டில்­லி முஸ்­லிம்­களின் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட வேண்­டும்

0 1,294

இந்­தி­யாவின் டில்­லி­யி­லுள்ள பல்­வேறு பிர­தே­சங்­க­ளிலும் முஸ்­லிம்­களை இலக்கு வைத்து கட்­ட­விழ்க்­கப்­பட்ட வன்­மு­றை­களில் இது­வரை 48 பேர் வரை உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 200 க்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.

நூற்றுக் கணக்­கான வீடு­களும் வாக­னங்­களும் தீ வைத்து எரிக்­கப்­பட்­டுள்­ளன. பல பள்­ளி­வா­சல்­களும் முற்­றாக எரித்து சேத­மாக்­கப்­பட்­டுள்­ளன.

பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கு மிக அண்­மித்த பிர­தே­சங்­க­ளி­லேயே இந்த வன்­மு­றைகள் நிகழ்ந்­துள்­ளன. சில இடங்­களில் பொலிசார் நடத்­திய தாக்­கு­த­லிலும் சிலர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இலங்­கையில் கடந்த சில வரு­டங்­க­ளாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வாத சக்­தி­களால் திட்­ட­மிட்டு முன்­னெ­டுக்­கப்­பட்ட வன்­மு­றைகள் போன்றே டில்­லி­யிலும் முஸ்­லிம்கள் இலக்கு வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

பார­தீய ஜனதா கட்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தினால் கடந்த வருடம் கொண்டு வரப்­பட்ட குடி­யு­ரிமைத் திருத்த சட்­டத்தை எதிர்த்து முஸ்­லிம்கள் நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் போராடி வரு­கின்­றனர். குறிப்­பாக வர­லாற்றில் என்­று­மில்­லா­த­வாறு முஸ்லிம் பெண்கள் இப் போராட்­டங்­களில் பங்­கேற்­றுள்­ளனர். இர­வி­ர­வாக குழந்­தை­க­ளையும் வைத்துக் கொண்டு வீதியில் அமர்ந்து இம் மக்கள் போராடி வரு­கின்­றனர். இவ்­வாறு போரா­டு­வோ­ருக்கு எதி­ராக, ஆளும் கட்­சியின் ஆத­ர­வா­ளர்­களே திட்­ட­மிட்ட வகையில் அண்­மையில் வன்­மு­றை­களைக் கட்­ட­விழ்த்­து­விட்­டனர். அதுவும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் இந்­தி­யாவில் தங்­கி­யி­ருந்த நாட்­க­ளி­லேயே இந்த வன்­மு­றைகள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டன.

இதன் பின்­ன­ணியில் பி.ஜே.பி. அர­சி­யல்­வா­திகள் பலர் இருப்­ப­தாக இந்­திய ஊட­கங்கள் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளன. சர்­வ­தேச நாடு­களும் இந்த வன்­மு­றை­களைக் கண்­டித்­துள்­ள­துடன் இதனை முடி­வுக்குக் கொண்டு வரு­மாறு இந்­திய அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

”டெல்லி வன்­முறைச் சம்­ப­வத்தில் அதிகம் பாதிக்­கப்­பட்­டது முஸ்­லிம்கள் தான். ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் பாது­காப்­புக்­காக இடம்­பெ­யர்ந்­துள்­ளமை கவலை அளிக்­கி­றது. இவ்­வா­றான வன்­முறை இனி இந்­தி­யாவில் நிக­ழக்­கூ­டாது‘‘ என ஈரான் வெளி­யு­ற­வுத்­துறை அமைச்சர் ஜவாத் சரீப் காட்­ட­மாகக் குறிப்­பிட்­டுள்ளார்.

‘‘மூன்று நாட்கள் நடை­பெற்ற வன்­மு­றையில் 200க்கும் மேற்­பட்டோர் காயம் அடைந்­துள்­ளனர், புதி­தாக அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள குடி­யு­ரிமை சட்ட திருத்­தத்தின் ஆத­ர­வா­ளர்கள் மற்றும் எதிர்ப்­பா­ளர்­க­ளுக்கு இடையே இந்த வன்­முறை ஏற்­பட்­டுள்­ளது. மேலும் இந்த குடி­யு­ரிமை சட்ட திருத்தம் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­னது என்றும் விமர்­ச­கர்கள் சிலர் கூறு­கின்­றனர். இந்து மற்றும் முஸ்லிம் ஆகிய இரு மதத்தை சேர்ந்­த­வர்­களும் டெல்லி வன்­மு­றையில் உயி­ரி­ழந்­துள்­ளனர், பலர் காயம் அடைந்­துள்­ளனர் என்று கூறப்­பட்­டாலும், இதில் பெரிதும் பாதிக்­கப்­பட்­டது முஸ்­லிம்கள் தான். ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் இடம் பெயர்ந்­துள்­ளனர்” என்று அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

இதற்­கி­டையில் இந்த வன்­மு­றை­க­ளுக்குக் கார­ண­மான குடி­யு­ரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பில் இந்­தி­யா­வுக்கு எதி­ரான வழக்­கு­களில் ஐக்­கிய நாடுகள் சபையும் தன்னை இணைத்துக் கொண்­டுள்­ளது. இந்­திய உயர்­நீ­தி­மன்­றத்தில் குடி­யு­ரிமைத் திருத்தச் சட்­டத்­துக்கு எதி­ரான வழக்­கு­களில் தங்­க­ளையும் இணைத்துக் கொள்­ளு­மாறு உச்ச நீதி­மன்­றத்தில் ஐ.நா. மனித உரி­மைகள் ஆணை­யகம் மனு தாக்கல் செய்­ய­வுள்­ள­தாக அறிவித்துள்ளமை இந்த விடயத்தின் பாரதூரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அந்த வகையில் சர்வதேசத்தின் கண்டனத்தையும் சம்பாதித்துள்ள இந்த வன்முறைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்வகைத்தன்மை கொண்ட நாடு எனும் பெயர் பெற்ற இந்தியாவின் தனது நற்பெயரைப் பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

மேலும் டில்­லி­யிலும் இந்­தி­யாவின் ஏனைய பகு­தி­க­ளிலும் வாழும் முஸ்­லிம்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்­ட­யீடு வழங்­கு­வ­துடன் இடம்­பெ­யர்ந்தோர் உடன் மீளத்­தி­ரும்­பவும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்பட வேண்டும் என வலி­யு­றுத்த விரும்­பு­கி­றோம்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.