ஹஜ் பயணிகளுக்காக ரூ.15 கோடியில் புதிய கட்டடம் உலமாக்கள் ஓய்வூதியத் தொகை இரு மடங்கு உயர்வு

சட்ட சபையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

0 774

தமிழ்­நாடு வக்பு வாரியம் சென்­னையில் ஒதுக்­கீடு செய்யும் நிலத்தில் ஹஜ் பய­ணிகள் தங்­கு­வ­தற்­கென 15 கோடி ரூபா செலவில் தங்கும் இல்லம் அமைக்­கப்­படும் என தமி­ழக முதல்வர் எடப்­பாடி பழ­னி­சாமி அறி­வித்­துள்ளார். தமி­ழக சட்­டப்­பே­ர­வையில் பட்ஜெட் மீதான விவாதம் 3ஆவது நாளாக நேற்று நடை­பெற்­றது. அதில், விதி எண் 110 இன் கீழ் முதல்வர் எடப்­பாடி பழ­னிச்­சாமி பல்­வேறு அறி­விப்­பு­களை வெளி­யிட்டார்.

அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில் , பிற்­ப­டுத்­தப்­பட்டோர், மிகவும் பிற்­ப­டுத்­தப்­பட்டோர் மற்றும் சிறு­பான்­மை­யினர் நலத்­துறை சார்­பாக பின்­வரும் அறி­விப்­பு­களை அவைக்கு அளிக்­கின்றேன்.

ஒவ்­வொரு ஆண்டும் தமிழ்­நாடு ஹஜ் குழுவின் மூலம் 4,000 பய­ணிகள் சென்னை விமான நிலையம் வழி­யாக ஹஜ் பயணம் மேற்­கொள்­கின்­றனர். கடந்த ஆண்டு ஹஜ் பய­ணத்தின் போது 4,300 க்கும் மேற்­பட்டோர் ஹஜ் பயணம் மேற்­கொண்­டனர்.

ஹஜ் பய­ணிகள் தங்­க­ளு­டைய பய­ணத்­திற்கு முன்பு தங்கி கட­வுச்­சீட்டு, பயண உடை­மைகள் சமர்ப்­பித்தல் உள்­ளிட்ட பல்­வேறு பணி­களை சிர­ம­மின்றி மேற்­கொள்ள தமிழ்­நாடு வக்பு வாரியம் சென்­னையில் ஒதுக்­கீடு செய்யும் நிலத்தில் ஒரு ஹஜ் இல்லம் கட்ட 15 கோடி ரூபா­வினை அரசு ஒதுக்­கீடு செய்யும்.

தமிழ்­நாட்டில் உள்ள வக்பு நிறு­வ­னங்­களில் பணி­யாற்றி ஓய்வு பெற்று வறிய நிலையில் உள்ள பேஷ் இமாம், முஅத்­தினார், அரபு மொழி ஆசி­ரியர் மற்றும் முஜாவர் ஆகிய உல­மாக்­க­ளுக்கு தற்­போது 1,500 ரூபாய் வழங்­கப்­பட்டு வரு­கி­றது. உல­மாக்­க­ளுக்கு வழங்­கப்­படும் இந்த மாதாந்த ஓய்­வூ­தியத் தொகை 1,500 ரூபா­யி­லி­ருந்து 3,000 ரூபா­வாக உயர்த்தி வழங்­கப்­படும்.

தமிழ்­நாடு வக்பு வாரி­யத்தில் பதிவு செய்­யப்­பட்ட 2,814 வக்பு நிறு­வ­னங்கள் தற்­போது தமிழ்­நாட்டில் உள்­ளன. இந்த பதிவு செய்­யப்­பட்ட வக்பு நிறு­வ­னங்­களில் பணி­யாற்றும் உல­மாக்­க­ளுக்கு புதிய இரு சக்­கர வாக­னங்கள் வாங்க 25,000 ரூபா அல்­லது வாக­னத்தின் விலையில் 50 சத­வீதம் இதில் எது குறைவோ, அத்­தொகை மானி­ய­மாக வழங்­கப்­படும் என முத­ல­மைச்சர் எடப்­பாடி பழ­னி­சாமி தனது அறி­விப்பில் மேலும் சுட்­டிக்­காட்­டினார்.

சமீ­பத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட நிதி­நிலை அறிக்­கை­யிலும், பள்­ளி­வா­சல்­க­ளுக்­கான பரா­ம­ரிப்பு செலவு ரூ.5 கோடி­யாக அதி­க­ரிக்­கப்­பட்­டது.
இஸ்­லா­மி­யர்­க­ளுக்­காக அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நன்றி தெரிவித்து அமைச்சர் நிலோஃபர் கபில் உரையாற்றியதுடன், முதலமைச்சர் இஸ்லாமி யர்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாகவும் குறிப்பிட் டார்.-Vidivelli

  • திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது

Leave A Reply

Your email address will not be published.