முகத்தை மறைக்கும் ஆடைகள் அணிவதை தடை செய்ய வேண்டும்

மீறுவோரை பிடியாணையின்றி கைது செய்க: தேசிய பாதுகாப்பு மேற்பார்வை குழு பரிந்துரை

0 862

புர்கா , நிகாப் போன்ற ஆடை­களை குறிப்­பிட்டு தடை செய்­வது ஓரி­னத்தை சுட்­டிக்­காட்­டு­வ­தாக இருப்­ப­தனால் அப்­பெ­யர்­களை குறிப்­பி­டு­வ­தற்கு பதி­லாக ஒரு­வ­ரது முகத்தின் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யாத மற்றும் சிர­ம­மான முக மறைப்­புக்கள், தலைக் கவ­சங்­களை தடை செய்ய வேண்­டு­மென தேசிய பாது­காப்பு தொடர்பான துறைசார் மேற்­பார்வை குழு பரிந்­துரை செய்­துள்­ளது. அத்­துடன் இவ்­வா­றான முக மூடி­க­ளுடன் இருப்போர் அதனை அகற்­றாத பட்­சத்தில் அவர்­களை பிடி­யா­ணை­யின்றி கைது செய்யும் அதி­காரம் பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட வேண்­டு­மெ­னவும் குறிப்­பிட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை தேசிய பாது­காப்பு தொடர்­பான பாரா­ளு­மன்ற துறைசார் மேற்­பார்வை குழுவின் தவி­சாளர் மலிக் ஜய­தி­லக்­க­வினால் சமர்­ப்பிக்­கப்­பட்ட அறிக்­கை­யி­லேயே இந்த பரிந்­துரை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

முஸ்லிம் பெண்­களின் ஆடை அணிதல் தொடர்­பான பிரச்­சினை உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் இலங்கை சமூ­கத்தில் முக்­கிய பிரச்­சி­னை­யாக காணப்­பட்­டது. இந்த ஆடை­களில் புர்­காவும் நிகா­புமே பிரச்­சி­னைக்­கு­ரி­ய­தாக காணப்­ப­டு­கின்­றன. கண்­ணி­யத்­துடன் நடந்­து­கொள்ளும் முஸ்லிம் பெண்கள் தனது கண­வரை தவிர்ந்த வேறு ஆண்­க­ளுக்கு தமது முகத்தை காட்ட விரும்­பாமை கார­ண­மா­கவே இந்த ஆடை­களை அணி­வ­தாக அவர்கள் தரப்பில் வாதம் முன்­வைக்­கப்­பட்­டாலும் இந்த புது­மா­தி­ரி­யான அரே­பிய ஆடை­க­ளுக்கு பெரும்­பான்மை சமூ­கத்தில் கடும் எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது.

இந்த ஆடை­க­ளுக்கு வெளி­நா­டுகள் பலவும் முஸ்­லிம்­களை பெரும்­பான்­மை­யாக கொண்ட நாடுகள் பலவும் தடை விதித்­துள்­ள­மையும் எம்மால் கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் 2019 ஏப்ரல் 30 ஆம் திகதி ஜனா­தி­ப­தியின் அவ­சர சட்ட ஏற்­பா­டு­களின் கீழ் வெளி­யி­டப்­பட்ட 2121/1ஆம் இலக்க அதி விசேட வர்த்­த­மானி பத்­தி­ரிகை மூலம் புர்கா, நிகாப் தடை செய்­யப்­பட்­டது. அத்­துடன் நீதி மற்றும் சிறைச்­சாலை மறு­சீ­ர­மைப்பு அமைச்­ச­ரினால் இவ்­வி­டயம் தொடர்பில் பொது இடங்­களில் முகத்தை மறைத்­தலை தடை செய்தல் என்ற தலைப்பில் 2019.07.17 அன்று அமைச்­ச­ரவை பத்­தி­ர­மொன்று சமர்ப்­பிக்­கப்­பட்ட போதும் அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் அமைச்­சர்­க­ளி­ட­மி­ருந்து எழுந்த எதிர்ப்­பினால் அதற்கு அங்­கீ­காரம் கிடைக்­க­வில்லை.

