வெள்ளை ஆடை அணிந்த மனிதர்கள் பள்ளிவாசலை உயர்த்தினார்கள்

இந்தோனேஷியாவில் சுனாமி அனர்த்தத்தின் பின் இஸ்லாத்தை ஏற்ற மொஹமட் செங்கின் கதை

0 737

இது மொஹமட் செங் என்­ப­வரின் கதை. இந்­தோ­னே­ஷி­யாவில் அவ­ரது சொந்த ஊரான ஆச்சே மாநி­லத்தில் சுனா­மி­யினால் ஏற்­பட்ட பேர­ழிவின் பின்னர் அவர் 2005 ஆம் ஆண்டில் இஸ்­லாத்தைத் தழு­வினார். அவர் தனது கதையை இவ்­வாறு கூறு­கிறார்.

நான் சீன வம்­சத்தைச் சேர்ந்­தவன். தற்­போது மூன்று தலை­மு­றை­க­ளாக இந்­தோ­னே­ஷி­யாவின் ஆச்சே மாநி­லத்தில் எனது குடும்பம் வாழ்­கி­றது. தென்­கி­ழக்­கா­சி­யாவின் இந்த இஸ்­லா­மியப் பிர­தே­சத்­துக்கு எங்­க­ளது மூதா­தை­யர்கள் வர்த்­த­கத்­துக்­காக வந்­தார்கள். எல்லா விட­யங்­க­ளுக்கும் ஒரு பொருத்­த­மான சூழ­லாக இதைக்­கண்­டதால் இங்­கேயே தங்கி விட்­டார்கள். இங்­குள்ள ஆட்­சி­யா­ளர்­களும் மக்­களும் சாதா­ர­ண­மா­கவே நட்­பா­ன­வர்­க­ளா­கவும் எங்­களைத் தொல்லை செய்­யா­த­வர்­க­ளா­கவும் இருக்­கி­றார்கள்.

எனது குடும்­பத்­தினர் எங்­க­ளது முன்­னோர்­களை வணங்­கு­வ­தற்­காக பல்­வேறு சீன மர­பு­களை பேணி வைத்­தி­ருந்­தார்கள். நானும் அதை­யேதான் செய்தேன். இந்தக் கடையைத் திறக்க முன்னர் எனது முன்­னோர்­களின் பலி பீடத்­துக்கு பிர­சாதம் வழங்­கினேன். அந்த நாட்­களில் அந்த விட­யங்­களை திரும்பத் திரும்பச் செய்­தி­ருக்­கிறேன்.

ஆச்சே பெரிய பள்­ளி­வா­ச­லுக்கு மிக அண்­மை­யில்தான் எனது கடை அமைந்­தி­ருந்­தது. தொழு­கைக்­கான அதானின் ஓசை தினமும் என் காது­களை வந்­த­டையும். ஆனாலும் அது நான் முஸ்­லி­மாக மாறு­வ­தற்கு வழி­வ­குக்­க­வில்லை. அந்தப் பயங்­க­ர­மான காலை நேரம் வரை அப்­ப­டி­யொரு எண்ணம் எனக்குத் தோன்­ற­வே­யில்லை.

வழ­மை­யான காலை போலவா?
2004 டிசம்பர் 26 ஆம் திக­தியில் பண்டே ஆச்சே பெரிய பள்­ளிக்­க­ருகில் இருந்த எனது கடையைத் திறக்க ஆயத்­த­மா­கி­யி­ருந்தேன். அது ஒரு வழ­மை­யான காலைப்­பொ­ழு­தா­கவே இருந்­தது. நல்­ல­தொரு கால­நிலை. குறைந்­த­பட்சம் அசா­தா­ர­ண­மா­ன­தாக எதுவும் தோன்­ற­வில்லை என்று சொல்ல முடியும்.
ஆனால், ஏதோ சில விட­யங்கள் விசித்­தி­ர­மா­கவே இருந்­தன. பற­வைகள் பாடு­வதை நிறுத்­தி­யி­ருந்­தன. எஞ்­சி­யி­ருக்கும் உண­வு­க­ளுக்­காக வழக்­க­மாக என் கடைக்கு முன்னால் காத்­தி­ருக்கும் பூனை­களை அன்­றைய தினம் காண முடி­ய­வில்லை. இருப்­பினும் இந்த விட­யங்கள் எதையும் நான் கண்­டு­கொள்­ள­வு­மில்லை.

