சாந்தமருது நகர சபை வர்த்தமானிக்கு தீர்வு தான் என்ன?

0 742

கடந்த 14.02.2020ஆம் திகதி வெளி­வந்த 2162/50ஆம் இலக்க இலங்கை ஜன­நா­யக சோஷலிசக் குடி­ய­ரசு வர்த்­த­மானிப் பத்­தி­ரி­கையில் சாய்ந்­த­ம­ரு­துக்­கான நக­ர­சபை அறி­விப்பு வெளி­வந்­தது நாம­றிந்­ததே. இச்­ச­பையின் ஆரம்ப தின­மாக 2022 மார்ச் 20ஆம் திக­தி­யெ­னவும் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கி­றது. சாய்ந்­த­ம­ருது மக்­களின் சுமார் 33 வருட போராட்­டத்தின் அறு­வ­டை­யாக, நக­ர­சபை பிர­க­டனம் வெளி­வந்­தி­ருக்கும் இச்­செய்தி இம்­மக்­க­ளுக்கும் மண்­ணுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என்­பதில் மாறு­பட்ட கருத்­துக்கு இட­மில்லை.

கடந்த 19.02.2020இல் நடை­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்தில் சாய்ந்­த­ம­ருது நக­ர­சபை விடயம் பேசப்­பட்டு, அது­கு­றித்த அறி­விப்­புக்­களை வெளி­யிடும் வாாரந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் அமைச்­ச­ரவை இணைப் பேச்­சா­ள­ரான அமைச்சர் பந்­துல குண­வர்­தன பின்­வரும் கூற்­றுக்­களைத் தெரி­வித்தார்.

“சாய்ந்­த­ம­ருது நக­ர­ச­பையை உரு­வாக்­கு­வ­தற்­காக, 14ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட அதி­வி­ஷேட வர்த்­த­மா­னியை இரத்துச் செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது” என்றும், “நாடு முழு­வதும் காணப்­படும் இவ்­வா­றான விட­யங்­களை மீள ஆராய்ந்து தேவை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக இதனை இடை நிறுத்­தி­யுள்­ள­தா­கவும், அதனை முற்­றாகத் தடை செய்­ய­வில்லை” எனவும், “இந்த வர்த்­த­மானி தொடர்பில் கடந்த சில நாட்­க­ளாக சிலர் முன்­வைத்து வரும் எதிர்ப்­புக்­களால் இந்த வர்த்­த­மா­னியை இரத்துச் செய்­ய­வில்லை” என்றும், “சாய்ந்­த­ம­ருது நக­ர­ச­பையை தற்­கா­லி­க­மாக இரத்துச் செய்­வ­தற்­காக அமைச்­ச­ரவை எடுத்த தீர்­மானம் வெகு விரைவில் வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­படும்” என்ற கருத்­துக்­களை அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.

இந்த அறி­விப்­புக்கள் வெளி­யா­கிய 20.02.2020இலி­ருந்து சாய்ந்­த­ம­ருது மக்கள் மிகவும் அதிர்ச்­சிக்­குள்­ளாகி, மகிழ்­வி­ழந்து காணப்­ப­டு­கின்­றனர். அதே­நேரம் பலத்த சர்ச்­சை­களை முஸ்லிம் அர­சியல் களத்தில் ஏற்­ப­டுத்தி, பீதி­யையும் அர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கை­யீ­னங்­க­ளையும் வலு­வ­டையச் செய்யும் பாங்­கி­லான கருத்­தா­டல்­களும் வெளிப்­படத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

கடந்த 19.02.2020 நடை­பெற்ற அமைச்­ச­ர­வையில் சாய்ந்­த­ம­ரு­துக்­கான நக­ர­சபை உரு­வாக்கம் தொடர்­பி­லான ஆராய்தல் என்­பது, முன்­கூட்டி அமைச்­ச­ர­வைக்கு பத்­திரம் சமர்ப்­பித்தோ, அறி­வித்தோ நடை­பெற்ற ஒன்­றல்ல. மாறாக சடு­தி­யாக அவ்­வி­டத்தில் சமு­க­ம­ளித்த அமைச்­சர்­க­ளான விமல் வீர­வன்ஸ மற்றும் பந்­துல குண­வர்­தன போன்­றோர்­க­ளினால் பேசப்­பட்டு ஆரா­யப்­பட்ட ஒன்று என்­பது மட்டும் திட்­ட­வட்­ட­மா­னது.

சாய்ந்­த­ம­ரு­துக்­கான நக­ர­ச­பையை வழங்­குங்கள் என உரிய அமைச்­ச­ருக்கு பிர­தமர் மஹிந்த ராஷ­ப­க் ஷதான் சொல்­லி­யி­ருந்தார். அவர் இந்த அமைச்­ச­ர­வையில் பங்­கு­பற்­ற­வில்லை எனக் கூறப்­ப­டு­கின்­றது. உரிய அமைச்­ச­ரான ஜனக பண்­டார தென்­னகோன் இப்­பி­ரச்­சினை எழும்­போது இது பிர­த­மரின் பணிப்பின் பேரில் நடை­பெற்ற ஒன்­றென்று எடுத்துக் கூற­வில்லை என்­கின்ற கருத்தும் இவ்­வி­ட­யத்தில் இருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது. எவ்­வா­றா­யினும் அமைச்­ச­ர­வையில் சடு­தி­யா­கவும் விட­யங்கள் ஆரா­யப்­பட முடியும் அதன் நிமித்தம் தீர்­மா­னங்கள் மேற்­கொள்­வ­தற்கு உரித்­துண்­டென்­பது வெளிப்­ப­டை­யா­னது.

