மாகாண சபை, உள்ளூராட்சி தேர்தல்களை விகிதாசார முறையிலேயே நடத்த வேண்டும்

மு.கா. பேராளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி வலியுறுத்து

0 796

நடை­மு­றை­யி­லுள்ள பாரா­ளு­மன்ற தேர்தல் முறை போலவே மாகாண சபை மற்றும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­க­ளையும் விகி­தா­சாரத் தேர்தல் முறை மூலமே நடத்த வேண்­டு­மென முஸ்லிம் காங்­கிரஸ் பேராளர் மாநாடு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

அத்­துடன், சிறு­பான்மை மற்றும் சிறு கட்­சி­க­ளி­னூ­டான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களைத் தெரிவு செய்­வ­தற்­கான 5சத­வீத வெட்­டுப்­புள்­ளியை 12.5வீத­மாக அல்­லது அதற்கு மேலாக உயர்த்தும் சதி முயற்­சி­யையும் முஸ்லிம் காங்­கிரஸ் கண்­டித்­துள்­ளது.

கண்டி, பொல்­கொல்லை மஹிந்த ராஜ­பக் ஷ கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் 29ஆவது பேராளர் மாநாட்­டின்­போதே இது தொடர்­பான தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டு­ள்­ளன. மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் தலை­மையில் இடம்­பெற்ற குறித்த மாநாட்டில் மேலும் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்கள் வரு­மாறு.

1. எமது தாய் நாடு என்ற அடிப்­ப­டையில் இலங்­கையின் இறை­யாண்மை, பாது­காப்பு, ஜன­நா­யக விழு­மி­யங்கள் மற்றும் சட்­ட­வாட்­சியை நிலை­நி­றுத்­துதல் போன்ற விட­யங்­களில் ஒன்­று­பட்ட இலங்கை சமு­தா­ய­மாக, இயன்ற பங்­க­ளிப்­பையும், ஒத்­து­ழைப்­பையும் வழங்­கு­வ­தென இம்­மா­நாடு தீர்­மா­னிக்­கி­றது.

2. சமூ­கங்­க­ளுக்­கி­டையில் இன மற்றும் மத­வா­தங்­க­ளைத்­தூண்டி இன நல்­லி­ணக்­கத்தைச் சீர்­கு­லைக்கும் எந்­த­வி­த­மான சக்­தி­யையும் இம்­மா­நாடு வன்­மை­யாக ஆட்­சே­பிக்­கி­றது.

3. பரந்து வாழும் சிறு­பான்மை மற்றும் சிறு கட்­சி­க­ளி­னூ­டான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் தெரிவை பாதிக்கச் செய்யும் வகையில் தற்­போது நடை­மு­றை­யி­லுள்ள 5 சத­வீத வெட்­டுப்­புள்­ளியை 12.5 சத­வீ­த­மாக அல்­லது அதற்கு மேலாக உயர்த்தும் சதி­மு­யற்­சியை இம்­மா­நாடு கண்­டிப்­ப­துடன், அதற்­கெ­தி­ராகப் போரா­டு­வ­தற்கு திட­சங்­கற்பம் பூணு­கின்­றது.

4. நடை­மு­றை­யி­லுள்ள பாரா­ளு­மன்ற தேர்தல் முறை போலவே மாகாண சபை மற்றும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­க­ளையும் விகி­தா­சாரத் தேர்தல் முறை மூலமே நடத்த வேண்­டு­மென இம்­மா­நாடு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­கின்­றது.

5. இலங்கை அர­சாங்கம் தனது குடி­மக்கள் அனை­வ­ரி­னதும் மனித உரி­மைகள் மற்றும் அடிப்­படை உரி­மை­களை உறுதி செய்­வ­துடன், சமூ­கங்­க­ளுக்­கி­டை­யே­யான மீளி­ணக்கம் மற்றும் நல்­லி­ணக்கம் என்­ப­வற்றை முன்­னெ­டுப்­ப­தி­லி­ருந்து பின்­வாங்­காமல் சக­ல­ரையும் நீதி­யாக நடத்­து­வதன் மூலம் இலங்கை மக்­க­ளுக்கும் சர்­வ­தே­சத்­திற்கும் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­க­ளின்­படி தனது பொறுப்­புக்­களை சரி­வர உரிய முறையில் செயற்­ப­டுத்த வேண்­டு­மெ­னவும் இம்­மா­நாடு வற்­பு­றுத்­து­கின்­றது.