திடீ­ரென ஒரு வலு­வான உரத்த சத்தம் கேட்­டது. நான் வெளியில் சென்று பார்த்தேன். “அது ஒரு பூகம்­ப­மாக இருக்கும்” என்று எனக்குள் நானே சொல்­லிக்­கொண்டேன். மற்ற அனை­வரும் தங்­க­ளது கடை­களில் இருந்து வெளியே வந்­தார்கள். ஒரு சில நிமி­டங்­க­ளிலே நாங்கள் அனை­வரும் திரும்­பவும் உள்ளே சென்றோம்.

எது எப்­ப­டி­யி­ருந்­தாலும் மக்கள் அனை­வரும் சத்தம் போட்டு கத்­திக்­கொண்டு அங்கும் இங்கும் ஓடி­னார்கள். ‘தண்ணீர்! கடல் வரு­கி­றது! தண்ணீர்” என்று கத்­தி­னார்கள். நான் குழப்­ப­ம­டைந்தேன். நான் அந்த வார்த்­தை­களைப் புரிந்து கொண்­டாலும் அது என்­ன­வென்று எனக்குத் தெரி­ய­வில்லை. நான் மீண்டும் வெளியில் சென்றேன். அனை­வரும் பயந்து கத்­திக்­கொண்டே பள்­ளியை நோக்கி ஓடி­னார்கள்.

தண்ணீர் பாய்ந்து வரு­வதை நான் கண்டேன். எனது தூபியை எடுப்­ப­தற்­காக வேண்டி நான் ஓடினேன். எனது முன்­னோர்­க­ளி­டம்தான் உதவி தேடினேன். தண்ணீர் மேலும் மேலும் வந்து கொண்டே இருந்­தது. தண்ணீர் தெருக்­களில் இருந்து பாய்ந்து பள்­ளி­வா­சலை நோக்கிச் சென்­றது.

நான் பயந்­து­கொண்டே மேல்­மா­டிக்கு ஓடினேன். ஒரு சிறிய பெல்­க­னியில் இருந்து நான் சுனா­மியைப் பார்த்தேன். தண்ணீர் வந்து கொண்­டேதான் இருந்­தது. இது நம்ப முடி­யாத ஒன்­றாக இருந்­தது.

அவர்கள் பள்­ளி­வா­சலை உயர்த்­தி­னார்கள்
நான் மிகவும் விசித்­தி­ர­மான ஒன்றைக் கண்டேன். அவர்கள் வெள்ளை ஆடை அணிந்த மிகவும் உய­ர­மான மனி­தர்­க­ளாக இருந்­தார்கள். ஒரு வீதிப் போக்­கு­வ­ரத்து பொலிஸார் வாக­னங்­களை வழி­காட்­டு­வது போன்ற செயலை அவர்கள் செய்­தார்கள். பெரிய பள்­ளி­வா­ச­லுக்கு வெளியில் வெவ்­வேறு இடங்­களில் அவர்கள் இருந்­தார்கள். தண்ணீர் அவர்­க­ளு­டைய இயக்­கத்­துக்கு கட்­டுப்­பட்­டது. பள்­ளி­வா­சலின் முன்னால் தண்­ணீரின் பாதை இரண்­டாக பிள­வு­பட்டு பள்­ளியின் இடது மற்றும் வலது பகு­தி­களின் ஊடாக பாய்ந்து சென்­றது.
எவ்­வா­றா­யினும் தண்ணீர் மேலும் மேலும் வந்­து­கொண்­டேதான் இருந்­தது. கடல் தண்ணீர் பாரிய அமுக்­கத்­துடன் அந்த நக­ரத்­தையும் பள்­ளி­வா­சலைச் சுற்­றியும் பாய்ந்து வந்து கொண்­டி­ருந்­தது. வெள்ளை ஆடை அணிந்த அந்த மனி­தர்கள் ஏனைய மனி­தர்­களைப் போல ஓட­வில்லை. ஆனால் நூற்­றுக்­க­ணக்­கான மக்கள் தங்­க­ளது உயிர்­களை காப்­பாற்றிக் கொள்­வ­தற்­காக பள்­ளி­வா­சலை நோக்கி ஓடி­னார்கள்.

