இன்று நள்ளிரவு: பாராளுமன்றம் கலைப்பு

0 708

அர­சி­ய­ல­மைப்பில் ஜனா­தி­ப­திக்கு காணப்­படும் அதி­கா­ரங்­க­ளின்­படி இன்று திங்­கட்­கி­ழமை நள்­ளி­ர­வுடன் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டு­கின்­றது. பாரா­ளு­மன்றம் கலைப்பு தொடர்­பி­லான வர்த்­த­மானி அறி­வித்தல் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவினால் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ள­தென இரா­ஜாங்க அமைச்சர் சி.பி. ரத்­நா­யக தெரி­வித்­துள்ளார்.

பாரா­ளு­மன்றம் இன்று கலைக்­கப்­பட்டால் எதிர்­வரும் ஏப்ரல் மாதம் இறு­திப்­ப­கு­தியில் பொதுத் தேர்தல் நடத்­தப்­ப­டு­மென்று ஆளுந்­த­ரப்­பினர் தெரி­வித்­துள்­ளனர்.

எவ்­வா­றி­ருப்­பினும் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டு பொதுத் தேர்­தலை நடத்­து­வ­தற்கு 60 நாட்கள் கால அவ­காசம் தேவைப்­படும் என்று சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.

அத்­தோடு 10 – 15 க்கு இடைப்­பட்ட கட்­சிகள் தேர்­தலில் போட்­டி­யி­டு­மானால் சுமார் 500 மில்­லியன் செல­வாகும் என்றும் போட்­டி­யிடும் கட்­சி­களின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கு­மானால் தேர்தல் செல­வு­களும் அதி­க­ரிக்கும் என்றும் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.

இன்­றைய தினம் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் பட்­சத்தில் மே முதல் வாரத்தில் தேர்­தலை நடத்­தக்­கூ­டி­ய­தாக இருக்கும் என்றும் எனினும், மே மாதம் முதலாம் திகதி தொழி­லாளர் தினம் கொண்­டா­டப்­படும் என்­பதால் அன்­றைய தினம் தேர்தல் நடத்­தப்­பட மாட்­டாது என்றும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

எவ்­வா­றி­ருப்­பினும் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­ட­தற்­கான உத்தியோகபூர்வ வர்த்தமானி வெளியானதன் பின்னரே வேட்புமனு தாக்கல், தேர்தலுக்கான தினம் என்பன உறுதியாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.