சிலாபத்தில் இலக்கு வைக்கப்பட்டுள்ள அம்பகந்தவில ஸியாரம்

0 721

மூஸா நபி அவர்­களின் காலத்தில் அறு­பது அடி உய­ரத்தைச் கொண்ட மனி­தர்கள் வாழ்ந்­துள்­ளனர். இது­வ­ர­லா­றாகும். இதனை வர­லாற்று நூல்­களில் எம்மால் காணலாம். தமி­ழ­கத்தின் தஞ்­சாவூர் மாவட்­டத்தின் முத்­துப்­பேட்டை சேகு தாவூத் ஒலி அறு­பது அடி உய­ரத்தைக் கொண்­டவர். இவர் அடக்கம் செய்­யப்­பட்ட இடத்தை வருடா வருடம் இலட்­சக்­க­ணக்­கான வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணிகள் பார்­வை­யிடு கின்­றனர். அறு­பது அடி உய­ரத்தைக் கொண்ட பலர் மார்க்­கப்­ப­ணிக்­காக அரபு நாடு­க­ளி­லி­ருந்து இலங்­கைக்கு வந்­துள்­ளனர். கற்­பிட்டி வாசல்­துறை கட­லோ­ரத்­திலும் பாணந்­துறை பள்­ளி­முல்­லை­யிலும் மாத்­தளை கோட்­ட­கொ­ட­யிலும் திரு­கோ­ண­ம­லையில் கண்­ணி­யா­விலும் இவர்கள் மர­ண­மா­னதன் பின்பு அடக்கம் செய்­யப்­பட்­டனர். அவ்­வா­றான ஓர் ஆன்­மி­க­ தீர்க்­க­த­ரி­சியின் அடக்­கஸ்­த­லமே சிலாபம் – அம்­ப­கந்­த­வி­லவில் அமைந்­துள்­ளது.

சிலாபம் – அம்ப­கந்­த­வில பகு­தியில் அமைந்­துள்ள 60 அடி நீள­மான இவ்வாறான அடக்­கஸ்­தலம் ஒன்­றினை மையப்­ப­டுத்தி 100 வரு­டங்­க­ளுக்கும் மேலாக முஸ்­லிம்கள் நடத்தி வந்த கந்­தூரி வைப­வத்­திற்கு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சிலாபம் நீதிவான் நீதி­மன்று தடை விதித்­தது. இத­னை­ய­டுத்து வரு­டாந்தம் நடை­பெற்று வந்த கந்­தூரி வைபவம் இவ்­வ­ருடம் நடை­பெ­ற­வில்லை.
சிலாபம் – அம்­ப­கந்­த­வில பகு­தியைச் சேர்ந்த கிறிஸ்­தவ மக்­களும் கிறிஸ்­தவ தேவா­லய அருட்­தந்­தையும் வெளி­யிட்ட எதிர்ப்­பி­னை­ய­டுத்தே இக்­கந்­தூரி வைபவம் தடை செய்­யப்­பட்­ட­தாக சிலாபம் நீதிவான் நீதி­மன்ற நீதிவான் குறிப்­பிட்ட அம்­ப­கந்­த­வில அடக்­கஸ்­த­லத்­தையும் காணி­யையும் பரி­பா­லித்து வரும் இந்­திய ஹனபி பள்­ளி­வாசல் என்­ற­ழைக்­கப்­படும் சிலாபம் பஸார் பள்­ளி­வாசல் தலைவர் எஸ்.எம்.ஜே.பைஸ்­தீ­னுக்கு கடிதம் மூலம் அறி­வித்­தி­ருந்­தது.

