப்புக்கு 30 – 50 மீற்றர் தூரத்தில் அடிமைந்துள்ள இடத்தில் அடக்கம் செய்யப்படவேண்டும். இவ்வாறான நிபந்தனை பூர்ரி செய்யப்பட்டாலேயே மையவாடியொன்றுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அத்தோடு அடக்கம் செய்யப்படும் புதைகுழி 6-8 அடி ஆழமுள்ளதாக இருக்க வேண்டும். புதைகுழியின் ஆழம் நீர் மட்டத்தினை விட 1.5 மீற்றர் உயரத்தில் அமைய வேண்டும்.

கொவிட் 19 வைரஸினால் இறந்த ஒருவரின் உடல் அடக்கம் செய்யப்படுவது அல்லது தகனச் செய்யப்படுவது கலாசாரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டிய தீர்மானமாகும். அன்றி ஒருமுறை அடுத்த முறையை விடவும் உயர்வானது அல்லது மேலானது எனக் கருதுவதற்கு எந்தவொரு விஞ்ஞான ரீதியான பின்புலமுமில்லை.

உலகெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் அக்கால மரணமடையும் இச்சந்தர்ப்பத்தில் மரணங்கள் தொடர்பாக நாம் இதனை விட மனிதாபிமான ரீதியில் நோக்கவேண்டும். இது உங்களதும் எனதும் கடமையாகும். இறுதிநேரத்திலாவது அவர்களுக்கு கெளரவமளிக்க வேண்டும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.