சாய்ந்­த­ம­ருது நக­ர­சபை குறித்­தான கருத்­தாடல் வரும்­போது பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ சமு­க­ம­ளித்­தி­ருக்­க­வில்லை. அதே­நேரம் விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்சர் போது­மான விளக்­கங்­களை அங்கு முன்­வைக்­க­வில்லை என்­கின்ற நிலைப்­பாடும் இருந்­தி­ருக்­கி­றது. இன்­னொரு வகையில் நமக்­கான முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் என ஒரு­வரும் அமைச்­ச­ர­வையில் இல்­லா­மையும் பெருங் குறை­பா­டாகும்.

இவை நமக்கு ஒரு பாடத்தைக் கற்­பிக்­கின்­றது. அதா­வது, நமக்­கான ஓர் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம், அதுவும் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துக்கு வரக்­கூ­டிய ஒரு­வரை நடை­முறை அர­சாங்­கத்­திற்கு சார்­பா­ன­வ­ரா­கவும் அர­சாங்­கத்தில் செல்­வாக்­கு­டை­ய­வ­ரா­கவும் வரக்­கூ­டிய ஒரு­வரை தேர்ந்­தெ­டுத்­துக்­கொள்ள வேண்­டிய கட்­டா­யத்­தையும் அவ­சி­யத்­தையும் நாம் இதி­லி­ருந்து புரிந்­து­கொள்ள வேண்டும்.

இந்தப் பின்­ன­ணியில் சாய்ந்­த­ம­ருது நக­ர­சபை உரு­வாக்கம் குறித்­தான வர்த்­த­மானி இரத்துச் செய்யும் கதை­யாடல் மேற்­கு­றித்த அமைச்­ச­ர­வையில் ஆரா­யப்­பட்­டது என்­பதும், அமைச்­ச­ரவை இணைப் பேச்­சா­ள­ரான அமைச்சர் பந்­துல குண­வர்­தன அறி­வித்­த­மையும் உண்­மை­யான செய்­தி­களே. ஆனால், வர்த்­த­மானி இரத்­தா­க­வில்லை என்­பதும் மிகவும் தெளி­வா­னது. ஏனெனில், சாய்ந்­த­ம­ருது நக­ர­சபை உரு­வாக்கம் குறித்­தான வர்த்­த­மா­னியை இரத்துச் செய்து இன்­னு­மொரு வர்த்­த­மானி வெளி­வ­ரும்­வரை முந்­திய சாய்ந்­த­ம­ரு­துக்கு நக­ர­சபை பிர­க­டனம் செய்த வர்த்­த­மானி வலி­து­டை­ய­தா­கவே இருக்கும்.

இத­னால்தான் அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­வித்த அமைச்­சரே அதனை “முற்­றாகத் தடை செய்­ய­வில்லை” என தெரி­வித்­தி­ருப்­ப­தி­லி­ருந்து நாம் புரிந்­து­கொள்ள முடியும். அது­மட்­டு­மன்றி, “சாய்ந்­த­ம­ருது நக­ர­ச­பையைத் தற்­கா­லி­க­மாக இரத்துச் செய்­வ­தற்கு அமைச்­ச­ரவை எடுத்த தீர்­மானம் வெகு­வி­ரைவில் வர்த்­த­மா­னியில் வெளி­டப்­படும்” என்ற வாசகம் இன்னும் இதனை உறுதி செய்­கின்­றது.

சாய்ந்­த­ம­ரு­துக்­கான நக­ர­சபை உரு­வாக்கம் என்­பது எதிர்­வரும் 2022.03.20ஆந் திக­தி­யாகும். ஆதலால் இது இரத்துச் செய்­த­தாக வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­வரும் வரை அமுலில் இருக்கும். அமைச்­ச­ர­வையில் எடுக்­கப்­பட்ட தீர்­மானம் என்­பது மாற்ற முடி­யாத ஒன்­றல்ல. இது­கு­றித்தும் அமைச்சர் பந்­துல குண­வர்­தன குறிப்­பிடத் தவ­ற­வில்லை. “அமைச்­ச­ர­வையில் எடுத்த தீர்­மா­னங்கள் திருத்­தப்­படும், இரத்துச் செய்­யப்­படும். இது ஏனைய நாடு­களின் அமைச்­ச­ர­வை­யிலும் இயல்­பாக நடை­பெறும் முறை­யாகும்’ எனக் கூறு­வ­தி­லி­ருந்து பின்­வரும் இரண்டு முடி­வு­க­ளுக்கு நாம் வர முடியும்.

