ஸஹ்ரானின் பயங்கரவாத கும்பலின் சர்வதேச வலையமைப்பு குறித்து விஷேட விசாரணைகள்

ஆஸி., மாலைதீவு, துருக்கி வலையமைப்பு தொடர்பில் அவதானம்

0 794

4/21 உயிர்த்த ஞாயி­றன்று இலங்­கையில் இடம்­பெற்ற தொடர் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை நடாத்­திய ஸஹ்ரான் ஹாஷிமின் பயங்­க­ர­வாத கும்­பலின் சர்­வ­தேச வலை­ய­மைப்பு குறித்த விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

சி.ஐ.டி. எனப்­படும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் பிரத்­தி­யேக விசா­ர­ணைக்­குழு இது தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தாக அறி­ய­மு­டி­கின்­றது. சி.ஐ.டியினர் முன்­னெ­டுத்­துள்ள விசா­ர­ணை­களில், ஸஹ்­ரானின் பயங்­க­ர­வாதக் கும்பல் அவுஸ்­தி­ரே­லியா, துருக்கி மற்றும் மாலை­தீவு ஆகிய நாடு­களில் இயங்கும் சில அமைப்­புக்கள் மற்றும் நபர்­க­ளுடன் விஷேட தொடர்­பு­களைப் பேணி­யுள்­ளமை தொடர்­பி­லான தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அதனை மையப்­ப­டுத்தி மேல­திக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அவ்­வி­சா­ர­ணை­க­ளுக்கு அவுஸ்­தி­ரே­லிய பெடரல் பொலிஸ் மற்றும் இண்­டர்­போலின் ஊடாக உத­வி­களும் பெறப்­பட்­டுள்­ளன.

அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜா­வு­ரி­மையை பெற்­றுள்ள நபர் ஒரு­வரின் மகன் ஸஹ்ரான் கும்­ப­லுடன் பேணிய தொடர்பு குறித்து தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்ட சி.ஐ.டியின் உய­ர­தி­காரி ஒருவர், அந்த விட­யத்தை உறு­தி­செய்ய மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வ­தாகக் கூறினார்.

அத்­துடன் ஸஹ்ரான் குழுவின் பிர­பல உறுப்­பி­ன­ராகக் கரு­தப்­படும் மாவ­னெல்லை – புத்தர் சிலை உடைப்பு விவ­கா­ரத்தின் சூத்­தி­ர­தா­ரி­யான சாதிக் அப்­துல்லாஹ் எனும் சந்­தேக நபர், துருக்­கி­யூ­டாக சிரி­யா­வுக்கு சென்று பயிற்சி பெற்­றுள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், அதற்­கான நட­வ­டிக்­கை­க­ளிலும் குறித்த நபரின் பங்­கி­ருப்­ப­தாக சி.ஐ.டி.யினர் கிடைக்கப் பெற்­றுள்ள தக­வல்­க­ளுக்­க­மைய சந்­தேகம் வெளி­யிட்­டுள்­ளனர்.

எவ்­வா­றா­யினும், சாதிக் அப்­துல்லாஹ் எனும் ஐ.எஸ். ஐ.எஸ். பயிற்சி பெற்­ற­தாக நம்­பப்­படும் சந்­தேக நபரை, துருக்­கி­யி­லி­ருந்து சிரி­யா­வுக்கு அழைத்­துச்­சென்று ஒருங்­கி­ணைப்பு நட­வ­டிக்­கை­களை மாலை­தீவுப் பிரஜை ஒரு­வரே செய்­துள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், அந்த மாலை­தீவுப் பிரஜை யார் என்­பதைக் கண்­ட­றிய இன்­டர்போல் பொலி­ஸாரின் உத­வி­யுடன் அவர்­க­ளது தகவல் கட்­ட­மைப்பை ஆராய்ந்தும் சி.ஐ.டி. விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.

4/21 உயிர்த்த ஞாயி­றன்று இலங்­கையில் இடம்­பெற்ற தொடர் தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தல்­களை பின்­ன­ணி­யி­லி­ருந்து வழி நடாத்­தி­ய­தாக நம்­பப்­படும் நான்கு மாலை­தீவுப் பிர­ஜை­களைக் கைது­செய்ய சி.ஐ.டியின் தனிப்­ப­டை­யொன்று சிறப்பு விசா­ர­ணை­களை ஆரம்பித்­துள்­ள­தாக கடந்தவாரம் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண ஊடக சந்திப்பில் அறிவித்த நிலையில், அதில் அடையாளம் வெளிப்படுத்தப்படாத இரு மாலைதீவுப் பிரஜைகளில், சாதிக் அப்துல்லாஹ்வை ஐ.எஸ். ஐ.எஸ். உடன் தொடர்புபடுத்தி இணைப்பாளராக செயற்பட்ட நபரும் அடங்குவதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.