இனவாத பிடியிலிருந்து இந்த அரசால் மீளமுடியாது

சாய்ந்தமருது நகரசபை விடயத்தில் உறுதியாகியுள்ளது என்கிறார் இம்ரான்

0 850

இன­வாதப் பிடி­யி­லி­ருந்து இந்த அரசால் மீள­மு­டி­யாது என்­பது சாய்ந்­த­ம­ருது நக­ர­சபை விட­யத்தில் உறுதியா­கி­யுள்­ள­தென பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் தெரிவித்தார்.

கிண்­ணி­யாவில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளி­யிட்ட அவர்,

சாய்ந்­த­ம­ருது நக­ர­சபை விட­யத்தில் இந்த அரசால் அப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு பாரிய அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­களின் நீண்­ட­காலக் கோரிக்­கை­யான தனி­யான நக­ர­ச­பையை வழங்­கு­வ­தாக வர்த்­த­மானி வெளி­யிட்­டபின் அந்த வர்­த்த­மா­னியை இரத்து செய்­வ­தாகக் கூறு­வது இந்த அரசு இன­வாத நிகழ்ச்­சி­நி­ரலை தாண்டி செயற்­பட முடி­யா­தென்­ப­தற்கு மிகச்­சி­றந்த உதா­ர­ண­மாகும். இவ்­வா­றாக இன­வா­தி­களின் பிடி­யி­லுள்ள இந்த அரசு கேட்­பதை போல் மூன்­றி­லி­ரண்டு பெரும்­பான்­மையோ ஆட்­சி­ய­மைக்கத் தேவை­யான பெரும்­பான்­மையோ கிடைத்தால் சிறு­பான்­மை­யி­ருக்கு அந்த அரசில் என்ன நடக்­கு­மென்­பதை மக்கள் சிந்­திக்க வேண்டும்.

எமது அரசின் காலத்­திலும் நுவ­ரெ­லி­யாவில் புதி­தாக ஆறு சபை­களை உரு­வாக்­கினோம். அப்­பொ­ழுதும் எமக்கு இன­வா­தி­க­ளி­ட­மி­ருந்து அழுத்­தங்கள் வந்­தன. அதற்­காக நாங்கள் அதை இரத்து செய்­ய­வில்லை.

அதே­போன்று எமது அரசும் சாய்ந்­த­ம­ருது விட­யத்தில் நூறு­வீதம் சரி­யாக நடந்­து­கொள்­ள­வில்லை என்­பதே எனது நிலைப்­பாடு. சாய்ந்­த­ம­ரு­துக்கு தனி­யான நக­ர­சபை வழங்­கும்­போது கல்­முனை நக­ருக்குப் பாதிப்­பேற்­ப­டாத விதத்தில் சிறந்த தீர்­வொன்றை பெறவே அன்­றைய எமது அரசு முயற்சி செய்து அதற்­கான எல்லை பிரிப்­பையும் செய்­தது. அதை வர்த்­த­மா­னியில் அறி­விக்க காலம் தாழ்த்­தி­ய­மையே எமது அரசு விட்ட தவறு. இந்த நக­ர­சபை விட­யத்தில் கடந்த சில நாட்­க­ளாக ஒரு­சில ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரி­வித்த கருத்­துக்கள் கண்­டிக்­கத்­தக்­கன. இது தொடர்­பான உண்­மைத்­தன்­மையை அவர்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­தி­யுள்ளோம். எதிர்­கா­லங்­களில் இவ்வாறான கருத்துக்களை அவர்கள் வெளியிடமாட்டார்களென நம்புகிறேன் என தெரிவித்தார்.-Vidivelli

  • கிண்­ணியா நிருபர்

Leave A Reply

Your email address will not be published.