அடக்­கஸ்­தலம் (ஸியாரம்)
அறு­பது அடி உய­ரத்­தைக்­கொண்ட ஆன்­மிக வாதி­யொ­ரு­வரின் அடக்­கஸ்­த­லம் இது. இந்­நாட்­டுக்கு ஆன்­மிக நோக்­கோடு வருகை தந்த ஒரு­வ­ரது அடக்­கஸ்­த­லமே இது என கூறப்­ப­டு­கி­றது. சிலாபம் – அம்­ப­கந்­த­வில கட­லோரப் பகு­தியில் இந்த இஸ்­லா­மிய ஆன்­மி­க­வா­தியின் அடக்­கஸ்­தலம் அமைந்­துள்­ளது.
சிலா­பத்­தி­லி­ருந்து 5 கிலோ மீற்றர் தூரத்தில் அம்­ப­கந்­த­வி­லயின் கடற்­க­ரை­யி­லி­ருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் இந்த அடக்­கஸ்­தலம் அமைந்­துள்­ளது. இந்த அடக்­கஸ்­தலம் பல விஷேட தன்­மை­களைக் கொண்­ட­தாகும். 60 அடி உய­ர­மான ஆன்­மி­க­வாதி அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ளதை அடை­யாளம் காண்­ப­தற்­காக அறு­பது அடி நீளத்­துக்கு மணல் குவிக்­கப்­பட்டு மேடாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த மணல் மேட்டை கலைத்து விட்டால் இரவில் தானாக மணல் குவிந்து விடு­வ­தாக இப்­பி­ர­தேச மீனவ சமூ­கத்­தினர் தெரி­விக்­கின்­றனர். இப்­ப­குதி மக்­களில் பெரும்­பா­லானோர் கிறிஸ்தவ மக்­க­ளாக இருந்­தாலும் இந்த மீனவ சமூ­கத்­தினர் இந்த அடக்­கஸ்­தலம் மீது மிகுந்த பற்­றுக்­கொண்­டுள்­ளனர்.

இப்­ப­கு­தியில் வாழும் கிறிஸ்­தவ மக்­களின் வீட்டு முக­வரி கூட முஸ்லிம் கந்த அசல (முஸ்லிம் மலை அருகே) என்றே பதி­யப்­பட்­டுள்­ள­தாக அறி­ய­மு­டி­கி­றது.
பெரிய புயற்­காற்று வீசி­னாலும் மழை பெய்­தாலும் இந்த அடக்­கஸ்­தலம் மேல் காணப்­படும் மணல் குவியல் கலை­வ­தில்லை. இந்த அடக்­கஸ்­தலம் உட்­பட்ட காணி சுமார் 2 ஏக்கர் பரப்­ப­ளவைக் கொண்­ட­தாகும்.
சுனாமி அனர்த்­தத்தின் போது கூட இக்­கி­ரா­மத்தில் வீட்­டுக்­கூ­ரைகள் காற்றில் பறந்­தன. கடல் அலை மேலெ­ழுந்து வந்­தது. கடற்­கரை காவு கொள்­ளப்­பட்டு மணல் அடித்துச் செல்­லப்­பட்­டது. ஆனால் இந்த அடக்­கஸ்­த­லத்­துக்கு எவ்­வித சேதமும் ஏற்­ப­ட­வில்லை. இங்கு பிள்­ளைப்­பாக்­கியம் இல்­லாத முஸ்­லிம்கள் சென்று முழு இ­ரவும் தங்­கி­யி­ருந்து பிரார்த்­த­னை­களில் ஈடு­ப­டு­வார்கள்.
1900 ஆண்­டு­க­ளுக்குப் பின்­னி­ருந்தே முஸ்­லிம்கள் இங்கு சென்று வரு­கி­றார்கள். கடலில் மீன் கிடைக்கா விட்டால் அடக்­கஸ்­த­லத்தின் அருகில் அமர்ந்து மன்­றா­டுவோம் என கிறிஸ்­த­வர்களும் தெரி­விக்­கி­றார்கள்.

கந்­தூரி வைப­வத்­திற்குத் தடை
நூற்­றாண்டு காலம் அம்­ப­கந்­த­வில – அடக்­கஸ்­த­லத்தை மையப்­ப­டுத்தி வரு­டாந்தம் நடாத்­தப்­பட்டு வந்த கந்­தூரி வைப­வத்­துக்கு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்­ற­வியல் சட்டக் கோவை 106 (1) ஆம் பிரிவின் கீழ் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சிலாபம் நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி, சிலாபம் பஸார் பள்­ளி­வாசல் தலை­வ­ருக்கு அறி­வித்­துள்ளார்.

