சாய்ந்தமருது நகர சபை விவகாரம்: அமைச்சரவைத் தீர்மானத்தை வாபஸ் பெறுக

ஜனாதிபதி,பிரதமருக்கு சாந்தமருது மறுமலர்ச்சி மன்றம் கடிதம்

0 827

சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானியை இடைநிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை வாபஸ்பெற நடவடிக்கை எடுக்குமாறு சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ, உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ ஆகியோருக்கு சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றம் அவ­சரக் கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்­ளது.

மன்­றத்தின் தலைவர் எம்.ஐ.அப்துல் ஜப்பார், பொதுச் செய­லாளர் கலீல் எஸ்.முஹம்மட் ஆகியோர் கையொப்­ப­மிட்டு அனுப்பி வைத்­துள்ள அக்­க­டி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­வது;

“சாய்ந்­த­ம­ருது மக்­களின் நீண்­ட­காலத் தேவை­யாக இருக்­கின்ற தனி­யான நகர சபையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக புதிய அர­சாங்கம் விரை­வாக நட­வ­டிக்கை எடுத்­த­மைக்­காக நாம் ஏலவே நன்­றியும் பாராட்டும் தெரி­வித்­தி­ருந்தோம். அதற்­காக மீண்­டு­மொரு முறை எமது உள­மார்ந்த நன்­றியைத் தெரி­விப்­பதில் மகிழ்ச்­சி­ய­டை­கிறோம்.

எனினும், சாய்ந்­த­ம­ருது நகர சபையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­காக இம்­மாதம் 14ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்­தலை ஒரு வாரம் கடப்­ப­தற்கு முன்­ப­தா­கவே கடந்த 19ஆம் திகதி இடம்­பெற்ற அமைச்­ச­ரவை கூட்­டத்­தின்­போது தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக அமைச்­ச­ரவை பேச்­சாளர் அறி­வித்­துள்ளார். இந்த அறி­விப்­பா­னது எமது சாய்ந்­த­ம­ருது மக்­க­ளி­டையே பெரும் அதிர்ச்­சி­யையும் கவ­லை­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

எமது மக்­களின் நீண்­ட­கால தாகத்தை தீர்ப்­ப­தற்­காக கடந்த ஜனா­தி­பதித் தேர்தல் காலத்தில் எமது மண்­ணுக்கு பிர­சா­ரத்­திற்­காக வருகை தந்­தி­ருந்த தற்­போ­தைய பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ ஆகியோர் வழங்­கி­யி­ருந்த உறு­தி­மொ­ழிக்­க­மை­வா­கவே சாய்ந்­த­ம­ருது நகர சபைக்­கான வர்த்­த­மானி அறி­வித்தல் துரி­த­மாக வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றான வர்த்­த­மானி அறி­வித்­தலை சிலரின் விஷ­மத்­த­ன­மான பிர­சாரம் மற்றும் எதிர்ப்­புகள் கார­ண­மாக அமைச்­ச­ர­வை­யினால் இடை­நி­றுத்தம் செய்­வ­தென்­பது எந்த வகை­யிலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாகும். ஒரு வர்த்­த­மானி அறி­வித்­த­லூ­டாக எமது கோரிக்­கையை நிறை­வேற்றி விட்டு மறு­பக்கம் அந்த வர்த்­த­மா­னிக்கு அமைச்­ச­ரவை இடைக்­கா­லத்­தடை விதித்­தி­ருப்­ப­தா­னது எமது மக்­களை மிகப்­பெரும் ஏமாற்­றத்தில் தள்­ளி­யுள்­ளது.

மேற்­படி எமது கோரிக்­கை­யா­னது கடந்த 30 வருட கால­மாக இருந்து வரு­கின்ற ஓர் அடிப்­படை உரி­மை­யோடு சம்­பந்­தப்­பட்ட ஒன்­றாகும். 1987 காலப்­ப­கு­திக்கு முன்­னி­ருந்த எமது சபை அன்­றைய ஐக்­கிய தேசியக் கட்சி அர­சினால் இர­வோ­டி­ர­வாக இல்­லா­தொ­ழிக்­கப்­பட்­டது. அத்­த­கைய சபை­யி­னையே நாம் மீளவும் கோரி நிற்­கிறோம். மாறாக அது இனத்­துவ அடை­யா­ளத்­து­ட­னான ஒரு கோரிக்­கை­யல்ல என்­ப­த­னையும் இந்த சந்­தர்ப்­பத்தில் தெரி­வித்துக் கொள்கிறோம். எனவே, எமது யதார்த்தபூர்வமான கோரிக்கையை உடன் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, சாய்ந்தமருது நகர சபைக்கான வர்த்தமானி அறிவித்தலுக்குத் தடை விதிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தை உடனடியாக மீளப்பெறுமாறு மிகவும் தயவாய் வேண்டுகிறோமென அக்கடிதங்களில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன.-Vidivelli

  • சாய்ந்தமருது நிருபர்

Leave A Reply

Your email address will not be published.