சு.க.வும் பொ.ஜ.பெ.வும் ‘தாமரை மொட்டு’ சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானம்

கூட்டணியின் தலைவர் மஹிந்த; தவிசாளர் மைத்ரி; செயலாளர் பசில்

0 744

ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒன்­றி­ணைந்து எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் ‘தாம­ரை­மொட்டு’ சின்­னத்தில் போட்­டி­யி­டு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன கட்­சியின் செய­லாளர் சட்­டத்­த­ரணி சாகர காரி­ய­வசம் தெரி­வித்தார்.

தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு ‘ஸ்ரீலங்கா நிதஹஸ் பொது­ஜன சன்­தா­னய’ (ஸ்ரீலங்கா சுதந்­திர பொது ஜன கூட்­டணி) என்ற பெயரில் புதிய அர­சியல் கட்­சி­யொன்று நிறு­வப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

புதிய கட்­சியின் தலை­வ­ராக மஹிந்த ராஜபக் ஷ, தவி­சா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, செய­லா­ள­ராக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ, தேசிய அமைப்­பா­ளர்­க­ளாக அமைச்­சர்கள் தயா­சிறி ஜய­சே­கர மற்றும் விமல் வீர­வன்ச ஆகியோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார். புதிய கூட்­டணி நிய­மனம் தொடர்பில் தான் தேர்தல் ஆணை­யா­ள­ருக்கு முன்­வைத்த கோரிக்கை ஏற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது எனவும் அவர் தெரி­வித்தார்.

நேற்று இரு கட்­சி­க­ளி­னதும் உறுப்­பி­னர்கள் தேர்தல் செய­ல­கத்­துக்குச் சென்று தங்­க­ளது தீர்­மா­னத்­தையும், இணக்­கப்­பாட்­டி­னையும் தேர்தல் செய­ல­கத்­துக்குத் தெரி­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.