அம்­ப­கந்­த­வில – அடக்­கஸ்­தல வர­லாற்­றினை ஆய்வு செய்யும்போது அப்­ப­கு­தியில் பெரும்­பான்­மை­யாக வாழும் கிறிஸ்­தவ மக்கள் இந்த அடக்­கஸ்­தலம் மீது நம்­பிக்கை வைத்­தி­ருந்­துள்­ளார்கள். பற்­றுக்­கொண்­டி­ருந்­துள்­ளார்கள். அவர்கள் தங்­க­ளது குறை­களை அங்கு சென்று அடக்­கஸ்­த­லத்­துக்கு அருகில் அமர்ந்து முறை­யிட்­டிருக்கிறார்கள்.

அடக்­கஸ்­த­லத்தில் பல தசாப்­தங்­க­ளாக முஸ்­லிம்­களும் கிறிஸ்­த­வர்­களும் சகோ­தர வாஞ்­சை­யுடன் ஒன்று கூடி­யி­ருக்­கி­றார்கள். இஸ்­லா­மிய ஆன்­மி­க­வாதி ஒரு­வரின் மண்­ணறை என்று அவர்கள் அறிந்­தி­ருந்தும் அவர்கள் வேறு­ப­டுத்திப் பார்க்­க­வில்லை. வரு­டாந்தம் நடை­பெறும் மீன் கந்­தூரி வைப­வத்­திலும் அவர்கள் கலந்து கொண்­டி­ருக்­கி­றார்கள். பங்­க­ளிப்புச் செய்­தி­ருக்­கி­றார்கள்.

ஆனால் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­குதல் முஸ்லிம் சமூ­கத்­துக்கும் கிறிஸ்­தவ சமூ­கத்­துக்கும் இடையில் விரி­சலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளதை கிறிஸ்­த­வர்­களின் கந்­தூரி வைப­வத்­திற்­கான எதிர்ப்பு உறு­திப்­ப­டுத்­து­கி­றது.

கந்­தூரி வைபவம் இடம்­பெற்றால் கிரா­ம­வா­சி­க­ளுக்கு இடையில் கல­வரம் ஏற்­படும் நிலை உரு­வாகும். அத்­தோடு அமை­திக்கும் சமா­தா­னத்­திற்கும் பாதிப்பு ஏற்­படும் என சிலாபம் பொலிஸார் சிலாபம் நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­வித்­த­தை­ய­டுத்தே சிலாபம் நீதி­மன்­றினால் இத்­தடை விதிக்­கப்­பட்­டது.

அடக்­கஸ்­த­லத்­துக்கு அருகில் கிறிஸ்­தவ சிலை
உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்கு முன்­பி­ருந்தே இந்த அடக்­கஸ்­தலம் அமைந்­துள்ள காணியை அப­க­ரிப்­பதில் சிலர் குறி­யாக இருந்­துள்­ளனர். கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் இடம்­பெ­று­வ­தற்கு ஒரு மாதத்­துக்கு முன்பு மார்ச் மாதம் அடக்­கஸ்­த­லத்­துக்கு 10 அடி தூரத்தில் பலாத்­கா­ர­மாக கிறிஸ்­தவ சிலை ஒன்று நிறு­வப்­பட்­டது. இச்­சம்­பவம் முஸ்­லிம்­களை மிகவும் கவ­லை­கொள்ளச் செய்­தது. என்­றாலும் முஸ்­லிம்கள் தமது பள்­ளி­வா­ச­லுக்கு சொந்­த­மான அடக்­கஸ்­தலம் அமைந்­துள்ள காணியில் அத்­து­மீ­றிய சம்­ப­வத்­துக்­காக கிறிஸ்­த­வர்கள் மீது பலாத்­காரம் பிர­யோ­கிக்­க­வில்லை பிரச்­சி­னையை சமா­தா­ன­மா­க தீர்த்­துக்­கொள்ளவே விரும்­ப­ினர். அத­னை­ய­டுத்து நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லை­ய­டுத்து கிறிஸ்­த­வர்கள் அப்­ப­கு­தியில் தங்­களை ஸ்திரப்­ப­டுத்திக் கொள்ளும் முயற்­சி­களில் ஈடு­பட்­டனர். இதன் பிர­தி­ப­லனே கந்­தூரி வைப­வத்­துக்­கான தடை­யாகும்.