இந்­நி­லையில் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்­களின் பின்னர் உரு­வான தேசிய பாது­காப்பு தொடர்­பான துறைசார் மேற்­பார்வை குழு முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைப்­பது தொடர்பில் ஆரம்­பத்தில் இருந்து தீவிர கவனம் செலுத்­தி­யது. இந்த ஆடை­க­ளுக்கு ஜனா­தி­ப­தியால் தடை விதிக்­கப்­பட்ட போதும் அதனை நாட்டின் பொது­வான சட்­டத்தின் கீழ் தடை செய்­வ­தற்­கு­ரிய சட்டம் வகுக்­கப்­பட வேண்­டு­மென சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. இதற்­க­மைய இத்­த­கைய முக மறைப்­புகள் அணி­யப்­ப­டு­வதை குற்­ற­வியல் சட்டக் கோவைக்கு அமைய ஒரு குற்­ற­மாக அறி­விப்­ப­தற்கு ஏற்­பு­டை­ய­தாக எடுக்க வேண்­டிய சட்ட நட­வ­டிக்­கைகள் தொடர்பில் எமது குழுவில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

இதற்­க­மைய புர்கா , நிகாப் போன்ற பெயர்­களை குறிப்­பி­டு­வ­தற்கு பதி­லாக ஒரு­வ­ரது முகத்தின் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள முடி­யாத மற்றும் சிர­ம­மான முக மறைப்­புகள் , தலைக் கவ­சங்­களை தடை செய்தல் என குறிப்­பி­டுதல் பொருத்­த­மா­ன­தென்ற கருத்து எமது குழுவில் முன்­வைக்­கப்­பட்­டது. புர்கா , நிகாப் என்று குறிப்­பி­டு­வது ஓர் இனத்தை சுட்­டிக்­காட்­டு­வ­தாக அமைந்­து­வி­டலாம் என்­ப­தா­லேயே இம்­மு­டிவு எட்­டப்­பட்­டது.

இது தொடர்பில் தண்­டனை சட்டக் கோவையில் இடம்­பெற வேண்­டு­மென எமது குழு­வினால் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள திருத்­தங்கள் வலு­வுக்கு வந்த பின்னர் ஒரு நபர் பொது இடத்தில் முகத்தை மூடிக்­கொண்டு இருக்கும் போது அந்த நபரின் ஆள் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக குறித்த முக மூடியை அகற்­று­மாறு கூறு­வ­தற்கு பொலி­ஸா­ருக்கு அதி­காரம் இருக்க வேண்டும். ஒரு பொலிஸ் உத்­தி­யோ­கஸ்தர் அத்­த­கைய வேண்­டு­கோளை விடுக்கும் போது குறித்த நபர் அதற்கு கட்­டுப்­பட மறுப்­பா­ராயின் பிடி­யா­ணை­யின்றி அவரைக் கைது செய்யும் அதி­காரம் பொலி­ஸா­ருக்கு இருக்க வேண்­டு­மெ­னவும் அந்த பரிந்­து­ரையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் இலங்­கையை போன்று முழு உல­கையும் உலுக்­கி­யி­ருந்­தது. இது­வரை காலமும் எமது நாட்டின் சட்­டத்தில் காணப்­பட்ட குறை­பா­டுகள் கார­ண­மா­கவே இந்த குண்­டுத்­தாக்­குதல் நடை­பெற்­றது. இத்­தாக்­கு­த­லை­ய­டுத்து நாட்டின் தேசியப் பாது­காப்பு குறித்து அனைத்து தரப்­பி­ன­ராலும் கேள்­வி­யெ­ழுப்­பப்­பட்­டது. மீண்டும் தேசிய பாது­காப்பு வலுப்­ப­டுத்­தப்­பட வேண்­டு­மென குறித்த தாக்­குதல் எமக்கு எடுத்­துக்­காட்­டி­யது.