(1) உள்­ளூ­ராட்சி அமைச்சர் சாய்ந்­த­ம­ரு­து­ந­க­ர­சபை உரு­வாக்கம் குறித்து வெளி­யிட்ட வர்த்­த­மா­னியை இரத்துச் செய்ய முடியும் என்றும், (2) இரத்துச் செய்ய தீர்­மானம் மேற்­கொண்­ட­மையைக் கூட நடை­மு­றைப்­ப­டுத்­தா­தும்­விட முடியும் என்­கின்ற கருத்­தையும் இதி­லி­ருந்து பெற­மு­டியும். ஆகவே, கடந்த 14 ஆம் திகதி வெளி­வந்த வர்த்­த­மானி இரத்­தா­கி­விடும் என்று நாம் உறு­தி­யாக நம்ப வேண்­டிய தேவையை இது இல்­லாமற் செய்­கின்­றது. எனினும் இரத்துச் செய்யும் வர்த்­த­மானி வெளி­வ­ரும்­வரை நாம் நம்­பிக்­கை­யுடன் இருப்­பது தவ­று­மல்ல. காலம்தான் இதற்­கான முடிவை நமக்கு அறி­விக்கும் அது­வரை பொறுமை காப்­ப­துதான் சாலச்­சி­றந்­தது.

சாய்ந்­த­ம­ருது நக­ர­சபை பிர­க­டனம் குறித்து வெளி­வந்த வர்த்­த­மானி இரத்துச் செய்­யப்­படும் மற்­றொரு வர்த்­த­மானி வெளி­வந்தால், அது நமது நாட்டின் அர­சியல் நகர்வில் முதல் தட­வை­யாக வழங்­கப்­பட்ட உள்­ளூ­ராட்சி மன்றம் ஒன்று மீளப் பெறப்­பட்ட முதல் நிகழ்­வாக வர­லாறு பதிவு செய்­து­கொள்ளும். இவ்­வா­றான செயற்­பா­டா­னது இன்­றைய அர­சாங்­கத்­திற்கு ஆரோக்­கி­ய­மான விமர்­ச­னங்­களை ஈட்டித் தராது.

கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன செய்­து­கொண்ட ஒப்­பந்­தங்கள் என்ற அடிப்­ப­டையில் சாய்ந்­த­ம­ருது சுயேச்­சைக்­குழு (தோடம்­பழச் சின்­னத்தில் பள்­ளி­வா­சலின் ஆத­ர­வு­டனும், சாய்ந்­த­ம­ருக்­கான உள்­ளூ­ராட்சி மன்­றமே எமது ஊரின் தாகம் என்­பதை உறுதி செய்­வ­தற்­காக போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற) அணி­யு­டனும், ஐக்­கிய சமா­தானக் கூட்­ட­மைப்பு எனும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட அர­சியல் கட்­சி­யு­டனும் ஒப்­பந்தம் செய்­து­கொண்ட ஒரு விட­ய­மாக சாய்ந்­த­ம­ருது நக­ர­சபை பிர­க­டனம் இருக்­கின்­றது.

மற்றும் ஜனா­தி­பதித் தேர்தல் பிர­சாரப் பணியில் சாய்ந்­த­ம­ரு­துக்கு விஜயம் செய்த இன்­றைய பிர­தமர் மஹிந்த ராஜ­பக் ஷ, ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன தேசிய அமைப்­பாளர் பஷில் ராஜ­பக் ஷ ஆகியோர் பகி­ரங்­க­மாக தேர்தல் வெற்­றியின் பின்னர் சாய்ந்­த­ம­ருது நக­ர­சபை மலரும் என்ற உறு­தி­மொ­ழியை உரைத்துச் சென்­றி­ருந்­தனர். இதன் தொடர்ச்­சி­யா­கவே மஹிந்­தவின் பணிப்பின் பேரில் நடை­பெற்ற ஒரு சபைப் பிர­க­டனம் மீளப் பெறப்­ப­டு­வது அவர்­களின் வாக்­கு­று­திகள் மீது மக்கள் கொள்ளும் நம்­பிக்­கை­யினை பல­மி­ழக்கச் செய்­வ­தற்கு வழி­யா­கவும் அமைந்­து­வி­டலாம்.

கடந்த 2020.02.19இல் நடை­பெற்ற அமைச்­ச­ரவைத் தீர்­மான அறி­விப்­பா­னது நமக்கு இரண்டு செய்­தி­களை வெளிப்­ப­டுத்தி நிற்­கின்­றன.

(1) நக­ர­சபை உருவாக்­கு­வ­தற்கு முன்­னோ­டி­யாக நடை­பெற வேண்­டிய செய­லாளர் நிய­மனம், கட்­டி­டத்தை உரு­வாக்­கு­வது, நிர்­வாக ரீதி­யாக பிரித்­தெ­டுக்க வேண்­டிய ஆவ­ணங்கள், சொத்துப் பிரிப்பு சபையின் வட்­டா­ரத்தின் எண்­ணிக்கை போன்ற நட­வ­டிக்­கையை தற்­கா­லி­க­மாக தாம­தப்­ப­டுத்தி வைக்கும். (2) நக­ர­சபை உரு­வாக்க வர்த்­த­மானி வெளி­வந்­தி­ருந்­தாலும் அதனை இரத்துச் செய்யும் அதி­காரம் எந்த நேரத்­திலும் அமைச்­ச­ர­வைக்கு அல்­லது உரிய அமைச்­ச­ருக்கு இருக்­கி­றது. இவ்­விரு செய்­தி­களும் நமது அவ­தா­னங்­க­ளி­லி­ருந்து வில­கி­வி­டாது சிந்­திப்­பதன் அவ­சி­யத்தை நமக்கு வலி­யு­றுத்­து­கின்­றது.