ஓடிய சிலர் கீழே விழுந்­ததால் தண்ணீர் அவர்­களை இழுத்­துக்­கொண்டு சென்­றது. நான் இதை­யெல்லாம் அந்த பெல்­க­னியில் இருந்து பார்த்­துக்­கொண்டே இருந்தேன். தண்ணீர் மேலும் மேலும் வந்து கொண்­டேதான் இருந்­தது. ஆனால் தண்ணீர் பள்­ளி­வா­ச­லுக்கு உள்ளே செல்­ல­வில்லை. பள்­ளி­வா­ச­லுக்கு உள்ளே சென்ற மக்கள் அனை­வரும் பாது­காப்­பா­கவே இருந்­தார்கள்.
திடீ­ரென வெள்ளை ஆடை அணிந்த மனி­தர்கள் அதி­க­மாகத் தோன்றி பள்­ளி­வா­சலை உயர்த்­தி­னார்கள். ஆம்! அவர்கள் பள்­ளி­வா­சலை உயர்த்­தி­னார்கள். தரைக்கு சற்று மேலே மொத்தப் பள்­ளி­வா­ச­லையும் உயர்த்­தி­னார்கள். அத்­துடன் தண்ணீர் முழு­மை­யாக பள்­ளி­வா­ச­லுக்கு கீழால் சென்­றது. நான் முழு­மை­யாகத் திகைத்­துப்­போனேன். அது என்­ன­வாக இருக்கும்?

பள்­ளி­வா­ச­லுக்குள் முதல் முறை­யாக நான்
நான் கண்ட அதே விட­யத்தை யாரா­வது ஒருவர் என்­னிடம் வந்து என்­னிடம் சொல்­லி­யி­ருந்தால் நான் நிச்­ச­ய­மாக நம்­பி­யி­ருக்கப் போவ­தில்லை. ஆனால், எனது இரண்டு கண்­களால் நான் அதைப் பார்த்தேன். நான் கண்­களை விழித்துப் பார்த்த ஒரு விடயம் அது. ‘கடவுள் இந்­தப்­பள்­ளி­வா­சலை பாது­காக்க நினைக்­கிறார்” என எனக்குள் நானே பல முறை சொல்­லிக்­கொண்டேன்.
சுனாமி என்ற பேர­னர்த்தம் நடந்த சில வாரங்­க­ளுக்குப் பின்னர் எனது கடைக்குப் பக்­கத்துக் கடையில் உள்ள முஸ்லிம் கடைக்­கா­ர­ரிடம் நடந்த சம்­ப­வங்­களைச் சொல்ல வேண்­டு­மென என் மன­சாட்சி தூண்­டி­யது. அந்தப் பள்­ளி­வா­சலின் இமாமைச் சந்­திக்­கு­மாறு அவர் என்னை வலி­யு­றுத்­தினார். நான் பெரும்­த­யக்­கத்­துடன் அந்­தப்­பள்­ளி­வா­ச­லுக்குள் நுழைந்தேன்.
ஒரு பள்­ளி­வா­ச­லுக்குள் நுழை­வது அதுதான் முதல் தட­வை­யாக இருந்­தது. அப்­ப­டி­யி­ருந்தும் நான் எனது வாழ்நாள் முழு­வ­தையும் அதற்கு அடுத்­த­ப­டி­யாக வாழந்­தி­ருக்­கின்றேன். என்னை தூரத்தில் இருந்தே அடை­யாளம் கண்­டு­கொண்ட இமாம் என்னை வர­வேற்­ப­தற்­காக வெளியே வந்தார். ‘காலை வந்­த­னங்கள். உங்­க­ளுக்கு ஏதா­வது உதவி தேவையா அங்கிள்?” என்று அவர் என்­னிடம் கேட்டார்.

