மலேசிய பிரதமர் மகாதிர் பதவி விலகினார்

0 747

மலே­சிய பிர­தமர் மகாதிர் முஹம்மத், பத­வி­வி­ல­கு­வ­தாக திடீ­ரென அறி­வித்­துள்ளார். மகாதிர் முஹம்மத் தனது இரா­ஜி­னாமா கடி­தத்தை மலே­சிய மன்­ன­ருக்கு அனுப்­பி­யுள்­ள­தாக பிர­தமர் அலு­வ­லகம் தெரி­வித்­துள்­ளது. மலே­சிய நேரப்­படி நேற்று மதியம் 1 மணி­ய­ளவில் அளிக்­கப்­பட்ட இரா­ஜி­னாமா கடி­தத்தை ஏற்­றுக் கொண்ட மன்­னர்,­பு­திய பிர­த­மரை நிய­மிக்கும் வரை மகாதிர் முஹம்­ம­தையே இடைக்­கால பிர­த­ம­ராக நிய­மித்­துள்­ளார்.

நாட்டின் அடுத்த பிர­த­ம­ரெனக் கரு­தப்­படும் அன்வர் இப்­ராஹிம் தரப்­புடன் ஏற்­பட்ட கருத்து வேறு­பாடு கார­ண­மாக மகாதிர் அதி­ருப்­தியில் இருப்­ப­தாக அண்­மையில் தகவல் பர­வி­யது.

இதனால் அன்­வரைப் புறக்­க­ணித்து, எதிர்க்­கட்­சி­க­ளுடன் இணைந்து மகாதிர் புதிய ஆட்­சி­ய­மைப்பார் என்றும் கூறப்­பட்­டது. இதை­ய­டுத்து மலே­சிய அர­சியல் களத்தில் நேற்று பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது.

அன்வர் இப்­ராஹிம் தலை­மை­யி­லான பி.கே.ஆர். கட்­சியின் துணைத் தலை­வரும் மத்­திய அமைச்­ச­ரு­மான அஸ்மின் அலி தலை­மையில் பத்­துக்கும் மேற்­பட்ட அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­தமர் மகா­திருக்கு ஆத­ரவு தெரி­வித்­தனர்.

எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளையும் சேர்த்து மக­ாதிருக்கு பாரா­ளு­மன்­றத்தில் 132 எம்­பிக்­களின் ஆத­ரவு இருப்­ப­தாகக் கூறப்­பட்­டது.    எனவே, அன்­வரைப் புறக்­க­ணித்து புதிய ஆட்­சி­ய­மைக்க பிர­தமர் மகாதிர் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் செய்­திகள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

இந்­நி­லையில், நேற்­று­முன்­தினம் இரவு வரை மௌனம் காத்த பி.கே.ஆர். கட்சித் தலைவர் அன்வர் இப்­ராஹிம், தன் வீட்டில் நடை­பெற்ற பிரார்த்­தனைக் கூட்­டத்­துக்குப் பின்னர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசினார். அப்­போது சகாக்­களே தமக்கு துரோகம் இழைத்­து­விட்­ட­தாக வேதனை தெரி­வித்தார். மேலும் புதிய ஆட்சி உட­ன­டி­யாக அமை­யக்­கூடும் என்றும் குறிப்­பிட்டார்.

மகா­திரை சந்­தித்துப் பேசிய அன்வர் இந்­நி­லையில் திடீர்த் திருப்­ப­மாக நேற்­று­முன்­தினம் காலை அன்வர் இப்­ராஹிம், தமது மனை­வியும் துணைப் பிர­த­ம­ரு­மான வான் அஸிஸா மற்றும் நிதி­ய­மைச்சர் குவான் எங், பாது­காப்பு அமைச்சர் மாட் சாபு ஆகி­யோ­ருடன் சென்று பிர­தமர் மக­ாதிரை சந்­தித்துப் பேசினர்.

மகாதிரின் கோலா­லம்பூர் இல்­லத்தில் இந்த சந்­திப்பு நடை­பெற்­றது. இதன் பின்னர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய அன்வர், பிர­த­ம­ரு­ட­னான சந்­திப்பு திருப்­தி­ய­ளித்­த­தாகக் குறிப்­பிட்டார். ஆனால் பேச்­சு­வார்த்தை விவ­ரங்­களை அவர் விவ­ரிக்­க­வில்லை.

இந்த சந்­திப்பு உணர்ச்­சி­க­ர­மாக இருந்­த­தாக நிதி­ய­மைச்சர் குவாங் எங் கூறினார். வேறு எந்தக் கூடுதல் விப­ரமும் அளிக்க இய­லா­தென்று தெரி­வித்த அவர், அடுத்து மன்­னரை சந்­திக்க இருப்­பதை மட்டும் உறுதி செய்தார்.
பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து மகாதிர் வில­கி­யுள்­ளதை அடுத்த, மலே­சி­யாவின் அடுத்த பிர­தமர் யார் என்ற கேள்வி எழுந்­துள்­ளது.

மகாதிர் வில­கி­ய­தை­ய­டுத்து, அன்வர் இப்­ராகிம் தலை­மையில் ஆட்­சி­ய­மைக்க வழி­யுண்டா? என்று அவர் பி.கே.ஆர். கட்சித் தலை­வர்­க­ளுடன் ஆலோ­சனை நடத்தி வரு­கின்றார். மகாதிர் சார்ந்­துள்ள பெர்சாத்து கட்சிக்கு பாராளுமன்றத்தில் 26 எம்பிக்கள் உள்ளனர். பி.கே.ஆர். கட்சியிலிருந்து 10 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ஆதரவை இழந்துவிட்டதால், இயல்பாகவே அன்வர் தலைமையிலான நடப்பு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.