இந்தியா: குடியுரிமைச் சட்டம் தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் மோதல்; 9 பேர் பலி

0 852

இந்­தியத் தலை­ந­கரில் திங்­கட்­கி­ழமை இரண்­டா­வது நாளா­கவும் குடி­யு­ரிமைச் சட்­டத்­திற்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் இடம்­பெற்ற ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்ட குழுக்­க­ளுக்­கி­டை­யே­யான மோதல் வன்­மு­றை­யாக வெடித்­த­தை­ய­டுத்து நேற்று மாலை வரை 9 பேர் உய­ி­ர­ி­ழந்­துள்­ளனர்.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்பின் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்­திற்கு முன்­ன­தாக ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களைக் கலைந்­து­போகச் செய்­யு­மாறு ஆளும் பார­தீய ஜனதாக் கட்­சியின் தலை­வர்­களுள் ஒரு­வ­ரான கபில் மிஷ்ரா கட்­டளை பிறப்­பித்­ததைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை வன்­மு­றைகள் ஆரம்­ப­மா­கின.

வட­கி­ழக்கு டில்­லியில் பல இடங்­களில் ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் கற்­களை வீசி தாக்­கு­தல்­களை நடத்­தினர். வாக­னங்­க­ளுக்கும் கடை­க­ளுக்கும் தீ மூட்­டினர்.

புதிய குடி­யு­ரிமை திருத்தச் சட்டம் முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்ட பங்­க­ளாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்­கா­னிஸ்தான் ஆகிய நாடு­களில் மோச­மாக நடத்­தப்­பட்­டதன் கார­ண­மாக இந்­தி­யாவில் சட்­ட­வி­ரோ­த­மாக குடி­யே­றி­யுள்ள இந்து, கிறிஸ்­தவ மற்றும் ஏனைய சமயச் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு குடி­யு­ரி­மை­யினை வழங்­கு­வ­தற்கு அனு­ம­திக்­கின்­றது.

இந்தச் சட்டம் இந்­தி­யாவின் மதச்­சார்­பற்ற கொள்­கை­யினை அப்­பட்­ட­மாக மீறு­வ­தா­கவும் நாட்டின் 200 மில்­லியன் முஸ்­லிம்­க­ளையும் ஓரம்­கட்­டு­வ­தற்கு மோடி அர­சாங்கம் எடுக்கும் தற்­போ­தைய முயற்சி என விமர்­ச­கர்கள் தெரி­விக்­கின்­றனர்.

உயி­ரி­ழந்த ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ரட்டன் லால் என அடையாம் காணப்­பட்­டுள்ளார்.

வன்­மு­றைகள் உச்ச அளவில் இடம்­பெற்ற பிர­தே­சத்­திற்கு இவர் பொறுப்­பாக்­கப்­பட்­டி­ருந்தார்.

கிழக்கு டில்­லியின் பிரதிப் பொலிஸ் ஆணை­யாளர் அமித் வர்­மா­வுக்கு தலை­யிலும் கையிலும் காயங்கள் ஏற்­பட்­டுள்­ள­தோடு அண்­மை­யி­லுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பொதுமக்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

ஆறு பொலிஸார் உள்ளடங்கலாக 45 பொதுமக்களும் டில்லியிலுள்ள வைத்திய சாலையொன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.