பலஸ்தீன் தொடர்பான ட்ரம்பின் சமாதான திட்டமும் இலங்கையின் நிலைப்பாடும்; கொழும்பில் கலந்துரையாடல்

0 1,248

பலஸ்­தீன ஒரு­மைப்­பாட்­டுக்­கான இலங்கைக் குழுவும் உல­க­ளா­விய நீதிக்­கான ஊட­க­வி­ய­லாளர் அமைப்பும் இணைந்து நடாத்­திய ‘ பலஸ்­தீன சமா­தான வரை­படம் தொடர்பில் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் முன்­வைத்த திட்­டமும் அது தொடர்­பான இலங்­கையின் நிலைப்­பாடும்‘ எனும் தலைப்­பி­லான கலந்­து­ரை­யாடல் நிகழ்வு நேற்று முன்­தினம் கொழும்­பி­லுள்ள இலங்கை மன்றக் கல்­லூ­ரியில் இடம்­பெற்­றது.

இந்நிகழ்வில் இலங்­கைக்­கான பலஸ்­தீன தூதுவர் தார் ஹம்­தல்லா ஸைத் சிறப்­புரை நிகழ்த்­தினார். அத்­துடன் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இலங்கை – பலஸ்தீன் பாரா­ளு­மன்ற நட்­பு­றவுச் சங்­கத்தின் செய­லா­ள­ரு­மான பிமல் ரத்­நா­யக்க, ஐ.நா.வுக்­கான முன்னாள் இலங்கைத் தூதுவர் பேரா­சி­ரியர் தயான் ஜய­தி­லக்க மற்றும் சிரேஷ்ட ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளான மஹிந்த ஹத்­தக, ஹனா இப்­ராஹிம் ஆகியோரும் இதன்போது கருத்துரை வழங்கினர். (படங்கள்: Knowledge Box)-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.