திகன வன்முறைகளுக்கு வயது இரண்டு

0 757

‘பள்­ளி­வா­சலை மினா­ராவை உள்­ள­டக்கி கட்­ட­மு­டி­யாது. அவ்­வாறு நிர்­மா­ணித்தால் மினா­ராவில் விமா­னங்கள் மோதி விபத்­துக்­குள்­ளாகும். மினா­ராவை நிர்­மா­ணிக்க சிவில் விமான சேவை திணைக்­க­ளத்­தி­ட­மி­ருந்து அனு­மதி பெற்று வாருங்கள் என்று கூறி நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை பள்­ளி­வாசல் கட்­டட வரை­ப­டத்­துக்கு அனு­மதி வழங்­காது எங்­களை அங்­கு­மிங்கும் அலைய வைத்­தார்கள். பள்­ளி­வாசல் நிர்­மா­ணிப்பை தாம­தத்­துள்­ளாக்­கி­னார்கள்’ என திகன வன்­மு­றை­களின் போது முழு­மை­யாக சேத­மாக்­கப்­பட்ட கெங்­கல்ல லாபீர் ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் தலைவர் எ.எஸ்.எம்.ரிஸ்வி எம்­மிடம் தெரி­வித்தார்.

2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி கண்டி– திகன பகு­தி­களில் முஸ்­லிம்கள் மீது அரங்­கேற்­றப்­பட்ட வன்­செ­யல்­க­ளுக்கு வயது இரண்டு பூர்த்­தி­யா­கி­யுள்­ளது. அப்­ப­கு­தி­களில் பாதிக்­கப்­பட்ட மக்கள் அந்தத் துய­ரங்­க­ளி­லி­ருந்து மீள­வில்லை. தொடர்ந்தும் அந்த நினை­வு­க­ளு­டனே நாட்­களை நகர்த்­திக்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அன்று நடை­பெற்ற வன்­செ­யல்­களின் பின்பும் தொடர்ந்த சவால்கள் அவர்­க­ளிடம் ஆயி­ரக்­க­ணக்கில் குடி­கொண்­டுள்­ளன. அவற்றில் ஒன்றே லாபீர் ஜும்ஆ பள்­ளி­வாசல் தலை­வ­ருக்­கேற்­பட்ட அனு­ப­வ­மாகும்.

கெங்­கல்ல – பள்­ளே­க­ல ஜும்ஆ பள்­ளி­வாசல் 1838 ஆம் ஆண்டு நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­தாகும். வன்­செ­யல்­க­ளின்­போது அது முழு­மை­யாக சேத­மாக்­கப்­பட்­டது. பள்­ளி­வா­சலை புனர்­நிர்­மாணம் செய்­வ­தற்கு முயற்­சித்­த­போது அரச அதி­கா­ரிகள் பல்­வேறு தடை­களை விதித்­தனர்.

பள்­ளி­வா­சலை புதி­தாக நிர்­மா­ணிப்­ப­தற்கு தயா­ரிக்­கப்­பட்ட கட்­டட வரை­படம் மெனிக்­ஹின்ன பிர­தேச செய­ல­கத்­தினால் அனு­ம­திக்­கப்­ப­டாது நகர அபி­வி­ருத்தி அதி­கார சபைக்கு அனுப்­பப்­பட்­டது. நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை அதி­கா­ரி­களே ‘பள்­ளி­வாசல் அமை­ய­வுள்ள மினா­ராவில் விமா­னங்கள் மோதலாம் எனக் கூறி நிரா­க­ரித்­த­துடன் சிவில் விமான சேவை திணைக்­க­ளத்தில் அனு­மதி பெற்று வரு­மாறு கூறினார்கள். பள்­ளி­வாசல் நிர்­வாகம் சிவில் விமான சேவை திணைக்­க­ளத்­துக்குச் சென்ற போது அங்­குள்ள அதி­கா­ரிகள் நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினால் பள்­ளி­வாசல் கட்­டட வரை­படம் நிரா­க­ரிக்­கப்­பட்­டமை குறித்து அதிர்ச்­சி­ய­டைந்­தனர். மினாரா 800 மீற்றர் உய­ரத்­திலே நிர்­மா­ணிக்க முடி­யாது என்று கூறிய அவர்கள் கட்­டட வரை­ப­டத்தில் மினாரா 100 அடி உய­ரத்­திலே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதால் அதற்­கான அனு­ம­தியும் வழங்­கினர்.இவ்­வாறு பள்­ளி­வா­சலை மீண்டும் நிர்­மா­ணிப்­ப­தற்கு இன­வாத அதி­கா­ரிகள் தாம­தங்­களை ஏற்­ப­டுத்தி வந்­தார்கள்.

