தேர்தலில் சஜித் தலைமையிலான கூட்டணியில் களமிறங்குகிறோம்

சென்னையில் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

0 816

நடை­பெ­ற­வுள்ள பொதுத் தேர்­தலில் சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான கூட்­ட­ணியில் நாம் கள­மி­றங்­க­வுள்ளோம். இக்­கூட்­டணி ஆளும் கட்­சிக்குப் பெரும் சவா­லாக அமை­யு­மென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்­வ­தற்­காக நேற்று பிற்­பகல் சென்னை விமானம் நிலை­யத்தை வந்­த­டைந்த அவர், ஊட­கங்­க­ளுக்குப் பேட்­டி­ய­ளிக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் கருத்து வெளி­யி­டு­கையில், இந்­தி­யாவில் குடி­யு­ரிமைச் சட்டம் குறித்து போராட்டம் நடை­பெ­று­கி­றது. இந்த போராட்டம் மிகவும் கவ­லைக்­கு­ரி­யது. ஒரு சட்­ட­மூலம் நிறை­வே­றி­யி­ருப்­பது தொடர்­பாக தொப்­புள்­கொடி உற­வு­க­ளாக இலங்­கையில் வாழ்ந்து வரும் நாங்­களும் கவலை கொள்­கிறோம். இப்­போ­ராட்டம் வெற்­றி­பெற வாழ்த்­து­கிறேன் என்றார். அத்­துடன் இலங்கை விவ­கா­ரங்கள் குறித்து செய்­தி­யா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கும் அவர் பதி­ல­ளித்தார்.

கேள்வி: இலங்­கையில் தேசிய கீதத்தை தமிழில் பாட தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது குறித்து என்ன கூறு­கி­றீர்கள்?

பதில்: ஒட்­டு­மொத்­த­மாக தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது என்­பது பிழை­யான தகவல். உத்­தி­யோ­க­பூர்­வ­மான நிகழ்ச்­சி­களில் சிங்­கள மொழியில் பாடு­வ­துடன் தமிழ் மொழி­யிலும் தேசிய கீதம் பாடு­வதை முந்­தைய அரசு இருந்த கால­கட்­டத்தில் நாங்கள் வழ­மை­யாகக் கொண்­டி­ருந்தோம். அந்த வழ­மையை இப்­போ­தைய அரசு மாற்றி, சிங்­க­ளத்தில் மட்­டுமே தேசிய கீதம் பாட வேண்­டு­மென்று உத்­த­ர­விட்­டி­ருக்­கி­றது. நல்­லி­ணக்கம் கருதிக் கொண்­டு­வ­ரப்­பட்ட அந்த வழமை தற்­போது மாற்­றப்­பட்­டுள்­ளதால் அது தமி­ழர்­களின் மனதைப் புண்­ப­டுத்தி இருக்­கி­றது. அதுவே தற்­போது இலங்­கையில் சர்ச்­சைக்­கு­ரிய விஷ­ய­மாக இருந்­து­கொண்­டி­ருக்­கி­றது.

கேள்வி: இலங்­கையில் போர்க்­குற்றம் தொடர்­பாக இது­வரை விசா­ரணை நடை­பெ­ற­வில்­லை­யென ஐக்­கிய நாடுகள் சபை பொதுச் செய­லாளர் கவலை தெரி­வித்­தி­ருக்­கிறார். இனி­யேனும் அந்த விசா­ரணை நடை­பெ­றுமா?

பதில்: இலங்­கையில் தற்­போ­துள்ள அரசு ஐக்­கிய நாடுகள் சபை­யுடன் கூட்­டாக நிறை­வேற்­றிய பிரே­ர­ணையில் தமது இசைவைத் திரும்பப் பெற்­றி­ருக்­கி­றார்கள். இந்த நட­வ­டிக்கை சர்­வ­தேச மட்­டத்தில் இலங்கை அரசு எடுத்துவரும் நல்­லெண்ண நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாரிய பாதிப்பை ஏற்­ப­டுத்தி விடுமோ என்ற அச்சம் நில­வு­கி­றது. இலங்­கையில் நடை­பெற்ற போரின்­போது போர்க்­குற்­றங்கள் நடை­பெற்­ற­னவா இல்­லையா என்­பதில் சர்­வ­தேச அர­சியல் தலை­யீடு எதுவும் இருக்க கூடாது என்­பது தற்­போது இலங்­கையை ஆட்சி செய்­ப­வர்­களின் நெடுநாள் கொள்­கை­யாக உள்­ளது. எனவே இது குறித்த சர்ச்சை சர்­வ­தேச அளவில் இன்னும் விரி­வ­டையும் வாய்ப்­பி­ருக்­கி­றது.

கேள்வி: இலங்­கை­யி­லுள்ள கிறிஸ்­தவ தேவா­ல­யங்­களில் குண்­டு­வெ­டிப்பு தாக்­குதல் நடை­பெற்ற பிறகு அங்­கி­ருக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கான பாது­காப்பில் பிரச்­சினை நில­வி­யதே? அதன் தற்­போ­தைய நிலை என்ன?

பதில்: அந்தப் பதற்றம் தற்­போது ஓர­ள­வுக்கு தணிந்­தி­ருக்­கி­றது என்று இருந்­தாலும், ஆத்­தி­ர­மூட்டும் பேச்­சுக்­களைத் தொடர்ந்தும் பொது­வெ­ளியில் சில அர­சி­யல்­வா­திகள் பேசிக் கொண்­டி­ருப்­பதால், அது மனங்­களை வேறு­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கி­றது. இந்த நிலை தொட­ராமல் இருக்க வேண்டும் என்­பதே எமது அவா.

கேள்வி: பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தக­வல்கள் கூறு­கின்­றன. உங்­க­ளது தேர்தல் நிலைப்­பாடு எப்­படி இருக்கும்?

பதில்: திங்­கட்­கி­ழமை நள்­ளி­ர­வுடன் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­டு­கி­றது என்­பது உறு­தி­யான தகவல். கடந்த தேர்­தலின் போது ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட சஜித் பிரே­ம­தாச தலை­மை­யி­லான கூட்­ட­ணியில் தொடர்ந்து நாங்கள் களம் காண்­கின்றோம். இக்­கூட்­டணி ஆளும் கட்­சிக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்ற நிலையே தற்போது உள்ளது என்றார்.

சென்னை விமான நிலையத் திற்கு வருகை தந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொஹிதீன், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஆசாத், மாவட்ட சிறுபான்மை இணைச் செயலாளர் இப்ராஹிம் கனி ஆகியோர் வரவேற்றனர்.-Vidivelli

  • திருச்சி சாகுல் ஹமீத்

Leave A Reply

Your email address will not be published.