6. 1990ஆம் ஆண்டு பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்ட வட­மா­காண முஸ்லிம் மக்­க­ளது மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பாக நியா­ய­மா­னதும், மிகவும் பொருத்­த­மு­டை­ய­து­மான மீள்­கு­டி­யேற்ற பொறி­மு­றை­யி­னூ­டாக அவர்­க­ளது மீள் குடி­யேற்­றத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­துடன், அவர்­க­ளது பிரத்­தி­யே­க­மான தேவைப்­பா­டு­களை உள்­வாங்கி அம்­மக்­களின் வாக்­க­ளிக்கும் உரி­மை­யிலும், வாக்­காளர் பதிவு தொடர்­பிலும் நீதி­யா­னதும் நியா­ய­மா­ன­து­மான தீர்வை அரசு பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் எனவும் இம்­மா­நாடு தீர்­மா­னித்து வலி­யு­றுத்­து­கின்­றது.

7. அர­சி­ய­ல­மைப்பின் 19ஆவது திருத்தச் சட்­டத்தின் மூலம் ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஜன­நா­யக மேம்­பாடு, பாரா­ளு­மன்ற சுதந்­திரம், சுதந்­தி­ர­மான நீதித்­துறை, சுயா­தீ­ன­மான ஆணைக்­கு­ழுக்கள் மற்றும் அர­சி­ய­ல­மைப்பு சபை போன்­ற­வற்றை இல்­லாமல் செய்­வ­தற்­கான அல்­லது நலி­வ­டையச் செய்­வ­தற்­கான திருத்­தங்­க­ளுக்கு எவ்­வி­தத்­திலும் ஆத­ரவு வழங்­கு­வ­தில்லை எனவும், நடை­முறைச் சிக்­கல்­களை உரு­வாக்­கு­கின்ற அடை­யாளம் காணப்­பட்ட ஒரு­சில திருத்­தங்­க­ளுக்கு மாத்­திரம் இணங்­கு­வ­தெ­னவும், இம்­மா­நாடு தீர்­மா­னிக்­கி­றது.

8. எமது தாய்­நாட்டில் வசிக்கும் சகல இன மக்­களும், சமூ­கங்­களும் சம­மா­கவும் கௌர­வ­மா­கவும் வாழ்­வ­தற்கு இசை­வான சூழ்­நி­லையை உறு­திப்­ப­டுத்­தக்­கூ­டி­யதும் அர­சியல் அபி­லா­சை­களை அனு­ப­விக்­கக்­கூ­டி­ய­து­மான அதி­காரப் பர­வ­லாக்­கலை உறு­திப்­ப­டுத்­தக்­கூ­டிய நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் முன்­னெ­டுக்க வேண்டும் எனவும் இம்­மா­நாடு தீர்­மா­னிக்­கின்­றது.

9. முஸ்லிம் தனியார் சட்­டத் தை முற்­றாக நீக்­கு­வ­தற்­கான எந்­த­வொரு முன்­மொ­ழி­வையும் முழு­மை­யாக நிரா­க­ரிப்­ப­துடன், அவ­சி­ய­மான இஸ்­லா­மிய வரை­ய­றை­களை மீறா­ததும் மற்றும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் உடன்­பாட்­டுடன் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­து­மான சீர்­தி­ருத்­தங்­க­ளுக்கு உடன்­ப­டு­வ­தெ­னவும் இம்­மா­நாடு தீர்­மா­னிக்­கின்­றது.-Vidivelli

  • வத்­து­காமம், செங்­க­ட­கல நிரு­பர்கள்

Leave A Reply

Your email address will not be published.