ஹஜ் 2020: பயணக் கட்டணம் 5 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா

0 561

இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை அரச ஹஜ் குழுவின் பயண நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்டு ஐந்து இலட்­சத்து 75 ஆயிரம் ரூபா கட்­ட­ணத்தில் முன்­னெ­டுப்­ப­தற்கு பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ அனு­மதி வழங்­கி­யுள்ளார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை மாலை அலரி மாளி­கையில் ஹஜ் முக­வர்கள் சங்­கங்­களின் பிர­தி­நி­திகள், அரச ஹஜ் குழுவின் உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர், கலா­சார அமைச்சின் செய­லாளர் ஆகி­யோ­ருடன் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ நடத்­திய பேச்­சு­வார்த்­தையை அடுத்து பிர­த­ம­ரினால் இத்­தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.

ஹஜ் முக­வர்கள் சங்­கங்­களின் பிர­தி­நி­திகள் பிர­த­மரின் தீர்­மா­னத்தை ஏற்­றுக்­கொண்டு குறித்த கட்­ட­ணத்தில் ஹஜ் குழு முன்­வைத்­துள்ள பயண நிபந்­த­னை­க­ளுக்கு அமை­வாக ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளனர். இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை ஊழல்­க­ளின்றி ஹஜ் முக­வர்கள் மேற்­கொள்­ளா­த­வி­டத்து அடுத்த வருட ஹஜ் ஏற்­பா­டு­களை அர­சாங்­கமே பொறுப்­பெ­டுத்து மேற்­கொள்ளும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டது.

இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை மூன்று வகை­யாகத் தரப்­ப­டுத்தி கோட்டா பகிர்ந்­த­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது. இது தொடர்பில் அரச ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் விடி­வெள்­ளிக்குக் கருத்து தெரி­விக்­கையில்;
‘தற்­போது கிடைக்கப் பெற்­றுள்ள 3500 ஹஜ் கோட்டா மூன்று வகை­யாக தரப்­ப­டுத்­தப்­பட்டு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

5 இலட்­சத்து 75 ஆயிரம் ரூபா ஹஜ் பொதி (Package) யில் 2000 கோட்­டாவும், 6 ½ இலட்சம் ரூபா ஹஜ் பொதி­யில் ஆயி­ரத்து 150 கோட்­டாவும், 7 ½ இலட்சம் ரூபா ஹஜ் பொதி­யில் 350 கோட்­டாவும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. 6 ½ மற்றும் 7 ½ இலட்ச ஹஜ் பொதிகள் வச­திகள் கூடிய பொதி­க­ளாகும்.

அழைத்துச் செல்­லப்­படும் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் மக்­காவில் ஹரம் ஷரீ­புக்கு 300 மீற்றர் தூரத்­துக்­குள்ளும் மதீ­னாவில் மிக அரு­கிலும் 5 நட்­சத்­திர ஹோட்­டலில் தங்க வைக்­கப்­பட வேண்டும். மினாவில் ‘பி’ தர கூடாரம் வழங்­கப்­பட வேண்டும் என ஹஜ் முக­வர்­க­ளுக்கு நிபந்­தனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.
இதே­வேளை, ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் பய­ணத்­துக்கு முன்பே பயண முன்­வ­ரைவு (Itinerary) ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் குடும்­பத்­தினர் அறிந்து கொள்ளும் வகையில் ஹஜ் முக­வர்­க­ளினால் வழங்­கப்­பட வேண்டும். தற்­போது ஹஜ் கோட்டா பெற்­றுக்­கொள்­வது தொடர்பில் ஹஜ் முக­வர்கள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தை அல்­லது ஹஜ் குழுவை தொடர்­பு­கொள்ள முடியும் என்றார்.

அரச ஹஜ் குழுவின் உறுப்­பினர் அஹ்கம் உவைஸ் கருத்து தெரி­விக்­கையில்; குறிப்­பிட்ட ஹஜ் பொதி­களின் கட்­ட­ணங்­க­ளுக்கு மேல­தி­க­மாக எவரும் கட்­டணம் செலுத்தத் தேவை­யில்லை. கூடு­த­லான கட்­டணம் கோரப்­பட்டால் திணைக்­க­ளத்­துக்கு முறை­யி­டலாம். பிர­த­மரின் உத்­த­ர­வு­க­ளையும் மீறி ஊழல் புரியும் முக­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும். ஊழல்கள் நிரூ­பிக்­கப்­பட்டால் அவர்களது அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்படும் என்றார்.

இதேவேளை, உம்ரா முகவர்களும் இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக கோட்டா வழங்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.-Vidivelli

  • ஏ. ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.