நான் தெரிவித்த கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளது : எஸ்.எம்.மரிக்கார் மறுப்பு

0 744

ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்சி காலத்தில் சாய்ந்­த­ம­ருது தனி நக­ர ­சபை­யாக்­கப்­பட்­டி­ருந்தால் பொது­ஜன பெர­மு­ன­வினர் அதனை விமர்­சித்­தி­ருப்­பார்கள் என்று கூறிய கருத்­துக்கள் ஊட­கங்­களில் தவ­றாக வெளி­யி­டப்­பட்­டுள்­ள­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் விளக்­க­ம­ளிக்­கையில்,
சாய்ந்­த­ம­ருது தனி நக­ர­ச­பை­யாக்­கப்­பட்­டமை தொடர்பில் நான் கூறிய கருத்­துக்கள் தவ­றாகப் புரிந்து கொள்­ளப்­பட்­டுள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்சி காலத்தில் சாய்ந்­த­ம­ருது தனி­ந­கர சபை­யாக்­கப்­பட்­டி­ருந்தால் விமல் வீர­வன்ச அல்­லது பொது­ஜன பெர­மு­ன­வினர் இதனை குறை­யாகக் கூறி­யி­ருப்பர்.
இத­னையே நான் கூறினேன். சாய்ந்­த­ம­ருது தனி நக­ர­ச­பை­யாக்­கப்­பட்­ட­மைக்கு நாம் எதிர்ப்புத் தெரி­விக்கப் போவ­தில்லை. காரணம், இது சாய்ந்­த­ம­ருது மக்­களின் தேவை­யாகும். எனினும், ஐக்­கிய தேசியக் கட்சி ஆட்சி காலத்தில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் பொதுஜன பெரமுன என்ன கூறியிருக்கும் என்பதையே நான் கூறினேன் என்றார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.