வில்பத்து வன அழிப்பு விவகாரம் : ரிசாத் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைகள் நாளை

0 770

வில்­பத்து தேசிய வன பிர­தே­சத்தில் அதி­பா­து­காப்­புக்­குட்­பட்ட ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் காணியை துப்­பு­ரவு செய்து மீள்­கு­டி­யேற்றம் மற்றும் சட்­ட­வி­ரோத நிர்­மா­ணங்கள் செய்­துள்­ள­தாகத் தெரி­வித்து முன்னாள் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் உட்­பட சம்­பந்­தப்­பட்ட நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­வி­டு­மாறு கோரி சூழல் நீதிக்­கான மையம் தாக்கல் செய்­துள்ள வழக்கின் மேல­திக விசா­ரணை நாளை மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் இடம்­பெ­ற­வுள்­ளது.

சூழல் நீதிக்­கான மையம் தாக்கல் செய்­துள்ள இந்த ரிட் மனுவில் பிர­தி­வா­தி­க­ளாக வன­சீ­வ­ரா­சிகள் பணிப்­பாளர் நாயகம், மத்­திய சூழல் அதி­கா­ர­சபை, மன்னார் மாவட்ட செய­லாளர், முன்னாள் அமைச்சர் ரிசஷாத் பதி­யுதீன் மற்றும் சட்­டமா அதிபர் உட்­பட 9 பேர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளார்கள்.

தேசிய சூழல் பாது­காப்பு சட்­டத்தை மீறி வில்­பத்து வன­பா­து­காப்பு பிர­தே­சத்தில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள காடுகள் அழிப்­பினால் அங்கு பாரிய பாதிப்­புகள் ஏற்­பட்­டுள்­ள­தாக மனு­தா­ரர்கள் தமது மனுவில் குறிப்­பிட்­டுள்­ளனர்.

இந்த மனு விசா­ரிக்­கப்­பட்டு முடி­வ­டைந்த பின்னர் தீர்ப்பு வழங்­கு­வ­தற்கு திகதி குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த நிலையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் நீதி­பதி மஹிந்த சம­ய­வர்­தன தீர்ப்பு வழங்­கு­வ­தற்கு தான் விரும்­ப­வில்லை என மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் தலைவர் யசந்த கோதா­கொ­ட­வுக்கு அறி­வித்தார். இத­னை­ய­டுத்தே இவ்­வ­ழக்­கினை மீண்டும் ஆரம்­பத்­தி­லி­ருந்தே வேறு நீதி­ப­திகள் குழாம் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­வ­தற்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றின் தலைவர் தீர்­மா­னித்தார்.

தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுவில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, ‘இலங்­கையின் தேசிய வனங்­களில் ஒன்­றான வில்­பத்து தேசிய வன­பா­து­காப்பு பகு­திக்கு சொந்­த­மான ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்கர் நிலம் துப்­ப­ுரவு செய்­யப்­பட்டு சட்­ட­வி­ரோ­த­மாக மக்கள் குடி­யேற்­றப்­பட்­டுள்­ளார்கள்.

பிர­தி­வா­தி­யான அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனின் தலை­யீட்­டினால் இடம்­பெற்­றுள்ள இந்த மீள்­கு­டி­யேற்­றத்தில் 1500 குடும்­பங்கள் அங்கு குடி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ள­தாக மனுவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த மீள்­கு­டி­யேற்றம் மூலம் தேசிய சூழ­லியல் சட்டம் மீறப்­பட்­டுள்­ளது. வரண்ட வல­யத்­துக்­குட்­பட்ட இந்த நிலம் மக்கள் வாழ்­வ­தற்கு உகந்­த­தல்ல. சூழ­லியல் சட்டம் மற்றும் நடை­மு­றை­க­ளி­லுள்ள சட்­டத்­துக்கு மாறாக மேற்கொள்ளப்பட்டுள்ள காடுகள் அழிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் சட்டவிரோத நிர்மாணங்கள் மேற்கொண்டுள்ள நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படி மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றினைக் கோரியுள்ளார்கள்.-Vidivelli

  • ஏ. ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.