சேதங்­களும், பாதிப்பும்

கண்டி மற்றும் திகன பகு­தி­களில் இடம்­பெற்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளினால் கண்டி மாவட்­டத்தில் 526 முஸ்லிம் குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டன. இக்­கு­டும்­பங்­களைச் சேர்ந்த 2635 பேர் நிர்க்­கதிக் குள்­ளாக்­கப்­பட்­டனர்.

நூற்­றுக்­க­ணக்­கான வீடுகள் வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­பட்டு தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டன. 259 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் 30 வீடுகள் முற்­றா­கவும் சேத­ம­டைந்­த­தாக தர­வுகள் தெரி­வித்­தன.

முஸ்­லிம்­களின் 37 கடைகள் முற்­றாக எரிக்­கப்­பட்­டன. 180 கடைகள் பகு­தி­ய­ளவில் சேதங்­க­ளுக்­குள்­ளா­கின. 80 க்கும் மேற்­பட்ட வாக­னங்கள் சேதப்­ப­டுத்­தப்­பட்­டன. இவற்றில் அரை­வா­சிக்கும் மேலா­னவை முற்­றாக எரிக்­கப்­பட்­டன.

17 பள்­ளி­வா­சல்கள் தாக்கி சேத­மாக்­கப்­பட்­டன. இவற்றில் ஒரு பள்­ளி­வாசல் கென்­கல்ல– பள்­ளேகால் ஜும்ஆ பள்­ளி­வாசல் முழு­மை­யாக சேத­மாக்­கப்­பட்­டது. இப்­பள்­ளி­வா­சலின் கட்­டட வரை­ப­டத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்த மினா­ராவின் வரை­ப­டமே விமான விபத்­துக்கு உள்­ளாகும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.
வன்­மு­றை­க­ளுக்குக் காரணம்

2018 பெப்­ர­வரி மாதம் 22 ஆம் திகதி முஸ்லிம் இளை­ஞர்­களால் தெல்­தெ­னிய அம்­பா­லயைச் சேர்ந்த லொறி சாரதி ஒருவர் தாக்­கப்­பட்டார். இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டையே ஏற்­பட்ட வாக்­கு­வா­தத்தின் கார­ண­மா­கவே அவர் தாக்­கப்­பட்டார்.

எச்.குமா­ர­சிறி (48) என்ற பெய­ரு­டைய அவர் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வந்த நிலையில கால­மானார். சம்­பந்­தப்­பட்ட நான்கு இளை­ஞர்­களும் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டனர்.

மார்ச் மாதம் 5 ஆம் திகதி சார­தியின் இறு­திக்­கி­ரி­யைகள் நடை­பெற்ற அன்றே முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்கள் கட்­ட­விழ்த்து விடப்­பட்டு அவை திக­ன­யி­லி­ருந்து கண்­டியின் ஏனைய பகு­தி­க­ளுக்கும் பர­வின.
உயி­ரி­ழப்­புகள்

வன்­செ­யலில் ஈடு­பட்ட பெரும்­பான்மை இனத்­த­வர்கள் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள், வீடுகள், பள்­ளி­வா­சல்கள், ஆகி­ய­வற்றை சேதப்­ப­டுத்­தி­னார்கள். சிலதை தீயிட்டு எரித்­தார்கள். தனது எரியும் வீட்டில் சிக்­கிக்­கொண்ட சம்­சுதீன் அப்துல் பாசித் (24) மூச்­சுத்­தி­ணறி உயி­ரி­ழந்தார்.

அன்­றைய தினம் கண்டி ஹீரஸ்­ஸ­க­லையைச் சேர்ந்த மெள­லவி சத­கத்­துல்லா அக்­கு­ற­ணைக்குச் சென்று பஸ் வண்­டியில் திரும்பிக் கொண்­டி­ருந்­த­போது மார்ச் 7 ஆம் திகதி இன­வா­தி­களால் தாக்­கப்­பட்டு சில மாதங்கள் சுய­நி­னை­வற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2018 டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி வபாத்­தானார்.