பள்­ளி­வா­சலின் சட்ட ஆலோ­சகர்
அடக்­கஸ்­த­லத்­தினை நிர்­வ­கித்து வரும் சிலாபம் பஸார் பள்­ளி­வா­சலின் நிர்­வாக சபை உறுப்­பி­னரும் சட்ட ஆலோ­ச­கரும் சிலாபம் நகர சபையின் உப தலை­வ­ரு­மான சட்­டத்­த­ரணி சாதிகுல் அமீன் இவ்­வி­வ­காரம் தொடர்பில் தெரி­வித்­துள்ள கருத்­துக்கள் கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்­டி­ய­ன­வாகும்.
அம்­ப­கந்­த­வி­லவில் குறிப்­பிட்ட அடக்­கஸ்­த­லத்­துக்கு 2 ஏக்கர் காணி சொந்­த­மா­க­வுள்­ளது. சிலாபம் பஸார் பள்­ளி­வா­சலே இக்­கா­ணி­யையும் அடக்­கஸ்­த­லத்­தையும் நிர்­வ­கித்து வரு­கி­றது. பல தசாப்­தங்­க­ளாக முஸ்­லிம்­களால் நடத்­தப்­பட்டு வந்த கந்­தூரி வைபவம் இவ்­வ­ருடம் கிறிஸ்­த­வர்­களின் முறைப்­பாட்­டி­னை­ய­டுத்து தடை செய்­யப்­பட்­டுள்­ளமை வருந்­தத்­தக்­க­தாகும். இக்­கா­ணியை ஒரு சமூகம் அப­க­ரித்­துக்­கொள்ளும் முயற்­சி­யா­கவே இதைப்­பார்க்­கிறேன். ஈஸ்டர் தாக்­கு­தல்­க­ளுக்கு முன்­பி­ருந்தே இதற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அங்கு கிறிஸ்­தவ சிலை ஒன்றும் பலாத்­கா­ர­மாக வைக்­கப்­பட்­டுள்­ளது. இக்­காணி முஸ்லிம் சமூ­கத்­துக்­கு­ரி­ய­தாகும். அதற்­கான சட்ட ரீதி­யான ஆவ­ணங்கள் எம்­மிடம் இருக்­கின்­றன. இவ்­வா­றான நிலையில் இம்­மு­யற்­சிகள் இன நல்­லி­ணக்­கத்­துக்கு குந்­தகம் விளை­விப்­ப­தா­கவே அமையும்.
கிறிஸ்தவ சிலை நிறு­வப்­பட்­டுள்­ளமை தொடர்பில் நாம் பொலி­ஸிலும் முறைப்­பாடு செய்­துள்ளோம். முஸ்­லிம்கள் வன்­மு­றை­யினை எதிர்ப்­ப­வர்கள். ஏப்ரல் தாக்­கு­தல்­களை வன்­மை­யாக நாம் கண்­டித்­துள்ளோம். ஒரு சிறு குழு­வினர் செய்த இஸ்­லாத்­துக்கு விரோ­த­மான செய்­கை­க­ளுக்கு முழு முஸ்லிம் சமு­தா­யமும் பொறுப்­பல்ல. இதை கிறிஸ்­தவ மக்கள் உணர்ந்து கொள்­ள­வேண்டும். பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­த­மான காணியை எம்மால் விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது. இதற்கு சமா­தா­ன­மாகத் தீர்­வு­காண விரும்­பு­கிறோம் என சட்­ட­த­ரணி சாதிகுல் அமீன் தெரி­வித்­துள்ளார்.

பள்­ளி­வாசல் பரி­பா­ல­ன­சபை கர்­தி­னா­லுக்கு கடிதம்
அம்­ப­கந்­த­வில அடக்­கஸ்­த­லத்­தையும், அதற்கு உரித்­தான இரண்டு ஏக்கர் காணி­யையும் பரி­பா­லித்­து­வரும் இந்­திய ஹனபி ஜும்ஆ பள்­ளி­வாசல் என்று அழைக்­கப்­படும் சிலாபம் பஸார் பள்­ளி­வாசல், கந்­தூரி தடை செய்­யப்­பட்ட விவ­கா­ரத்­திற்கு பேச்­சு­வார்த்தை மூலமே தீர்­வு­காண விரும்­பு­கி­றது. இது நல்­லி­ணக்­கத்­திற்­கான வெளிப்­பா­டாகும்.

