உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: ஒரு பெண் உட்பட இருவருக்கு பிணை

59 பேரின் விளக்கமறியல் மேலும் நீடிப்பு

0 840

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் மேலும் 59 பேரின் விளக்கமறியல் அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 21.04.2019 உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தாக்­கு­தலின் பின்னர் ஸஹ்றான் குழு­வோடு தொடர்­பு­டை­ய­வர்கள் என்றும் ஹம்­பாந்­தோட்டை மற்றும் நுவ­ரெ­லியா போன்ற இடங்­க­ளுக்கு பயிற்­சிக்­காக சென்­றார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரிலும் கைது செய்­யப்­பட்ட குறித்த சந்­தேக நபர்கள் மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி ஏ.சி. ரிஸ்வான் முன்­னி­லையில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். இதன்­போது ஒரு பெண் உட்­பட இரண்டு பேர் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­ட­துடன் ஏனைய 59 பேரி­னதும் விளக்­க­ம­றியல் எதிர்­வரும் 10 ஆம் திகதி வரை நீடிக்­கப்­பட்­டுள்­ளது.
குறித்த இரண்டு சந்­தேக நபர்­களும் இரு சரீரப் பிணை­க­ளிலும் 25000 ருபா ரொக்கப் பிணை­யிலும் விடு­தலை செய்­யப்­பட்­டனர்.

பிணையில் விடு­தலை செய்­யப்­பட்ட குறித்த பெண் சாய்ந்­த­ம­ருதில் 26.04.2019 அன்று இடம்­பெற்ற வெடிப்புச் சம்­ப­வத்தின் போது உயி­ரி­ழந்த ஸஹ்றான் குழு உறுப்­பி­ன­ரான முகம்­மது நியாஸ் என்­ப­வரின் மனை­வி­யெனத் தெரிய வரு­கின்­றது.

பிணையில் விடு­தலை செய்­யப்­பட்ட இரண்டு பேரையும் எதிர்­வரும் 28.04.2020 அன்று நீதி­மன்றில் ஆஜ­ரா­க­வேண்டும் எனவும் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.
சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் வழங்­கப்­பட்ட அறி­வு­றுத்­த­லுக்­க­மை­யவே மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்­றினால் இவர்கள் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டனர். கடந்த 21.04.2019 உயிர்த்த ஞாயி­றன்று இடம்­பெற்ற தாக்­கு­தலின் பின்னர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சந்­தேக நபர்கள் அனை­வரும் பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் மட்­டக்­க­ளப்பு நீதி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்­டனர். இதன்­போது நீதிமன்றத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டிருந்ததுடன் நீதிமன்றுக்கு வெளியே சந்தேக நபர்களின் உறவினர்களும் குழுமியிருந்தமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

  • எம்.எஸ்.எம்.நூர்தீன்

Leave A Reply

Your email address will not be published.