நஷ்­ட­ஈ­டுகள்

கண்டி திகன பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட சொத்­து­க­ளுக்கு நஷ்­ட­ஈடு கோரி 546 விண்­ணப்­பங்கள் முன்பு புனர்­வாழ்வு அதி­கார சபை என்று அழைக்­கப்­பட்ட தற்­போது இழப்­பீட்டு பணி­யகம் என அழைக்­கப்­பட்­டு­வரும் அரச நிறு­வ­னத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டன.

நஷ்­ட­ஈடு கோரி அனுப்பி வைக்­கப்­பட்ட விண்­ணப்­பங்கள்

பிர­தேச செய­லாளர் பிரிவுகளும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையும்
1. அக்­கு­றணை-35
2. பூஜா­பிட்­டிய -41
3. குண்­ட­சாலை-243
4. ஹேவா­ஹட்ட-01
5. பாத்­த­தும்­பறை-48
6. ஹாரிஸ்­பத்­துவ-134
7. யடி­நு­வர-07
8. கண்டி நகரம்
கங்­க­வட்ட கோரள-27
9. மினிப்பே-01
10. உடு­நு­வர-03
11. மெத­தும்­பற-05
12. உட­தும்­பற-01

மொத்தம்            546

210 மில்­லியன் ரூபா வழங்­கப்­பட்­டது

நஷ்­ட­ஈடு கோரி 546 விண்­ணப்­பங்கள் இழப்­பீட்டு பணி­ய­கத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவற்றில் 16 விண்­ணப்­பங்­களைத் தவிர ஏனை­ய­வற்­றுக்கு நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­பட்டு விட்­ட­தா­கவும் இழப்­பீட்டுப் பணி­ய­கத்தின் பிரதிப் பணிப்­பாளர் எஸ்.எம்.பதூர்தீன் தெரி­வித்­துள்ளார்.

நஷ்­ட­ஈ­டாக இது­வரை அர­சாங்கம் 210 மில்­லியன் ரூபா வழங்­கி­யுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

இது­வரை நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­டா­துள்ள விண்­ணப்­பங்கள் குறை­பா­டு­களைக் கொண்­ட­தா­கவும், தேவை­யான ஆவ­ணங்கள் இணைக்­கப்­ப­டா­மலும் இருப்­ப­த­னாலே தாமதம் ஏற்­பட்­டுள்­ளது. இவ்­விண்­ணப்­பங்­களை ஆராய்ந்து உரிய நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கு­வ­தற்கு அமைச்­ச­ர­வையின் அனு­ம­தி­யுடன் கமிட்­டி­யொன்று நிய­மிக்கப் பட்­டுள்­ளது. அக்­க­மிட்­டியின் சிபா­ரி­சு­க­ளுக்கு அமைய விரைவில் அவற்­றுக்­கான நஷ்­ட­ஈ­டுகள் வழங்­கப்­ப­டு­மெ­னவும் அவர் தெரி­வித்தார்.

எஞ்­சி­யுள்ள நஷ்­ட­ஈ­டு­களை வழங்­கு­வ­தற்கு நிதி ஒதுக்­கும்­படி திறை­சே­ரி­யிடம் விண்­ணப்­பித்­துள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

கெங்­க­ல்­ல பள்­ளி­வா­சலின் நஷ்டம் 2 கோடி 30 இலட்சம்

கெங்கல்ல– லாபீர் ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு ஏற்­பட்ட சேதம் 2 கோடி 30 இலட்சம் ரூபா என பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத் தலைவர் ஏ.எஸ்.எம்.ரிஸ்வி தெரி­வித்தார். பள்­ளி­வா­சலின் சேத­வி­ப­ரத்தை பொறி­யி­ய­லாளர் மூலம் மதிப்­பீடு செய்து 2 கோடி 30 இலட்சம் ரூபா கோரி இழப்­பீட்டு பணி­ய­கத்­துக்கு விண்­ணப்­பிக்­கப்­பட்­டது. உரிய ஆவ­ணங்­களும் இணைக்­கப்­பட்­டி­ருந்­தன.