குறிப்­பாக சாய்ந்­த­ம­ருது நக­ர­ச­பையைத் தரும் அர­சாங்­கத்­தையும் பெற்றுத் தரு­வதில் முன்­னின்று உழைத்த அர­சியல் பிர­தி­நி­தித்­து­வ­மான முன்னாள் அமைச்சர் அதா­வுல்­லாஹ்­வையும், ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வையும் புறக்­க­ணித்து விடாது இவ்வூர் மக்கள் நன்­றியைத் தெரி­விக்கும் வகையில் நமது பெரும்­பா­லான வாக்­க­ளிப்பு ஊடான ஆத­ரவைத் தெரி­விக்கும் கடப்­பாட்­டி­லி­ருந்து தூர­மா­கி­வி­டாத பண்பைப் பேண வேண்­டிய தேவையை அறி­வு­றுத்­து­வ­திலும் இந்த அமைச்­ச­ரவை சல­ச­லப்­புக்கு பின்­னா­லி­ருக்கும் நியாயம் என்­ப­தையும் நாம் மறந்­து­விடக் கூடாது.

பள்­ளி­வா­சலை முன்­னி­றுத்தி வழங்­கிய நமது வாக்­கு­று­தி­களை எதற்­கா­கவும் நாம் மீறு­வது முறை­யல்ல என்ற தெளிவும் நமக்கு முக்­கி­ய­மாகும்.

2019 ஏப்ரல் 21இல் நடை­பெற்ற சஹ்ரான் தலை­மை­யி­லான குழு­வி­னரின் மிலேச்­சத்­த­ன­மான தாக்­குதல் என்­பது முஸ்லிம் சமூ­கத்தின் கட்­ட­மைக்­கப்­பட்ட ஒரு குழு­வி­னரின் செயற்­பா­டல்ல. இந்த அணியை, முஸ்லிம் சமூகம் அங்­கீ­க­ரித்­ததும் அல்ல என்­பது பட்­ட­வர்த்­தன­மா­னது. அப்­ப­டி­யி­ருந்தும் இத­னோடு சாய்ந்­த­ம­ருது நக­ர­சபை பிர­க­ட­னத்தை முடிச்­சுப்­போட்டு கருத்­து­ரைப்­பது ஓர் அபத்­த­மான தொடர்­பு­ப­டுத்தல் என்­பது மிகத் தெளி­வா­னது.

அது­மட்­டு­மன்றி, சஹ்ரான் குழு­வி­னரின் ஒரு பகு­தி­யினர் சாய்ந்­த­ம­ருதில் தங்­கி­யி­ருந்­தது என்­பது ஒரு வாரத்­திற்­குட்­பட்­ட­தாகும். அப்­படி இருந்தும் இவர்கள் பற்றி அறிய வந்­ததும் உடன் பாது­காப்புத் தரப்­புக்கு சாய்ந்­த­ம­ருது மக்கள் காட்டிக் கொடுத்­தனர். அவர்கள் தப்­பித்­துக்­கொள்ள முடி­யாத நிலை­யில்தான் குண்டை வெடிக்­க­வைத்து மாண்டு போனார்கள் என்­பதே உண்­மை­யாகும்.

சஹ்ரான் குழு­வி­னரை இவ்வூர் மக்கள் மட்­டு­மன்றி முழு முஸ்லிம் சமூ­கமும் ஏற்றுக் கொள்­ளாத பக்­க­மாகும். சாய்ந்­த­ம­ருது மக்கள், ‘காட்டிக் கொடுத்த ஊர்’ என்று பெரு­மைப்­பட முடியும். இத­னால்தான் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பணப்­ப­ரி­சில்கள் வழங்கி கௌர­வித்தார். அது மட்­டு­மன்றி குண்டை வெடிக்­க­வைத்து மரித்­துப்­போன உடல்­களைப் பொறுப்­பேற்­கவோ, இவ்­வூரின் அடக்­கஸ்­த­லங்­களில் அடக்கஞ் செய்­யவோ அனு­மதி இல்லை என்­பதை சாய்ந்­த­ம­ருது உலமா சபை, ஜும்ஆப் பள்­ளி­வாசல் என கூட்­டாக அறி­வித்து மறுத்த விட­யமும் மிகப் பகி­ரங்­க­மா­னது. இப்­ப­டி­யான நிலை இருந்தும் இவ்­வூரை தீவி­ர­வாதி சஹ்­ரா­னுடன் தொடர்­பு­ப­டுத்தி பேசு­வ­தற்கு முடி­யாத ஒன்­றா­க­வி­ருந்தும், வலிந்து இணைத்துப் பேசும் பேச்­சுக்­களே அவை.

