ஜனநாயக விரோத சக்திகளுக்கெதிராக பலமான கூட்டணியை உருவாக்குவோம்

பேராளர் மாநாட்டில் மு.கா. தலைவர்

0 711

சிறு­பான்மை இனங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­க­ளுக்கு எதி­ராக செயற்­படும் ஜன­நா­யக விரோத சக்­தி­க­ளுக்கு சவா­லாகும் வகையில் திறந்த சக்தி மிக்க அமைப்பு ஒன்று விரைவில் உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ள­தாக ஸ்ரீ.மு.காங்­கிரஸ் தலை­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

நேற்று முன்­தினம் பொல்­கொல்ல மஹிந்த ராஜபக் ஷ அரங்க மண்­ட­பத்தில் நடை­பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் 29 ஆவது வரு­டாந்த மாநாட்டில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும்­போதே ரவூப் ஹக்கீம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­றும்­போது இவ்­வாறு உரு­வாக்­கப்­படும் பலம் மிக்க அமைப்பு ஐக்­கிய தேசியக் கட்சி போன்ற பிர­ப­ல­மான கட்­சி­களை பின்தள்­ளி­விடும் நிலை ஏற்­ப­டலாம். தமிழ் தேசியக் கூட்­டணி, மக்கள் விடு­தலை முன்­னணி மற்றும் சில சிவில் அமைப்பு முக்­கி­யஸ்­தர்­களின் கூட்­டுடன் பல­மான கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்ற ஜன­நா­ய­கத்­திற்கு சவால் விடும் வகையில் முயற்­சி­களை மேற்­கொள்ளும் சக்­தி­க­ளுக்கு எதி­ராக ஒரே மேடையில் போராடத் தயா­ரா­க­வுள்ளோம்.

ஜனா­தி­பதித் தேர்தல் முடி­வுற்று ஒரு சிறிய இடை­வெ­ளியில் பொதுத் தேர்­தலை நடத்­து­வதன் மூலம் வெற்­றியைப் பெற்­றுக்­கொள்­ளலாம் என்று ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றிபெற்ற கட்சி கரு­து­கின்­றது.

என்­றாலும் விகி­தா­சார தேர்தல் முறையின் கீழ் பொதுத்­தேர்தல் நடை­பெறும் நிலையில் ஜனா­தி­பதித் தேர்­தலில் பெற்­றுக்­கொண்ட பெரும்­பான்­மையை இதில் பெற்­றுக்­கொள்ள முடி­யாது என்­பது அர­சியல் விஷேட ஆய்­வா­ளர்கள் நன்கு அறிந்த ஒன்­றாகும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உள்­ளிட்ட முக்­கிய எதிர்ப்புக் குழு­வினர் தற்­போ­தைய அரசு கூட்­ட­ணிக்கு எதி­ராக செயற்­படும் என்­ப­தனைக் குறிப்­பிட்டார்.

என்­றாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸைப் போன்று ஏனைய கட்­சிகள் ஒன்­று­பட்டு இப்­பி­ரச்­சி­னைக்கு விரைவில் தீர்வு காண்­பது மட்டுமல்ல, எதிர்வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் பாராளுமன்ற அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு பிரவேசமாக அமையும் என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.-Vidivelli

  • செங்கடகல நிருபர்

Leave A Reply

Your email address will not be published.