மூன்று தசாப்­த­காலம் தீவ­ர­வா­தத்­திற்கு நாம் முகங்­கொ­டுத்து வெற்றி கண்­டி­ருந்த போதிலும் உயிர்த்த ஞாயி­று­தினம் சம்­பி­ர­தா­யத்­துக்கு மாறான ஒரு பயங்­க­ர­வா­தத்­திற்கு முகங்­கொ­டுத்­தி­ருந்தோம். குழு­வுக்கு முன்­வைக்­கப்­பட்ட சிபா­ரி­சு­க­ளுக்கு அமைய அது முஸ்லிம் அல்­லது இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் என்ற சொல்லை பயன்­ப­டுத்­தாது புதிய பயங்­க­ர­வாதம் என பயன்­ப­டுத்­து­மாறு முன்­மொ­ழி­யப்­பட்­டது.

1990களின் பிற்­ப­கு­தியில் உல­க­ளா­விய ரீதியில் எழுச்சி கண்ட பயங்­க­ர­வா­தத்­திற்கு புதிய பயங்­க­ர­வாதம் என்றே விளக்­க­ம­ளித்­துள்­ளனர். என்­றாலும், குறித்த பங்­க­ர­வா­தத்தின் பின்­பு­லத்தில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் உள்­ளமை ரக­சி­ய­மல்ல. உயிர்த்த ஞாயி­று­தின தாக்­கு­தல்­களை தொடர்ந்து இஸ்­லா­மிய மற்றும் முஸ்லிம் என்ற பயங்­க­ர­வாத சொற்கள் நாட்டில் தலை­தூக்­கி­ய­மையால் பல ஆண்­டு­கா­ல­மாக இந்­நாட்டில் வாழ்ந்து வரும் சிங்­களம், தமிழ், முஸ்லிம் என அனைவர் மத்­தி­யிலும் குழப்­ப­க­ர­மான சூழ்­நிலை தோன்றும் அபாயம் ஏற்­பட்­டது. இது நல்­லி­ணக்கம் மற்றும் மத சுதந்­தி­ரத்­திற்கு அச்­சு­றுத்­த­லாக மாறி­யது.

சில சட்­டங்கள் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் தனிப்­பட்ட தேவைக்கு ஏற்­பவே பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளதை எமது குழுவால் அறிய முடிந்­தது. இவை ஒட்­டு­மொத்த அல்­லது பெரும்­பான்மை முஸ்­லிம்­களின் கோரிக்­கைக்கு அமை­வாக இடம்­பெற்­றவை அல்ல.

எமது நாட்டைப் போன்று பல நாடுகள் புதிய பயங்­க­ர­வா­தத்­திற்கு முகங்­கொ­டுத்­துள்­ளன. பல நாடுகள் ஆயத்­த­மாக உள்­ளன. 1990 களின் பின்­ன­ராக புதிய பயங்­க­ர­வா­தத்­திற்கு தேசிய எல்­லை­யொன்று இல்லை. தெளி­வான தலை­மைத்­துவம் அல்­லது வழி­ந­டத்தல் இல்லை. மத ரீதியில் செயற்­படும் தனி­ந­பர்கள் அல்­லது குழுக்­களே இந்த புதிய பயங்­க­ர­வா­தத்தில் அடை­யா­ளங்­கா­ணப்­பட்­டுள்­ளன.