சாய்ந்­த­ம­ருது நக­ர­சபை பிர­க­ட­னத்தை அடுத்து வெளிக்­க­ளத்தில் பூதா­க­ர­மாக எழுப்­பப்­பட்ட குற்­றச்­சாட்டு அர­சாங்­கத்­திற்கு மிகப் பாத­க­மா­னது. சஹ்ரான் குழு­வி­னரை இயக்­கி­ய­வர்கள் இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள், அதற்கு கைமா­றா­கவே சஹ்ரான் குழு­விற்கு ஆத­ரவு வழங்­கிய சாய்ந்­த­ம­ரு­துக்கு வெகு­ம­திதான் இந்தப் பிர­க­டனம் எனச் சொல்­லப்­பட்­ட­தாகும்.

உண்­மையில் சஹ்ரான் குழு­வி­னரை இயக்­கி­ய­வர்கள் கடந்த ஆட்­சி­யாளர் என்று இன்­றைய ஆட்­சி­யா­ளரும், இன்­றைய ஆட்­சி­யா­ளர்­கள்தான் இயக்­கி­ய­வர்கள் என கடந்த ஆட்­சி­யா­ளர்­களும் பரஸ்­பரம் குற்றம் சாட்டிக் கொண்­டி­ருக்கும் ஒரு விடயம் தவிர இந்த அணிதான் இயக்­கி­யது என சான்­றா­தா­ரத்­துடன் நிரூ­பிக்­கப்­ப­டாத ஒன்­றாகும்.

இவ்­வா­றான விமர்­ச­னத்­துக்கு இன்­றைய ஆட்­சி­யா­ளர்கள் பயந்­துதான் அமைச்­ச­ரவை சல­ச­லப்பு எனில், அந்தக் குற்­றச்­சாட்டை அவர்கள் ஏற்­ற­தாக அர்த்­தப்­பட்டு விடும். மற்றும் சாய்ந்­த­ம­ருது சஹ்ரான் குழுவின் ஆதர­வா­ளர்­க­ளல்ல, மாறாக காட்டிக் கொடுத்­த­வர்கள். அதற்­குத்தான் இந்த நக­ர­சபை பிர­க­டன வெகு­மதி என்று அர­சாங்கம் உரத்துச் சொல்ல முடியும்.

இவ்­வாறு மஹிந்த – கோத்­தா­பய அணி­யினர் பகி­ரங்­க­மாகச் சொல்லத் துணிந்தால், கற்­பி­த­மாகச் சொல்­லப்­படும் இன, மத­வாதக் கருத்­துக்கள் வலு­வி­ழந்­து­விடும். முஸ்லிம் விரோதப் போக்கு செயற்­பாட்­டா­ளர்­க­ளான சிங்­கள மக்­களின் கும்­பலை அடக்கி வாசிக்க வைத்­தி­ருக்கும் ஆற்­றலும் தீரமும் மஹிந்த –கோத்­தா­பய அணிக்­கே­யுண்டு. ஆதலால் வெளிக்­கள பரப்­பு­ரைக்கு பயப்­பட வேண்­டிய எதுவும் இவ்­வ­ணிக்கு இல்லை. தேர்தல் மேடையில் மஹிந்­தவின் பார்வை அல்­லது சுட்டு விரல் நீட்­டப்­ப­டு­ப­வர்கள் வெற்­றி­யா­ளர்கள் என்ற பதிவின் சொந்­தக்­காரர். ஆயின் நகர சபை குறித்த பொய்ப் பூச்­சாண்டிக் கதைகள் அவர்­களின் தேர்­தலில் தாக்கம் செலுத்தப் போவ­தில்லை என்­பதும் திட்­ட­வட்­ட­மா­னது.

சஹ்ரான் குழு­வினர் தோற்றம் பெறு­வ­தற்கு முன்­பி­ருந்தே அதா­வது, கடந்த 1988களி­லி­ருந்தே சாய்ந்­த­ம­ரு­துக்­கான உள்­ளூ­ராட்சி மன்றம் உரு­வாக்­கப்­படல் வேண்டும் என்­கின்ற கோரிக்கை இருந்து வந்த ஒன்று. நமது நாட்டின் சட்­ட­திட்­டத்­திற்கு உட்­பட்ட ஒரு விட­ய­மா­கவும் இன்­று­வரை நடை­மு­றை­மயில் இருந்­து­வ­ரு­கின்ற உள்­ளூ­ராட்சி அதி­கா­ரத்தை கேட்­பதும் கிடைப்­பதும் ஜன­நா­யக வழிக்­கு­ரிய ஒன்­றாகும்.

பின்னர் எப்­படி இது தனி இராஜ்­ஜி­யத்­திற்­கு­ரிய ஒன்­றாக மாறும் என்ற அச்­சத்தை முன்­வைப்­பதும், அதனை பேசு­பொ­ரு­ளாக்கி, இன, மத­வா­த­மாக மாற்­று­வதும் அறி­வு­டை­மை­யா­குமா? நமது நாட்டில் அமைந்­தி­ருக்கும் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில், சிங்­க­ளவர், தமிழர், முஸ்லிம் என்று தனித்து வாழும் இடங்­களில் உரு­வாக்­கப்­ப­ட­வில்­லையா? அப்­படி அமைந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு நிறைய சான்­றுகள் நமது நாட்டில் உண்டு.