‘நான் உங்­க­ளோடு கொஞ்சம் பேச வேண்டும்” என்று சொன்னேன்.
நாங்கள் இரு­வரும் அமர்ந்தோம். அவ­ரிடம் முழுக்­க­தை­யையும் சொன்னேன். அதைக்­கேட்டு அவர் அமை­தி­யானார். அவ­ரது கண்­களில் இருந்து கண்ணீர் வழிந்­தது. நான் கதையை முடித்­துக்­கொண்ட பிறகு இரு­வரும் ஒரு­வரை ஒருவர் அணைத்துக் கொண்டோம். அந்தக் கொடூ­ர­மான அனு­ப­வத்­திற்கு மக்கள் ஒவ்­வொ­ரு­வரும் அணைத்துக் கொள்ளும் இயற்­கை­யான அணைப்­புதான் இது.

இமாம் கூறினார். ‘அங்கிள் நீங்கள் கண்­டது இறை­வனின் மலக்­கு­மார்கள் அவ­னது கட்­ட­ளையைப் பின்­பற்றும் காட்­சி­யாகும். இந்த சுனாமி அனர்த்­தத்தின் மூலம் அவ­னது இறை­யில்லம் அழிந்து விடக்­கூ­டாது என இறைவன் விரும்­பி­யி­ருக்­கின்றான். அங்கிள் இறைவன் ஏதோ ஒன்றை உங்­க­ளுக்குக் காட்டி அவ­னுக்கு நீங்கள் நெருக்­க­மாக வேண்டும் என விரும்­பி­யி­ருக்­கின்றான். அவன் உங்­களை நேசிக்­கிறான். ஏனென்றால் உங்­களை ஒரு நல்ல மனி­தா­னாக அவன் பார்த்­தி­ருக்­கின்றான். அவன் இந்த உல­கத்­திலும் மறு­மையில் சுவர்க்­கத்­திலும் உங்­க­ளுக்கு சந்­தோ­ஷத்தைத் தர எண்­ணி­யி­ருக்­கின்றான். நீங்கள் ஒரு முஸ்­லி­மாக விரும்­பு­கி­றீர்­களா?

நான் எப்­படி முஸ்­லி­மாக முடியும்?
நான் இமா­மு­டைய கேள்­வியைக் கேட்டு அதிர்ச்­சி­ய­டைந்தேன். என்னை அது குழப்­பத்தில் ஆழ்த்­தி­யது. ஒரு சீன இனத்தைச் சேர்ந்த நான் எப்­படி முஸ்­லி­மாக மாற முடியும். சீனர்­க­ளா­கிய எங்­க­ளுக்கு தமக்­கே­யு­ரிய பாரம்­ப­ரி­யங்கள், நம்­பிக்­கை­க­ளோடு சடங்­கு­களும் உள்­ளன. நான் இமா­முக்கு நன்றி சொல்லி விட்டு அங்­கி­ருந்து வெளியேறினேன்.