இது தொடர்பில் பள்­ளி­வாசல் பரி­பா­ல­ன­சபை கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை அவர்­க­ளுக்கு கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்­ளது. பள்­ளி­வா­சலின் பரி­பா­ல­ன­ச­பையின் சார்பில் அதன் சட்ட ஆலோ­சகர் சட்­டத்­த­ரணி ஏ.டப்ள்யூ. சாதிகுல் அமீன் கடி­தத்தை அனுப்பி வைத்­துள்ளார்.

கர்­தினால் அவர்­களே; எந்த ஒரு சந்­தர்ப்­பத்­திலும் கத்­தோ­லிக்க அருட் தந்­தையர் தொடர்பில் நாம் எத்­த­கைய முறைப்­பாடும் செய்­தி­ராத நிலையில் சிலாபம் பொலிஸார் இந்த கோரிக்­கையை முன்­வைத்­துள்ளார்கள். எந்த சந்­தர்ப்­பத்­திலும் சமா­தா­னத்­திற்கு எம்மால் குந்­தகம் இழைக்­கப்­ப­ட­வில்லை. கத்­தோ­லிக்க அருட் தந்தை தெரி­வித்­துள்­ளதை நோக்­கும்­போது சமா­தா­னத்துக்கும் ஒற்­று­மைக்கும் குந்­தகம் விளை­விக்க வேறு தரப்­பினர் முயல்­வ­தாக எமக்கு சந்­தேகம் ஏற்­பட்­டுள்­ளது என குறிப்­பிட்ட கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடி­தத்தில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது; இச்­சந்­தர்ப்­பத்தில் இனம் தெரி­யாத சிறு குழு­வினர் சமய சக­வாழ்­வினைச் சீர்­கு­லைப்­ப­தற்­காக அம்பகந்­த­வில மக்­களை தவ­றாக வழி­ந­டத்­து­கி­றார்கள். இதன் மூலம் முஸ்­லிம்­க­ளின் பள்­ளி­வா­ச­லுக்கு சொந்­த­மான காணியை பலாத்­கா­ர­மாக அப­க­ரிக்க முயற்­சிக்­கின்­றனர் என்­பதே முஸ்லிம் மக்­களின் நிலைப்­பா­டாகும்.
சிலாபம் – இர­ண­வில பாதையில் அம்­ப­கந்­த­வில கிரா­மத்தில் “ ஹெட­ரியன் கந்த” எனும் இடத்தில் முஸ்­லிம்கள் வரு­டாந்தம் கந்­தூரி வைபவம் நடத்­து­கி­றார்கள் என்­பதை உங்­க­ளுக்கு அறி­யத்­த­ரு­கிறோம். இந்த நிகழ்வில் நாட்டின் அனைத்து பிர­தே­சங்­களில் இருந்து முஸ்­லிம்­களும் ஏனைய இன மக்­களும் கலந்து கொள்­கி­றார்கள்.

அம்­ப­கந்­த­வி­லவில் முஸ்லிம் ஒருவர் அடக்கம் செய்­யப்­பட்­டுள்ளார். இவர் ஈராக்கில் இருந்து சிலாபம் கட­லோ­ரப்­ப­கு­திக்கு வருகை தந்­தவர் ஆவார். அவர் மர­ணித்­ததன் பின்பு இப்­ப­கு­தியில் அடக்கம் செய்­யப்­பட்­டுள்ளார் என்­பது முஸ்­லிம்­களின் நம்­பிக்­கை­யாகும்.

முஸ்­லிம்­களால் அம்­ப­கந்­த­வில ’40 முழத்­தடி ஸியாரம்’ என இது அழைக்­கப்­ப­டு­கி­றது. அவ­ரது பெயரால் ஒவ்­வொரு வரு­டமும் பெப்­ர­வரி அல்­லது மார்ச் மாதத்தில் விடு­முறை தின­மொன்றில் இந்த கந்­தூரி வைபவம் நடத்­தப்­ப­டு­கி­றது.