இவ்­வாறு தனியே ஒரே சமூ­கத்­தினர் வாழும் பகு­திகள் என்றும், பல சமூ­கத்­தினர் இணைந்து வாழும் இடங்கள் என நமது நாட்டு மக்­களின் இருப்­பியல் அமைந்­தி­ருக்­கின்­றன. இது இயல்­பா­கவும், கால மாற்­றங்கள் என்ற வகை­யிலும் அமைந்­தவை. இதனால் சமூ­கங்கள் கலந்தும், தனித்தும் வாழும் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள், பிர­தேச செய­ல­கங்கள் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

இவ்­வா­றான நிலைப்­பா­டுகள் நீண்ட கால­மாக காணப்­ப­டு­கின்­றன.

அவை ஒரு­போதும், ஒரு தனிச் சமூகம் என்­ப­தற்­காக தனி இராஜ்­ஜி­ய­மாக மாறி­விடும் அபாயம் நிகழ்ந்­து­வி­ட­வில்லை. ஒரே நாடு என்ற அம்­சம்தான் இன்று வரை மேலோங்கி காணப்­ப­டு­கின்­றது. அது மட்­டு­மன்றி நமது நாட்டு முஸ்லிம் சமூகம் இன்று வரை தனி இராஜ்­ஜியக் கோரிக்கையை முன்­வைத்­த­வர்­களே இல்லை. பின் எப்­படி தனி இராஜ்­ஜியம் உரு­வாக்க சாய்ந்­த­ம­ருது மக்கள் முயல்வர் எனக் கூறு­வதே மிகைப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு கற்­பிதம் ஆகும்.

சாய்ந்­த­ம­ருது நக­ர­சபை பிர­க­டனம் குறித்­தான வர்த்­த­மானி வெளி­வந்­ததன் பின்னர், முஸ்­லிம்­க­ளுக்கு தனி இராஜ்­ஜியம் வழங்­கப்­பட்­டது போன்ற பிர­சா­ரங்கள் வெகு­வாக முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இதில் குண­தாஸ அம­ர­சே­கர, மது­மாத அர­விந்த, அமித் வீர­சிங்க போன்ற பேரி­ன­வாத கடும்­போக்­கா­ளர்கள் அங்கம் பெற்­றி­ருந்­தமை நமக்கு ஆச்­ச­ரி­ய­மான ஒன்­றல்ல. ஆனால் ஐக்­கிய தேசிய கட்சி சார்ந்த மரிக்கார், முஜிபுர் ரஹ்மான், ஹிரு­ணிக்கா, காவிந்த ஜய­வர்­தன, நளின் பண்­டாரா, தலதா அத்­துக்­கோ­ரல மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்ந்த சாந்த பண்­டார போன்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் நக­ர­சபை பிர­க­ட­னத்தை தனி­யான முஸ்லிம் இராஜ்­ஜியம் போன்று சித்­தி­ரித்து, ஒரு மத­வாத இன­வாதக் கோணத்தில் கருத்­து­ரைக்க முற்­பட்­ட­துதான் வியப்­பா­னது.

இவ்­வா­றான ஒரு இன, மத­வாத சித்­தி­ரிப்­புக்கு ஐக்­கிய தேசியக் கட்சி சார்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விமர்­சிக்க முற்­பட்­டி­ருக்கும் கோணம் எதை நமக்கு எடுத்துக் காட்ட விளை­கின்­றது? என்­கின்ற தேடலும் ஆராய்­தலும் நமக்கு முக்­கி­யப்­ப­டு­கின்­றது. எதிர்க்­கட்­சியில் இருப்­போர்கள் ஆளும் தரப்­பி­னரின் எந்தச் செயற்­பா­டா­னாலும் அதனை எதிர்ப்­பதும் குறை காண்­பதும் எழு­தாத ஒரு சட்டம் போன்று நமது நாட்டு அர­சியல் போக்கு அமைந்து காணப்­ப­டு­கின்­றது. இதற்கு இசைந்த ஒரு எதிர்த்­தா­ட­லாக இதனை நாம் ஒப்­புக்­கொள்ள அறிவு இடம் தர­வில்லை.

ஏனெனில், 2018களில் மலை­ய­கத்தில் அம்­ப­க­முவ என்­கின்ற ஒரு பிர­தேச சபையை நோர்வூட், மஸ்­கெ­லியா, கொட்­டக்­கல, அக்­க­ரப்­பத்­தனை என நான்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை புதி­தாக உரு­வாக்கி மொத்­த­மாக ஐந்து சபை­க­ளாக உரு­வாக்­கினர். இது நிகழ்ந்த காலத்­திலும் சாய்ந்­த­ம­ரு­துக்­கான உள்­ளூ­ராட்சி மன்ற உரு­வாக்கம் குறித்­தான பேச்­சு­வார்த்­தைகள் அமைச்­ச­ரவை மட்­டத்தில் இருந்­தன. அது ஹரீஸ் எம்.பியின் தனிப்­பட்ட அர­சியல் கார­ணத்­திற்­காக எதிர்க்­கப்­பட்டு, அவர் பின்னால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மைத்­துவம் ஒளிந்­து­கொண்ட வர­லாறு வேறு கதை.

