தமிழ்-முஸ்லிம் மக்களின் ஆதரவினை முழுமையாக பெற்றுக்கொள்வோம்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க

0 851

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன, ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த மாவட்­டங்­களில் பொதுத்­தேர்­தலில் அமோக பெற்­றி­பெறும். தமிழ்–முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை முழு­மை­யாகக் கூட்­ட­ணி­யி­னூ­டாகப் பெற்­றுக்­கொள்ள முடியும். ஐக்­கிய தேசியக் கட்சி பொதுத் தேர்­தலில் எந்த சின்­னத்தில் போட்­டி­யிட்­டாலும் இம்­முறை படு­தோல்­வி­ய­டை­யு­மென முன்னாள் இரா­ஜாங்க அமைச்சர் எஸ். பி. திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் காரி­யா­ல­யத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்­து­ரைக்­கை­யிலே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத்­தேர்­த­லுக்கு செல்­வ­தற்­கான திகதி குறிக்­கப்­பட்­டுள்­ளது. பொது­ஜன பெர­முன தலை­மையில் தேர்­த­லுக்­கான செயற்­றிட்­டங்கள் நாடு தழு­விய ரீதியில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இடம்­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் நுவ­ரெ­லியா, அம்­பாறை மற்றும் திரு­கோ­ண­மலை ஆகிய மாவட்­டங்­களில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­­ன வெற்றி பெற­வில்லை. அதற்குப் பல்­வேறு அர­சியல் கார­ணிகள் அப்­போது செல்­வாக்கு செலுத்­தின.

ஜனா­தி­பதி தேர்­தலில் தோல்­வி­ய­டைந்த மாவட்­டங்­களில் இம்­முறை எம்மால் வெற்­றி­பெற முடியும். நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 102090 வாக்­கு­க­ளினால் பொது­ஜன பெர­முன தோல்­வி­ய­டைந்­தது. இம்­முறை இந்­நி­லைமை முழு­மை­யாக மாற்­றி­ய­மைக்­கப்­படும். நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் சிங்­க­ள­வர்கள் 39 சத­வீ­த­மா­கவும், தமி­ழர்கள் 60 சத­வீ­த­மா­கவும், முஸ்­லிம்கள் 1 சத­வீ­த­மா­கவும் வாழ்­கின்­றார்கள். வலப்­ப­னையில் இல­கு­வாக வெற்­றி­பெற முடியும்.

2010ஆம் ஆண்டு காபந்து பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­ட­போது நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் தோல்­யி­டைந்தார். அதே வருடம் இடம்பெற்ற பொதுத்­தேர்­த­லிலும், 2011ஆம் ஆண்டு இடம்­பெற்ற உள்­ளூ­ராட்சித் தேர்­த­லிலும் வெற்­றி­பெற்றார். இருப்­பினும் இடம்­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் தோல்­வி­ய­டைந்­தது.

நுவெ­ரெ­லியா மாவட்­டத்தில் வெற்றி பெறு­வ­தற்­கான அனைத்து திட்­டங்­களும் வகுக்­கப்­பட்­டுள்­ளன. திரு­கோ­ண­மலை, அம்­பாறை ஆகிய மாவட்­டங்­க­ளிலும் இம்­முறை வெற்­றி­பெற முடியும். ஒட்­டு­மொத்­த­மாக 150 ஆச­னங்­களை பெற்­றுக்­கொள்ள முடியும்.

ஐக்­கிய தேசியக் கட்சிக்கு ஜனாதிபதித் தேர்தலில் கிடைக்கப்பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பொதுத்தேர்தலில் 95 ஆசனங்கள் மாத்திரமே கிடைக்கப்பெறும். ஐக்கிய தேசியக் கட்சி தனித்துப் போட்டியிடுவதால் 63 – 65 வரையான ஆசனங்கள் மாத்திரமே கிடைக்கப்பெறும் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.