போக்குவரத்து கடமைகளில் இராணுவ பொலிஸ் படையினர்

கொழும்பில் பல இடங்களில் பணிகளை ஆரம்பித்தனர்

0 741

நகர் பிராந்­தி­யங்­களில் நிலவும் போக்­கு­வ­ரத்து நெரி­சல்­களை கட்­டுப்­ப­டுத்தும், முகா­மைத்­துவம் செய்யும் பணி­களில் போக்­கு­வ­ரத்து பொலி­ஸா­ருக்கு மேல­தி­க­மாக இரா­ணு­வத்­தி­னரை பணியில் ஈடு­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. முதற்­கட்­ட­மாக நேற்று கொழும்பில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட நான்கு இடங்­களில் இதற்­கான பரீட்­சார்த்த நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில், பின்னர் இந்­ந­ட­வ­டிக்கை முழு கொழும்பு நக­ருக்கும் விஸ்­த­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.

பின்னர் அந்த வேலைத்­திட்டம் வெற்றி பெறும் பட்­சத்தில் போக்­கு­வ­ரத்து நெரி­சல்­மிக்க ஏனைய நக­ரங்­க­ளிலும் பொலி­ஸாரின் உத­விக்கு இரா­ணுவ பொலி­ஸாரை கட­மை­யி­லீ­டு­ப­டுத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தாக இரா­ணுவத் தக­வல்கள் தெரி­வித்­தன.

இது தொடர்பில் இரா­ணுவப் பேச்­சாளர் பிரி­கே­டியர் சந்­தன விக்­ர­ம­சிங்­க­விடம் வின­விய போது,

“பதில் பாது­காப்பு தலைமை அதி­கா­ரியும் இரா­ணுவத் தள­ப­தி­யு­மான லெப்­டினன்ட் ஜெனரல் சவேந்­திர சில்­வாவின் ஆலோ­சனை பிர­காரம் கொழும்பு நக­ரத்­தினுள் வாகன நெருக்­க­டி­களை குறைப்­ப­தற்­காக இலங்கை பொலி­ஸா­ருக்கு உதவும் நோக்­கத்­துடன் இரா­ணுவ பொலி­ஸாரை கட­மை­களில் ஈடு­ப­டுத்­து­வ­தற்கு தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது” எனத் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்‌ஷ இரா­ணுவத் தள­ப­திக்கு வழங்­கிய விஷேட ஆலோ­ச­னைக்­க­மைய இரா­ணுவத் தள­பதி இந்த திட்­டத்தை அமுல் செய்­துள்­ள­துடன், நேற்று காலை முதல் அது குறித்த நட­வ­டிக்­கை­களை கொழும்பு நக­ருக்குள் அவ­தா­னிக்க முடிந்­தது.

கொழும்பு நகர வீதி­களில் ஏற்­படும் பாரிய நெரி­சல்­களை குறைக்கும் நோக்­கத்­துடன் இரா­ணுவ பொலிஸார் வாரத்தின் ஏழு நாட்­க­ளிலும் காலை 6.00 – 10.00 வரையும் மாலை 4.00 – 7.00 மணி வரை நகர போக்­கு­வ­ரத்­துக்கு கட­மை­க­ளுக்­காக பொலி­ஸா­ருடன் கட­மை­களில் ஈடு­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

இலங்கை இரா­ணுவ பொலி­ஸா­ருக்­கு­ரிய நட­மாடும் கார் மற்றும் 5 மோட்டார் சைக்­கிள்கள் இந்தப் பணி­க­ளுக்குப் பயன்படுத்தப்படவுள்ள நிலையில், விஷேடமாக அவர்கள் கண்காணிப்பு கடமைகள், தொடர்பாடல் நடவடிக்கைகள் மற்றும் மாற்று வீதிகள் குறித்து பொதுமக்களை அறிவுறுத்தும் பணிகளிலேயே ஈடுபடுவரென இராணுவம் தெரிவித்துள்ளது.-Vidivelli

  • எம்.எப்.எம்.பஸீர்

Leave A Reply

Your email address will not be published.