சாய்ந்தமருது சுயேட்சை அணி தேசிய காங்கிரஸுடன் இணைவு

0 705

கல்­முனை மாந­கர சபையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சாய்ந்­த­ம­ருது சுயேச்சை அணி­யினர் தேசிய காங்­கி­ர­ஸுடன் இணைந்து கொண்­டுள்­ளனர்.
அத்­துடன் பொதுத் தேர்­தலில் தேசிய காங்­கிரஸ் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ஏ.எல்.எம்.அதா­வுல்­லாஹ்வை ஆத­ரிப்­ப­துடன், அக்­கட்சி சார்பில் ஓய்­வு­பெற்ற சிவில் நிர்­வாக அதி­காரி ஏ.எல்.எம்.சலீமை கள­மி­றக்­கவும் சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வாசல் தலை­மை­யி­லான சுயேச்சை அணி­யினர் தீர்­மா­னித்­துள்­ளனர்.

நேற்­றைய தினம் சாய்ந்­த­ம­ருதில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போதே இது­கு­றித்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­பட்­டது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்­பெற்ற கல்­முனை மாநா­கர சபைத் தேர்­தலில் சாய்ந்­த­ம­ருது பெரிய பள்­ளி­வாசல் வழி­காட்­டலில் சுயேச்சை அணி தோடம்­பழ சின்­னத்தில் போட்­டி­யிட்­டது. சாய்ந்­த­ம­ருதில் 6 வட்டாரங்களில் வெற்றிபெற்றதுடன் பட்டியல் மூலமாக 3 ஆசனங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • றிப்தி அலி

Leave A Reply

Your email address will not be published.