சாய்ந்தமருது தனி அலகு பற்றி குழப்பமடைய தேவையில்லை : ஞானசார தேரர் தெரிவிப்பு

0 1,015

சாய்ந்­த­ம­ரு­து­வுக்கு என அர­சாங்கம் தனி­யான நக­ர­சபை வழங்­கி­யமை குறித்து எவரும் குழப்­ப­ம­டையத் தேவை­யில்லை. சாய்ந்­த­ம­ரு­து­வுக்கு தனி­நாடு கொடுக்­க­வில்லை. அங்கு வாழும் மக்கள் தொகையைக் கருத்­திற்­கொண்டே தனி­யான உள்­ளூ­ராட்சி அலகு வழங்­கப்­பட்­டுள்­ளது என பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

சாய்ந்­த­ம­ரு­து­வுக்­கென தனி­யான நக­ர­சபை அலகு வழங்­கப்­பட்­டமை தொடர்பில் ஞான­சார தேர­ரிடம் ஊட­கங்கள் கருத்து வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில், சாய்ந்­த­ம­ரு­து­வுக்கு நக­ர­சபை அலகு வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளமை வர­வேற்­கத்­தக்­க­தாகும். இவ்­வாறு வழங்­கப்­பட்­டமை தொடர்பில் பலர் அச்­ச­ம­டைந்­துள்­ளனர். எவரும் அச்­ச­ம­டையத் தேவை­யில்லை. அர­சாங்­கத்தின் தீர்­மா­னத்தை வர­வேற்க வேண்டும்.

சாய்ந்­த­ம­ரு­துவில் முஸ்­லிம்­க­ளுக்­கென்று தனி­யான சபை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது போன்று கல்­மு­னையில் தமி­ழர்­க­ளுக்­கென்று தனி­யான சபை­யொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். கல்­மு­னையில் தங்­க­ளுக்குத் தனி­யான பிர­தேச செய­லகம் வேண்டுமென அப்­ப­குதி தமிழ் மக்கள் 30 வரு­ட­கா­ல­மாக போராடி வரு­கி­றார்கள். அவர்­க­ளது நியா­ய­மான கோரிக்­கையை அர­சாங்கம் நிறை­வேற்றிக் கொடுக்க வேண்டும்.

கல்­மு­னையில் தமிழ் மக்­க­ளுக்குத் தனி­யான பிர­தேச சபை­யொன்­றினை உரு­வாக்க வேண்டும் என்­பதே எமது கோரிக்­கை­யாக இருக்­கி­றது. நாங்கள் எந்த இனத்­திற்கும் எதி­ரா­ன­வர்­க­ளல்ல. எந்த இனத்­தி­னதும் அடிப்­ப­டை­வா­தத்­தையே நாம் எதிர்க்­கிறோம்.

ஏப்ரல் குண்­டுத்­தாக்­கு­தல்­களின் சூத்­தி­ர­தாரி சஹ்­ரானை தொடர்­பு­ப­டுத்தி சாய்ந்­த­ம­ரு­து­வுக்­கான தனியான நகரசபை விவகாரத்தை சிலர் எதிர்த்தாலும், எதிராக கருத்து வெளியிட்டாலும், அரசாங்கத்தின் இது தொடர்பான தீர்மானம் குறித்து எவரும் குழப்பமடையத் தேவையில்லை என்றார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.