தேர்தலை ஏப்ரல் 25-28 இடையில் நடத்த முடியும் : ஜனாதிபதிக்கு தேர்தல் திணைக்களம் அறிவிப்பு

0 784

பாரா­ளு­மன்றம் எதிர்­வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி கலைக்­கப்­பட்டால் பொதுத்­தேர்­தலை ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதிக்கும் 28 ஆம் திக­திக்­கு­மி­டையில் ஒரு தினத்தில் நடாத்த முடியும் என தேர்­தல்கள் ஆணைக்­குழு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எழுத்து மூலம் அறி­வித்­துள்­ளது.

பாரா­ளு­மன்றம் மார்ச் மாதம் 1 ஆம் திக­திக்குப் பின்பு கலைக்­கப்­பட்டால் தேர்­தலை நடாத்­தக்­கூ­டிய திகதி மற்றும் விப­ரங்­களைக் கோரி ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பி.பீ.ஜய­சுந்­தர தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரி­ய­வுக்கு அண்­மையில் கடிதம் ஒன்­றினை அனுப்பி வைத்­தி­ருந்தார். அந்தக் கடி­தத்­துக்கு தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் அனுப்பி வைத்­துள்ள பதில் கடி­தத்­தி­லேயே தேர்தல் நடாத்­தப்­பட முடி­யு­மான திகதி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்றம் மார்ச் 2 ஆம் திகதி கலைக்­கப்­பட்டால் வேட்­பு­மனு கோரல் மார்ச் 11 ஆம் திக­திக்கும் 17 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலத்தில் நிர்­ண­யிக்­கப்­படும் எனவும் தேர்தல் ஆணைக்­குழு ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷவுக்குத் தெரி­வித்­துள்­ளது.

ஜனா­தி­ப­தி­யினால் பாரா­ளு­மன்றம் உரிய காலத்­துக்கு முன்பு கலைக்­கப்­ப­டு­வ­தென்றால் வேட்­பு­மனு கோரும் திகதி, தேர்தல் நடாத்­தப்­படும் திகதி மற்றும் பாரா­ளு­மன்­றத்தின் முத­லா­வது அமர்வுத் திகதி என்­பன பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­ப­தற்­கான வர்த்­த­மானி அறி­வித்­தலில் குறிப்­பி­டப்­ப­ட­வேண்டும். இத­ன­டிப்­ப­டையில் புதிய பாரா­ளு­மன்றம் கூடும் திகதி மே மாதம் 12 ஆம் திகதி என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பாரா­ளு­மன்­றத்தைக் கலைப்­பது தொடர்­பான சட்ட ஆலோ­ச­னையை ஜனா­தி­பதி சட்­டமா அதி­ப­ரிடம் கோரி­யி­ருந்தார். 19 ஆவது அர­சியல் சீர்­தி­ருத்­தத்­திற்கு அமைய எதிர்­வரும் மார்ச் 1 ஆம் திக­திக்குப் பின்பு எந்தச் சந்தர்ப்பத்திலும் பாரா­ளு­மன்­றத்தை ஜனா­தி­ப­தி­யினால் கலைக்க முடியும் என சட்­டமா அதிபர் ஜனாதிபதிக்கு ஏற்கனவே அறிவித்துள்ளார்.-Vidivelli

  • ஏ. ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.