சம்பிக்கவின் கருத்து கண்டிக்கத்தக்கதாகும்

முஸ்லிம்கள் ஒன்றுபடவேண்டும் என்கிறார் ஹரீஸ்

0 905

புர்கா, மத்­ரஸா உள்­ளிட்­ட­வை­களை தடை செய்யும் யோச­னை­களை முடி­யு­மானால் நிறை­வேற்றி காட்­டு­மாறு அர­சுக்கு முன்னாள் அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க சவால் விடுத்­துள்­ளமை கண்­டிக்­கத்­தக்­க­தா­கு­மென பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­ம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிர­தி­த் தலை­வ­ரு­மான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரி­வித்­துள்ளார்.

இந்த அரசு பெரும்­பான்மை மக்­க­ளிடம் மதம் தொடர்­பி­லான பீதியை ஏற்­ப­டுத்தி ஆட்­சிக்கு வந்­தது. எதிர்க்­கட்­சி­யி­லி­ருந்த போது பீதியை ஏற்­ப­டுத்­திய புர்கா, மத்­ரஸா உள்­ளிட்­ட­வை­களை தடை செய்யத் தற்­போது பாது­காப்பு தொடர்­பான பாரா­ளு­மன்­றக்­குழு யோச­னை­களை முன்­வைத்­துள்­ளது. இந்த சூழ்­நி­லையில் சம்­பிக்க அதனை இந்த அரசு நிறை­வேற்றிக் காட்­டட்டும் என்று சவால் விடுத்­தி­ருக்­கின்­றமை ஆபத்­தா­ன­தாகும் எனவும் ஹரீஸ் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இது­கு­றித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

முன்னாள் அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க மீண்டும் தனது இன­வாத முகத்தை காட்ட ஆரம்­பித்­தி­ருப்­பது மிகவும் ஆபத்­தா­னது. அவ­ரது தனிப்­பட்ட தேவை­க­ளுக்­காக இந்த நாட்டு மக்­களை மோச­மான முறையில் வழி­ந­டத்த எத்­த­னித்­தி­ருப்­பது கண்­டிக்­கக்­கூ­டி­ய­தாகும்.

இந்­நாட்டில் வாழும் சகல மக்­க­ளுக்கும் தமது மொழி, கலா­சாரம், பண்­பாடு, மதம் என்­ப­வற்றை பின்­பற்ற இலங்கை அர­சி­ய­ல­மைப்பு இடம் வழங்­கி­யி­ருக்­கின்­றது. அதை மறுக்­கின்ற உரிமை யாருக்கும் இல்லை. எமது நாட்டில் வாழும் சக­லரும் நிம்­ம­தி­யாக வாழும்­ப­டி­யா­கவே எமது நாட்டின் சட்டம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இதை யாரும் மறுக்­க­மு­டி­யாது.

புர்கா, மத்­ரஸா உள்­ளிட்­ட­வை­களை தடை­செய்யத் தேவை­யான ஆத­ரவை பாரா­ளு­மன்­றத்தில் பெற்­றுத்­தர தான் தயா­ரெ­னவும் அவ­ரது கருத்தில் முன்னாள் அமைச்சர் பாட்­டலி சம்­பிக்க ரண­வக்க குறிப்­பிட்­டுள்ளார். இந்த அறிக்­கை­களின் பிர­காரம் தனது சொந்த முகங்­களை காட்ட ஆரம்­பித்­தி­ருப்­ப­தா­னது இந்த நாட்டில் வாழும் மக்­களின் தனிப்­பட்ட இறை­மையின் தலையில் கை வைப்­பது போன்­ற­தாகும்.

இன­வாத குரல்கள் அதி­க­மாக எமது முஸ்­லிங்­க­ளுக்கு எதி­ராக கிளர்ந்­தெ­ழும்ப எத்­த­னிக்கும் இவ்­வே­ளையில் இலங்கை முஸ்­லிம்­களின் சார்­பி­லான சகல அர­சியல் தலை­மை­களும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க முன்வரவேண்டும். அரசியல் கட்சி பேதங்கள், பிரதேச வாதங்கள் கடந்து சகல அரசியல் பிரமுகர்களும் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என மேலும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.-Vidivelli

  • எஸ்.அஷ்ரப்கான்

Leave A Reply

Your email address will not be published.