பொதுத் தேர்தலில் முஸ்லிம்கள்: பிரதான கட்சிகளுடன் இணங்குவதே நன்மை

ஜம்இய்யத்துல் உலமா பிரதிநிதிகளிடம் மெல்கம் ரஞ்சித் வேண்டுகோள்

0 983

முஸ்லிம் சமூகம் எதிர்­வரும் தேர்­தலில் பிரிந்து நிற்­காமல் பிர­தான கட்­சி­க­ளுடன் இணங்­கிப்­போ­வதே நன்மை பயக்கும் எனக்­க­ரு­து­கிறேன். உலமா சபையும் இது விட­யத்தில் முயற்­சி­களை மேற்­கொள்­ள­வேண்டும். இது விட­யத்தில் உலமா சபை மக்­களைத் தெளி­வு­ப­டுத்த வேண்டும் என பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் தன்னைச் சந்­தித்த அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை பிர­தி­நி­தி­களை வேண்டிக் கொண்டார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம்­பெற்ற உயி­ரித்த ஞாயிறு தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்கள் வெளி­நாட்டுச் சக்­தி­க­ளினால் திட்­ட­மிட்டு மேற்­கொள்ளப் பட்­ட­வை­யாகும். இத்­தாக்­கு­தல்­களே முஸ்லிம் சமூ­கத்தை தலை­கு­னிய வைத்­துள்­ளது என்றும் அவர் கூறினார்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­தி­க­ளுக்கும் பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கைக்கும் இடையில் சுமு­க­மான சந்­திப்­பொன்று நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை மாலை பேரா­யரின் கொழும்­பி­லுள்ள உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் இடம்­பெற்­றது. மஃ­ரிப்­பையும் கடந்து இடம்­பெற்ற இச்­சந்­திப்­பின்­போது முஸ்லிம் சமூ­கத்தின் சம­கால பிரச்­சி­னைகள், சவால்கள் மற்றும் ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்­ன­ரான நிலை­மைகள், அர­சியல் கள­நி­லைமை என்­பன குறித்து கருத்துப் பரி­மா­றிக்­கொள்­ளப்­பட்­டன. மஃரிப் தொழு­கையும் பேரா­யரின் இல்­லத்­தி­லேயே மேற்­கொள்­ளப்­பட்­டது. அதற்­கான ஏற்­பா­டுகள் பேரா­ய­ரினால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

முஸ்லிம் சமூ­கத்தின் பெயரால் மேற்­கொள்­ளப்­பட்ட உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் கவ­லையில் ஆழ்ந்­தி­ருப்­ப­தா­கவும் தாக்­கு­தல்­களில் பாதிக்­கப்­பட்ட மக்­களை நேரில் சந்­தித்து அவர்­க­ளுக்கு ஆறுதல் தெரி­விக்க வேண்டும். அதற்­கான ஏற்­பா­டு­களை செய்து தர­வேண்டும் என உலமா சபை பிர­தி­நி­திகள் பேரா­யரை வேண்டிக் கொண்­டனர். அதற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­து­த­ரு­வ­தாக பேராயர் உறு­தி­ய­ளித்தார்.

பேராயர் கர்த்­தினால் மெல்கம் ரஞ்சித் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

‘நான் இஸ்லாம் உட்­பட எல்லா மதங்­க­ளையும் மதிப்­பவன். இஸ்­லாத்­துக்கும், கிறிஸ்­தவ மதத்­துக்கும் மிக நெருங்­கிய தொடர்­புகள் உள்­ளன. கிறிஸ்­த­வமும் இஸ்­லாமும் ஒரே கடவுள் நம்­பிக்கை உள்ள மதங்­க­ளாகும். ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­த­லுக்கு முஸ்லிம் சமூகம் பொறுப்­பல்ல. அத்­தாக்­கு­தலின் பின்­ன­ணியில் வெளி­நாட்டுச் சக்­தி­களே செயற்­பட்­டுள்­ளன. தாக்­கு­தலின் பின்னர் எவரும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக செயற்­ப­ட­வேண்டாம் என எமது மக்­களைக் கோரி­யி­ருக்­கின்றேன்’ இஸ்­லா­மிய மதத்­தையும் நான் மதிக்­கின்றேன்.