நான் எனது கடைக்குத் திரும்பிச் சென்றேன். கடையின் கத­வு­களை மூடி­விட்டு ஒரு மூலையில் அமை­தி­யாக உட்­கார்ந்து யோசித்தேன். மீண்டும் மீண்டும் சுனாமி தினத்­தன்று நடந்த காட்­சிகள் என் கண்­க­ளுக்கு முன்னால் வந்து சென்­றன. வெள்ளை ஆடை அணிந்த மனி­தர்கள், தண்­ணீரை இயக்­குதல், பள்­ளி­வா­சலை தூக்­குதல், இறை­வனின் மலக்­கு­மார்கள் அதைச் செய்­கி­றார்கள், அதற்கு சாட்­சி­யாக நான் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளேன்….. எல்லாம் என் மனக் கண்­முன்னே ஓடின. நான் எனது கடையை இரண்டு நாட்­க­ளாக திறக்­க­வில்லை. நான் அங்­கேயே உட்­கார்ந்து யோசித்தேன்.

நான் முஸ்லிமானேன்
மூன்­றா­வது நாளில் யாரோ கதவைத் தட்­டி­னார்கள். அது வேறு யாரு­மல்ல. என்னைத் தேடிக்­கொண்­டி­ருந்த பள்­ளி­வாசல் இமாம் தான். முன்னர் ஒரு­போதும் இல்­லா­த­வாறு எனது கடை மூன்று நாட்­க­ளாக மூடி­யி­ருந்­ததைக் கண்டு அவர் கவ­லைப்­பட்டார். ‘நான் யோசித்­துக்­கொண்­டி­ருக்­கிறேன்” என்று அவ­ரிடம் சொன்னேன். ‘நீங்கள் சொல்­வது சரிதான் என்று நினைக்­கிறேன். இறைவன் எனக்கு ஒரு அடை­யா­ளத்தை கொடுத்­தி­ருக்­கிறான். அது ஒரு பெரிய அடை­யாளம். நான் இனி­மேலும் ஒரு முட்­டா­ளாக இருக்கக் கூடாது. நான் பழை­யதை மறந்து விடு­கிறேன். தயவு செய்து முஸ்­லி­மா­வது எப்­ப­டி­யென்று சொல்லித் தாருங்கள்” என்றேன்.

‘அது மிகவும் இல­கு­வா­னது” என்று இமாம் கூறினார். ‘நீங்கள் இந்த வார்த்­தை­களை உச்­ச­ரிக்க வேண்டும்” என்று கூறி எனக்கு ஒரு துண்டு காகிதத்தைத் தந்தார். நான் அந்த வார்த்தைகளை உச்சரித்தேன். எனது கடை முழுக்க பிரகாசமான வெளிச்சம் ஒன்று பரவியதைப் போலிருந்தது.

அந்த நாளில் இருந்து தினமும் இஸ்லாத்தைப் பற்றி எனக்குக் கற்பிக்க இமாம் என்னைத் தேடி வருவார். எப்படித் தொழ வேண்டும் எப்படி குர்ஆனை ஓத வேண்டும் என்பதை எனக்கு அவர் கற்றுக்கொடுத்தார். அதிலிருந்து நான் தொழுகிறேன். பள்ளிவாசல்களில் நடைபெறும் தொழுகையிலும் கலந்து கொள்கிறேன். இது எனது வாழ்க்கையில் நடந்த மிக அழகான ஒரு விடயமாகும். அல்ஹம்துலில்லாஹ்!-Vidivelli

இந்த ஆக்கம் About Islam இணையத்தளத்திற்காக மலேசிய சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக கடமையாற்றும் க்ளோடியா அஸீஸா அவர்களால் எழுதப்பட்டதாகும். இவர் இந்தோனேசியாவில் Ulu-Ilir எனும் இஸ்லாமிய நிறுவனத்தையும் நடாத்தி வருகிறார்.

  • ஆங்­கி­லத்தில்: க்ளோடியா அஸீஸா
    தமிழில்: எம்.ஏ.எம்.அஹ்ஸன்

Leave A Reply

Your email address will not be published.