கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக உம்ரா கடமைக்காக சவூதி அரேபியாவுக்குள் நுழைவதை அந் நாட்டு அரசாங்கம் தடை செய்ததைத் தொடர்ந்து, உம்ரா கட்டணங்களை மீளளிப்பு செய்ய சவூதி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன் இதற்காக இலத்திரனியல் முறைமையொன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
உம்ரா விசா மற்றும் ஏனைய சேவைகளுக்காக கட்டணம் செலுத்தி, யாத்திரையை மேற்கொள்ள முடியாதுள்ளவர்கள் தமது உள்நாட்டு முகவர்கள் மூலமாக பணத்தை மீளப் பெற்றுக்கொள்ள முடியுமென சவூதி ஹஜ் மற்றும் உம்ரா விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை 00966920002814 எனும் தொலைபேசி இலக்கம் வாயிலாகவோ அல்லது mohcc@Hajj.gov.sa எனும் மின்னஞ்சல் முகவரியூடாகவோ தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.
கொரோனா வைரஸ் அல்லது COVID –19 பரவாமல் தடுப்பதற்காக கடந்த வியாழக்கிழமை முதல் உம்ரா கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்கள் வருகை தருவதற்கு சவூதி அரேபியா தற்காலிக தடையை விதித்திருந்தது.-Vidivelli
- எம்.ஐ.அப்துல் நஸார்