ஏப்ரல் தாக்­கு­த­லுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் அதன் பின்­ன­ணியில் உள்­ள­வர்கள் அனை­வரும் கைது செய்­யப்­ப­ட­வேண்டும். அவர்­க­ளுக்கு சட்­ட­ரீ­தி­யான தண்­ட­னைகள் பெற்றுக் கொடுக்­கப்­பட வேண்டும் இதுவே எங்­களின் கோரிக்­கை­யாகும்.

நாம­னை­வரும் கட்சி பேதங்­களை மறந்து நாட்டின் நன்­மைக்­காக ஒன்­றி­ணைய வேண்டும். சிங்­கப்பூர் பல்­லின மக்­களைக் கொண்ட ஒரு நாடாகும்.

அங்கு அனைத்து மதங்­க­ளி­னதும் தனித்­துவம் பாது­காக்­கப்­பட்­டுள்­ளது. மக்கள் சக­வாழ்வு வாழ்­கி­றார்கள். நாடும் முன்­னேற்­ற­ம­டைந்­துள்­ளது. இதனை நாம் உதா­ர­ண­மாகக் கொள்­ள­வேண்டும்.

ஊட­கங்கள் பொய்­யான தக­வல்­களை வெளி­யி­டு­வதை அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. இதற்­காக நாம் கவ­லை­ய­டை­கிறோம்.

மஸ்­ஜித்கள் நல்­லி­ணக்க மையங்­க­ளாகச் செயற்­ப­டு­வது போன்று ஆல­யங்­களும் நல்­லி­ணக்க மையங்­க­ளாக செயற்­படும். நாம் இரு தரப்பும் ஒன்­றி­ணைந்து மக்­க­ளி­டையில் நல்­லி­ணக்­கத்தை வளர்க்க வேண்டும். இந்­நி­லை­மையே இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் சுபீட்­சத்தை உரு­வாக்கும்.

நான் எப்­போதும் முஸ்லிம் சமூ­கத்­துடன் இருப்பேன். எதிர்­வரும் ஏப்ரல் 21 ஆம் திகதி ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் இடம்­பெற்று ஒரு வரு­டம்­பூர்த்­தி­யா­கி­றது. அந்த நினைவு நிகழ்­வுகள் கொச்­சிக்­கடை தேவா­ல­யத்­திலும் மேலும் பல இடங்­க­ளிலும் நடை­பெ­ற­வுள்­ளது. முஸ்­லிம்கள் நீங்கள் அனை­வரும் நிகழ்­வு­களில் கலந்­து­கொள்ள வேண்டும்.

எங்­க­ளுக்குள் நல்­லி­ணக்­கத்­தையும், நல்­லு­ற­வி­னையும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு இரு தரப்பும் நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்ய வேண்டும் என்றார்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் குழு­வினர் ‘பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்­சித்­திடம் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் முஸ்­லிம்­களின் பெயரால் நடத்­தப்­பட்­ட­மைக்கு கவலை தெரி­வித்­தனர். பாதிக்­கப்­பட்ட மக்­களின் நல்­வாழ்­வுக்கு பிரார்த்­திப்­ப­தா­கவும் கூறி­னார்கள். குண்­டுத்­தாக்­குதல் ஒரு வருட பூர்த்தி நிகழ்வில் முஸ்­லிம்கள் பங்­கெ­டுப்­பார்கள் என்றும் தெரிவித்தனர். எதிர்காலத்தில் எமது உறவுகள் நிச்சயம் பலம் பெறும் என்றும் தெரிவித்தார்கள்’.

இந்நிகழ்­வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், உதவி பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாஸிம் மௌலவி, பொருளாளர் மெளலவி ஏ.எல்.எம்.கலீல், பொது உறவுகள் அதிகாரி சல்மான் உஸாமா (ரிழ்வானி),மௌலவி அனஸ், மௌலவி ஹாசிம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.-Vidivelli

ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.