ஆனால் இழப்­பீட்டுப் பணி­ய­கத்­தினால் எமது பள்­ளிக்கு நஷ்ட ஈடாக 6 இலட்­சத்து 25 ஆயிரம் ரூபாவே ஒதுக்­கப்­பட்­டது. ஒதுக்­கப்­பட்ட தொகை­யிலும் ஒரு இலட்­சத்து 35 ஆயிரம் ரூபாவே வழங்­கப்­பட்­டுள்­ளது. நாம் பள்­ளி­வாசல் பதிவு, பள்­ளி­வாசல் காணியின் உறுதி என்­பன உட்­பட தேவை­யான அனைத்து ஆவ­ணங்­களை வழங்­கியும் எமக்கு உரிய நஷ்ட ஈடு வழங்­கப்­ப­ட­வில்லை. இன­வாத அதி­கா­ரி­களின் செயலே இதற்குக் காரணம்

பள்­ளி­வாசல் மற்றும் நிர்­மாணப் பணிகள் தற்­போது நடை­பெற்று வரு­கின்­றன. 3 மாடி­களைக் கொண்­ட­தாக அமை­ய­வுள்­ளது. தற்­போது கீழ்­மாடி நிர்­மாணப் பணிகள் மாத்­தி­ரமே பூர்த்­தி­யாகும் நிலையில் உள்­ளது. திக­னயில் நாம் அமைப்­பொன்­றினை நிறுவி தும்­பறைப் பகுதி மக்­களின் உத­வி­யுடன் நிர்­மாணப் பணிகள் நடை­பெற்று வரு­கின்­றன. தற்­போது வரை நாம் ஒரு­கோடி ரூபா அளவில் செல­விட்­டி­ருக்­கிறோம் என்றும் அவர் கூறினார்.

பிரதி பணிப்­பா­ளரின் மறுப்பு

கெங்­கல்ல – பள்­ளேகால லாபீர் ஜும்ஆ பள்­ளி­வாசல் வன்­செ­யல்­களின் போது சேத­மாக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து பள்­ளி­வா­சலை முழு­மை­யாக நிர்­மூ­ல­மாக்­கி­யதன் பின்பே சேத­வி­பரம் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­க­ளால் மதிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இத­னா­லேயே உண்­மை­யான சேத விபரம் 6 இலட்­சத்து 25 ஆயிரம் ரூபா­வாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது என இழப்­பீட்டுப் பணி­ய­கத்தின் பிரதிப் பணிப்­பாளர் எஸ்.எம்.பதூர்தீன் தெரி­வித்தார்.

சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் தண்­டிக்­கப்­பட வேண்டும்

திகன வன்­மு­றை­க­ளுடன் சம்­பந்­தப்­பட்ட சந்­தேக நபர்கள் இனங்­கா­ணப்­பட்டு கைது செய்­யப்­பட்­டார்கள். சிறிது காலம் அவர்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டு பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளார்கள். அவர்­க­ளுக்கு எதி­ரான வழக்­குகள் விசா­ர­ணையின் கீழ் உள்­ளன. அவ்­வ­ழக்­குகள் துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண்டும். வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுக்குப் பொறுப்­பா­ன­வர்கள் அவர்கள் எந்தச் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும் தண்­டிக்­கப்­பட வேண்டும்.

வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும், சொத்­து­க­ளுக்கும் நஷ்ட ஈடு வழங்­கு­வ­துடன் மாத்­திரம் அர­சாங்கம் மெள­னித்­து­விடக் கூடாது. அப்­பி­ர­தே­சங்­களில் நல்­லு­றவும் நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்பட வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அவ்வாறு தண்டிக்கப்பட்டாலே பாதிக்கப்பட்டவர்கள் ஆறுதலடைவார்கள்.

அயல் நாட்டிலும் வன்முறைகள்

அண்மைக்காலமாக இலங்கையில் மாத்திரமல்ல அயல் நாடான இந்தியாவிலும் முஸ்லிம்களை இலக்கு வைத்து வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. கண்டி – திகன வன்செயல்கள் போன்றதொரு சம்பவம் அண்மையில் இந்தியாவின் டில்லியில் பல பகுதிகளில் நடந்தேறியுள்ளது. அங்கு நடந்தேறிய வன்முறைகளினால் 48 பேர் பலியாகியுள்ளார்கள். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நூற்றுக்கணக்கான வீடுகள், வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய முஸ்லிம்களே இனவாதிகளால் பலியெடுக்கப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அரசாங்கம் இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தையும், நல்லுறவையும் பலப்படுத்த வேண்டும். நாடு பொதுத் தேர்தலொன்றினை எதிர்நோக்கியுள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசு அதிக கரிசனை கொள்ளவேண்டும்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.