இங்கு நமது கவ­னங்­க­ளுக்­கு­ரி­யது எது­வென்றால், அன்று நல்­லாட்சி அர­சாங்க காலத்தில் அமைச்சர் மனோ கணேசன் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை உரு­வாக்கிக் கொண்­ட­போதும், அந்த கால­கட்­டத்தில் சாய்ந்­த­ம­ருது விவா­கரம் பேசப்­பட்டும் இவை குறித்து எதுவும் பேசாத ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் இப்­போது மட்டும் கொதித்­தெ­ழு­வதும் உண்­மைக்கு மாறான கருத்­துக்­களை முன்­வைப்­பதும் ஏன் என்ற கேள்­வியை மேற்­கி­ளம்பச் செய்­கின்­றது.

ஐக்­கிய தேசிய கட்­சி­யி­ன­ரி­டமும் இன­வாத செயற்­பாட்­டா­ளர்கள் இருந்­தாலும் அவர்கள் சில சந்­தர்ப்­பங்­களில் தமது பேரி­ன­வாதப் போக்கை கடைப்­பி­டிக்­காது மறைத்து வைத்துக் கொண்­டனர். அவர்கள் அன்று ஆட்­சி­யா­ளர்­க­ளாக இருந்­த­ப­டியால் மௌனித்துக் கொண்­டனர். இப்­போது தாம் எதிர்க்­கட்­சி­தானே எதையும் எதிர்த்துப் பேசலாம் என்ற வகைக்குள் நின்­று­கொண்­டி­ருப்­பது தமக்கு பாது­காப்­பா­னது என்று கரு­தி­ய­தினால் இந்தக் கொதித்­தெ­ழுதல் சாத்­தி­ய­மாகி இருக்­கலாம் என கரு­து­வ­தற்கு வாய்ப்­பி­ருந்­தாலும், இதற்­கப்பால் இது­வொரு திட்­ட­மிட்டுச் செய்­யப்­பட்ட ஒரு செயற்­பா­டாக இருப்­ப­தற்கு அதிக வாய்ப்பு இருக்­கின்­றது என சாய்ந்­த­ம­ருது மக்கள் நம்­பு­வ­தற்கு உறு­தி­யான கார­ணங்கள் இல்­லா­மலும் இல்லை.

கல்­முனை மாந­கர சபை­யி­லி­ருந்து சாய்ந்­த­ம­ருது நக­ர­சபை பிரியக் கூடாது என்­பதில் உறு­தி­யாக இருப்­போர்­களின் முன்­னணி செயற்­பாட்­டா­ள­ராக நாடா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் இருக்­கின்றார். இவ­ரது கூற்­றுக்கும் எண்­ணத்­திற்கும் இது விட­யத்தில் அவ­ரது கட்சித் தலைவர் ரவூப் ஹக்­கீமும் உடன்­பட்டு செயற்­படும் ஒரு­வ­ரா­கவே இருந்து வரு­கின்றார்.

ஆதலால் இவர்­களின் தூண்­டு­கோலால் விமல் வீர­வன்ஸ மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் ஊடாக பொய்ப் பிர­சா­ரங்­களை மையப்­ப­டுத்தி பூதா­க­ர­மாகப் பேச வைப்­பதில் பின்­பு­ல­மாக இருந்­தி­ருக்க அதிக வாய்ப்பு இருக்­கின்­றது.

கல்­முனை மாந­கர சபை­யி­லி­ருந்து சாய்ந்­த­ம­ருது பிரியும் அதே­வே­ளைதான் கல்­மு­னையின் மாந­கர சபையின் வடக்கு எல்லை தாள­வட்­டுவன் சந்தி அல்­லது பாண்­டி­ருப்பு எனும் ஊரின் தொடக்கம் அமைய வேண்டும். அதுதான் முன்­னைய கல்­முனை பட்­டின சபையின் எல்லை என்று சொல்­லு­வதும் சாய்ந்­த­ம­ருது நக­ர­சபை பிரியக் கூடாது என்­பதன் மறு வார்த்­தைகள் என்­பதில் சந்­தே­க­மில்லை.

இவ்­வா­றான அடிப்­படை இல்லை என்றால், எல்லைப் பிரச்­சினை இருக்­கி­றது எனச் சொல்லும் கல்­முனை – கல்­மு­னைக்­குடி முஸ்லிம் தரப்­பி­னரும் தமிழ்த் தரப்­பி­னரும் ஒரே மேசையில் அமர்ந்து பேசு­வ­தற்­கான எந்தச் சந்­தர்ப்­பத்­தையும் எச்.எம்.எம்.ஹரீஸ் எம்.பி இன்­று­வரை ஏற்­ப­டுத்­த­வில்லை. ஆகக் குறைந்­தது தங்­க­ளிடம் அர­சியல் அதி­காரம் இருந்­த­தாக அவர் நம்­பிய நல்­லாட்சி காலத்­தி­லா­வது முயற்சி எடுக்­காமை அவ­ரது எதிர்ப்பு உணர்வைக் காட்டப் போது­மா­னது. இவ­ரது எதிர்ப்பை சரி காண்­பது தவிர வேறு வழி­யில்­லாத ஒரு­வ­ரா­கவே முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்­கீமும் இருந்தார்.

