நான்கு வருடங்களாக போராடினோம் ஹக்கீமும் றிஷாடும் தொடர்ந்து ஏமாற்றினர்.

குறுகிய காலத்தில் சபையை தந்தது பொதுஜன பெறமுன பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா

0 961

‘சாய்ந்­த­ம­ருது மக்கள் தங்­க­ளுக்­கென்று தனி­யான நிர்­வாக அல­கொன்­றினை உரு­வாக்கித் தரு­மாறு கடந்த 4 வரு­டங்­க­ளாகப் போரா­டி­னார்கள்.அப்­போது ஆட்­சி­யி­லி­ருந்த அமைச்­சர்கள் ரவூப் ஹக்­கீமும் ரிஷாட் பதி­யு­தீனும் தொடர்ந்து எம்மை ஏமாற்­றியே வந்­தார்கள். தாமரை மொட்டு பத­விக்கு வந்து குறு­கிய காலத்தில் எமக்கு நகர சபையை வழங்கி எம்மைக் கெள­ர­வித்­துள்­ளது. எல்லாப் புகழும் அல்­லாஹ்­வுக்கே என சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் வை.எம். ஹனிபா விடிவெள்­ளிக்குத் தெரி­வித்தார்.
சாய்ந்­த­ம­ரு­துவை தனி­யான நகர சபை­யாக உரு­வாக்­கு­வ­தற்­காக வெளி­யிடப் பட்­டுள்ள அதி­வி­சேட வர்த்­த­மானி பிர­க­டனம் தொடர்பில் வின­வி­ய­போதே வை.எம். ஹனிபா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;
‘சாய்ந்­த­ம­ருது புதிய நக­ர­சபை கட்­ட­டத்­துக்­கான நிதி­யினை விரைவில் ஒதுக்கித் தரு­வ­தாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தெரி­வித்­துள்ளார். முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் முஸ்­லிம்­களின் உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுப்­பவை என அவர்கள் தங்­களை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்­டாலும் இது­வ­ரை­காலம் அவர்கள் சாய்ந்­த­ம­ருது மக்­களை ஏமாற்­றியே வந்­துள்­ளார்கள். எங்­களை நாங்­களே ஆளப் போகிறோம். முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களும் அர­சியல் கட்­சி­களும் தொடர்ந்து எங்­களை ஏமாற்­றி­னார்கள். ஆனால் பொது­ஜன பெர­முன தாங்கள் பத­விக்கு வந்­ததும் எமது கோரிக்­கையை நிறை­வேற்றித் தரு­வ­தாக வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தது. இன்று அந்த வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இதற்­காக நாங்கள் ஜனா­தி­பதி, பிர­தமர், பஷில் ராஜ­பக் ஷ, முன்னாள் அமைச்சர் அதா­வுல்லாஹ் மற்றும் அமைச்சர் வீர­கு­மார திசா­நா­யக்க ஆகி­யோ­ருக்கு நன்றி கூறக் கட­மைப்­பட்­டுள்ளோம். முஸ்­லிம்கள் தமது உரி­மைகள் தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்கு தாமரை மொட்டு சின்­னத்­துக்கே ஆத­ர­வ­ளிக்க வேண்டும்.
விரைவில் பாரிய விழா­வொன்­றினை சாய்ந்­த­ம­ரு­துவில் ஏற்­பாடு செய்­ய­வுள்ளோம். சாய்ந்­த­ம­ரு­துக்கு நகர சபை வழங்­கிய ஜனா­தி­பதி, பிரதமர் பஷில் ராஜபக் ஷ, முன்னாள் அமைச்சர்களான அதாவுல்லாஹ் உட்பட அனைரையும் அழைத்து அவர்களுக்கு நன்றி கூறவுள்ளோம் என்றார்.-Vidivelli

  • ஏ. ஆர்.ஏ. பரீல்

Leave A Reply

Your email address will not be published.