அனு­ம­திக்­கப்­பட்ட முகவர் ஊடாக மட்­டுமே ஹஜ்ஜுக்கு செல்­ல­லாம்

திணைக்கள பணிப்பாளர் அஷ்ரப் தெரிவிப்பு

0 779

இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை மேற்­கொள்­ள­வுள்ள ஹஜ் யாத்­தி­ரி­கர்கள், திணைக்­க­ளத்­தினால் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்ள முகவர் நிலை­யங்­க­ளி­னூ­டா­கவே பயண ஏற்­பா­டு­களை மேற்­கொள்­ள­மு­டியும். தங்கள் பய­ணத்தை முகவர் நிலை­யங்கள் ஊடாக உறு­திப்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்­காக கட­வுச்­சீட்டு ஒப்­ப­டைக்­கப்­பட்டால் கடவுச் சீட்டு ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­தற்­கான கடிதம் ஒன்றில் கையொப்பம் பெற்றுக் கொள்­ளப்­பட்டு அதன் பிரதி திணைக்­க­ளத்­துக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வேண்டும் என ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் அறி­வு­றுத்­தி­யுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்ளதாவது, ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்­களைப் பேணு­வ­தற்­கா­கவே இப்­பு­திய வழி­மு­றைகள் இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களில் சேர்க்­கப்­பட்­டுள்­ளன. ஹஜ் முகவர் நிலை­யங்கள் இந்தப் பணியை புனித பணி­யாக மேற்­கொள்ள வேண்டும். கடந்­த­கா­லங்கள் இடம்­பெற்ற தவ­றான சம்­ப­வங்­களைத் தவிர்ப்­ப­தற்­கா­கவே இவ் ஏற்­பா­டுகளில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

ஓரிரு தினங்­களில் இவ்­வ­ருடம் அனு­மதி பெற்­றுள்ள முகவர் நிலை­யங்­களின் பெயர் விப­ரங்­களைத் திணைக்­களம் வெளி­யி­ட­வுள்­ளது. திணைக்­க­ளத்தின் இணை­ய­த­ளத்­திலும், பத்­தி­ரி­கை­க­ளிலும் விபரங்கள் வெளியிடப்படும்.
திணைக்களம் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்களுடன் ஓரிரு தினங்களில் உடன்படிக்கையொன்றிலும் கைச்சாத்திடவுள்ளது என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.