இந்த அடக்­கஸ்­தலம் அமைந்­துள்ள காணி 1969.11.23 ஆம் திகதி 6920 ஆம் இலக்க காணி உறுதி மூலம் சிலாபம் பஸார் ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு எழு­தப்­பட்டு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

தற்­போது அங்கு கத்­தோ­லிக்க சிலை­யொன்று நிறு­வப்­பட்டு “சாந்­தி­யாகு விளை­யாட்டு மைதானம்” எனப் பலாத்­கா­ர­மாக பெயர் பல­கை­யொன்றும் நடப்­பட்டு உள்­ளது. இது தொடர்பில் அப்­ப­குதி கத்­தோ­லிக்க தேவா­ல­யத்­திற்கு அறி­விக்­கப்­பட்­டது என்­றாலும் நாட்டில் நில­விய அசா­தா­ரண நிலை கார­ண­மாக பொலிஸில் முறைப்­பாடு செய்­ய­வில்லை என்­பதை அறி­யத்­த­ரு­கிறோம். என்­றாலும் பின்பு நாங்கள் சிலாபம் பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளோம். அத்­தோடு பள்­ளி­வாசல் பரி­பா­ல­ன­சபை மூலம் அருட் தந்தை வெலன்ஸ் மென்டிஸ் ஆண்­டகை அவர்­க­ளுக்கு இது தொடர்பில் எழுத்து மூலம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யிலே 2020 .02.09 ஆம் திகதி கந்­தூரி வைபவம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் பொலி­ஸாரின் கோரிக்­கை­யை­ய­டுத்து நீதி­மன்­றத்­தினால் கந்­தூ­ரிக்கு தடை­வி­திக்­கப்­பட்­டது.

பள்­ளி­வா­ச­லுக்கு சொந்­த­மான இந்த காணியை எவ்­வித தடை­க­ளு­மின்றி சுதந்­தி­ர­மாக முஸ்­லிம்கள் கையாள்­வ­தற்கு நீங்கள் முயற்சி செய்­வீர்கள் என்று நம்­பு­கின்றோம். உங்­களின் தலை­யீட்­டினால் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளையும் தீர்த்துக் கொள்ள முடியும் என நம்­பு­கிறோம். இவ்­வ­ரு­டத்­திற்­கான கந்­தூரி வைப­வத்தை 2020.03.08 அல்­லது 2020.03.09 ஆம் திகதி நடத்­து­வ­தற்கு உங்­க­ளது ஆசீர்­வா­தமும் அனு­ம­தியும் கிடைக்கும் என பள்­ளி­வாசல் நம்­பு­கின்­றது.
தரீக்கா கவுன்ஸில் பிர­தி­நி­திகள் உங்­க­ளுடன் இது தொடர்பில் நேரில் கலந்­து­ரை­யாடி விளக்­க­ம­ளிக்க விரும்­பு­கி­றார்கள். அதற்­கான திக­தியை ஒதுக்­கித்­த­ரு­மாறு வேண்­டு­கிறோம் என கடிதத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சுமுக தீர்வு வேண்டும்
இவ்­வி­வ­கா­ரத்தில் தாம­த­மின்றி துரித தீர்­வுக்­கா­ணப்­ப­ட­வேண்டும். தாம­தங்கள் மேலும் இனங்­க­ளுக்­கி­டையில் விரி­சல்­க­ளையே உரு­வாக்கும். தரீக்கா கவுன்ஸில் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­டகை அவர்­களை நேரில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு விரும்­பி­யுள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும்.
அம்­ப­கந்­த­வில பகு­தியில் கடந்த காலங்­களில் நில­விய இரு இனங்­களுக் கிடை­யி­லான சகோ­த­ரத்­துவம், நல்­லி­ணக்கம், சக­வாழ்வு மீண்டும் ஏற்­ப­டுத்­த­வேண்டும். மீண்டும் அவர்கள் பிரதேசத்தில் வாழ வேண்டும். இதுவே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.-Vidivelli

  • ஏ. ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.