மஹர சிறைச்சாலை வளாகத்தினுள் இயங்கி வந்த ஜும்ஆ பள்ளிவாசல் முஸ்லிம்களுக்குத் தடைசெய்யப்பட்டு மஹர சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் ஓய்வு அறையாக மாற்றப்பட்டுள்ளதால் இப்பகுதியில் வாழும் சுமார் 290 குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லிம்கள் தங்களது சமயக் கடமைகளை நிறைவேற்றுவதில் அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
அப்பகுதியில் நேற்று முன்தினம் நிகழ்ந்த ஜனாஸா தொழுகையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டனர்.
ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான மக்கள் மையவாடியிலே ஜனாஸா தொழுகையை நிறைவேற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக பள்ளிவாசல் நிர்வாக சபைத்தலைவர் துவான் மொஹமட் ஹாபிழ் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற கடற்படை உத்தியோகத்தர் மர்ஹும் ரி.இஸட் பாகஸின் ஜனாஸா தொழுகை மையவாடியிலே நடாத்தப்பட்டது. முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பள்ளிவாசல் விவகாரத்துக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தர வேண்டுமென பள்ளிவாசல் நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்