நாம் ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தி­யதில் புதிய பயங்­க­ர­வா­தத்தை எதிர்­கொள்ள புதிய சட்­டங்கள் மற்றும் சட்ட மறு­சீ­ர­மைப்­புகள் அவ­சியம் என்­பது உண­ரப்­பட்­டுள்­ளது. உல­க­ளா­விய ரீதியில் இவற்­றைதான் செய்­துள்­ளனர். உயிர்த்த ஞாயி­று­தினத் தாக்­குதல் மற்றும் அதற்கு முன்னர் முதல் இனங்­க­ளுக்கு இடையில் ஏற்­பட்­டு­வரும் முரண்­பா­டு­க­ளுக்கு தீர்­வு­காணும் வகையில் தேசிய பாது­காப்பு தொடர்­பி­லான துறைசார் மேற்­பார்­வைக்­குழு சில சிபா­ரி­சு­களை முன்­வைக்­கி­றது.

21ஆம் நூற்­றாண்­டுக்கு ஏற்ற இலங்­கை­யர்­க­ளையும், தமிழ்,முஸ்லிம், சிங்­களம் என மூன்று இனங்­க­ளுக்கு இடை­யிலும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் உரிய நட­வ­டிக்­கை­க­ளையும் சட்­ட­தி­ருத்­தங்­க­ளையும் மேற்­கொள்ள வேண்டும். மத போதனை நிலை­யங்­களை மூடு­வது முதல் மத்­ரசா பாட­சா­லைகள் வரை அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. இலங்­கை­யர்கள் என்ற சிந்­த­னையும் தனித்­து­வத்­தையும் பின்­பற்றும் சிங்­களம், தமிழ், முஸ்லிம் சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்டும்.

கல்வி கற்கும் சகல மாண­வர்­க­ளுக்கும் ஒப்­பீட்டு மதக் கல்வி,கலா­சார பன்­மைத்­துவம் பற்­றிய கல்வி வழங்­கப்­பட வேண்டும்.இன,மத மற்றும் ஏனைய சமு­தாய அடை­யா­ளங்­களை வெளிப்­ப­டுத்­து­கின்ற பெயர்­க­ளுடன் கூடிய பாட­சா­லை­களின் பெயர்­களை மாற்ற வேண்டும். மத்­ரஸா நிறு­வ­னங்கள் விசேட கல்வி நிறு­வ­னங்­க­ளாக கருதி மௌல­வி­மார்­க­ளி­னூ­டாக பயிற்­று­விக்­கப்­பட வேண்டும். 16 வயது பூர்த்தி செய்­யப்­பட்­ட­வர்­களே மத்­ர­ஸாக்­களில் சேர்க்­கப்­பட வேண்டும்.

மேலும் அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் விரிவாக கட்டமைப்பு ரீதியில் திருத்தப்பட வேண்டும். மணமகள், மணமகன் இருவரும் திருமணத்தின் போது 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். திருமணங்கள் பதிவு செய்யப்படுவதோடு பொதுச் சட்டத்தின் கீழ் விவாகரத்து பெறக்கூடியவாறு சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்.

முஸ்லிம் சிவில் சமூகத்தை வலுவூட்ட வேண்டும். அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகத்தை வலுவூட்ட வேண்டும்.

வக்பு சட்டத்தை திருத்தி பள்ளிவாசல்களில் இடம்பெறும் அனைத்து பிரசாரங்களையும் ஒலிப்பதிவு செய்ய வேண்டும். முஸ்லிம் இன விகிதாசாரத்திற்கு அமைய பள்ளிவாசல்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும்.

இன அடிப்படையிலான மற்றும் மத அடிப்படையிலான அரசியல் கட்சிகளின் பதிவினை இடைநிறுத்த வேண்டும்.இலங்கை அடையாள இலக்கத்தினை கொண்ட பிறப்பு அத்தாட்சி பத்திரமொன்றை வெளியிட வேண்டும். சகல சமயங்களையும் இணைத்து சர்வமத அலுவல்கள் அமைச்சு உருவாக்க வேண்டும்.-Vidivelli

  • எம்.ஆர்.எம்.வஸீம்

Leave A Reply

Your email address will not be published.