இவர்­களின் கூட்டுச் சதி­யி­னால்தான் சாய்ந்­த­ம­ருது நக­ர­சபை வழங்­கப்­பட்­டதன் பின்னர் அமைச்­ச­ரவை மற்றும் ஊட­கங்கள் என எதிர்­க­தை­யா­டல்கள் அவிழ்க்­கப்­பட்­டதைப் பார்க்­கின்றோம். ஆகவே, இவர்கள் மீது சாய்ந்­த­ம­ருது மக்கள் சந்­தே­கிப்­பது எப்­படித் தவ­றாகும்? ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் நெருங்­கிய தொடர்பு இவர்­க­ளுக்­குண்டு. இதன்­மூலம் அவர்கள் சார்ந்த எம்.பிக்கள் ஊடாக பெரும் பூதா­க­ரத்தை எழுப்­பு­வ­தற்கு அதிக வாய்ப்பு இருக்­கி­றது.

வெளிக்­க­ளத்தை சூடேற்­றியும் அமைச்­ச­ர­வையில் எதிரொலிக்கச் செய்யும் தந்திரோபாயமும் இதில் இருக்கலாம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டாய உயர்பீடக் கூட்டம் கடந்த 21.02.2020இல் நடைபெற்றது. இதில் சாய்ந்தமருது நகரசபை பிரகடனம் குறித்து தலைமைத்துவம் பேசியவையென காணொலியொன்று சமூக வலைத்தளங்களில் உலாவருகிறது. அதில்கூட அவர் நகரசபை வழங்கப்பட்டது சரியென்றும், இதனை கண்டித்தவர்களையும் தவறாகப் பேசியவர்களையும் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியினரையாவது கண்டித்துக் கொள்ளாத ஒரு மெத்தனப் போக்கையே காட்டியுள்ளார். இது கூட அவர்கள் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தி வைக்கின்றது.

அவர் ஐக்கிய தேசியக் கட்சியினர் மற்றும் இனவாதக் கும்பலின் கருத்துக்களுக்கு எதிராக உடனடியாக ஓர் ஊடக சந்திப்பை நடாத்தி கண்டித்து இது ஒரு தனி இராஜ்ஜியம் அல்ல என்பதை சுட்டிக்காட்ட முன்வரவில்லை. ரணில் மற்றும் சஜித் என்ற தலைமைகளுக்கு நிலைமையை எடுத்துரைத்து கட்சிக்காரர்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டிலும் இறங்கவில்லை.

மாறாக சாய்ந்தமருது மக்கள் இன்னும் தனது கட்சியின் ஏமாளிகளாக தொடர்ந்து பயணிக்க வைக்கும் எத்தனத்தையே அவர் செய்திருகிறார் என்ற தெளிவு நமது மக்களுக்கு முக்கியம்.

சாய்ந்தமருது நகரசபை பிரகடனத்தில் நமக்கு இன்றிருக்கும் நம்பிக்கையான பக்கங்கள் என்ற வகையில், பின்வரும் மூன்று விடயங்கள் குறித்து மிகுந்த தெளிவுடன் கூட்டுமொத்தமான நமதூர் மக்கள் இருக்க வேண்டிய அவசியத்தை ஞாபகப்படுத்தி வைப்பது எதிர்கால நலன்களுக்கு வழியாகும்.

(1) சாய்ந்தமருது நகரசபை பிரகடன வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டது எனச் சொல்லும் மற்றொரு வர்த்தமானி வெளிவராது இருப்பதும், (2) நகரசபை பிரகடன வர்த்தமானி வெளிவரக் காரணிகளாக அமைந்த பிரதமர் மஹிந்த, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைப்பாளர் பஷில் மற்றும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் ஆகிய சக்திகள் நம்முடன் இருப்பதும் நமதூர் மக்கள் அவர்களுடன் இருப்பதும், (3) நமது பள்ளிவாசல் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நமது நாட்டு முஸ்லிம் மக்களின் பெரும்பகுதியினர் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து, துணிவோடு கோத்தாபயவை ஆதரிக்க முன்வந்தமை.

இதனடிப்படையில் நாம் இம்மூன்று விடயங்களையும் எதற்தாகவும் நிராகரித்துவிடாது எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் சங்கமித்து பயணிப்பதில்தான் நமது நகரசபையின் எதிர்காலமும் வெற்றியும் அதன் பயன்களும் நம்மை அடைந்துகொள்ள உதவக் கூடியது என்பதை வலுவாக நம்பி செயற்படுவதுதான் இன்று சாய்ந்தமருது மக்களுக்கு இருக்கும் ஒரே வழி.-Vidivelli

  • எம்.எம்.எம்.நூறுல்ஹக்
    சாய்ந்­த­ம­ருது – 05

Leave A Reply

Your email address will not be published.