சுத்தமான குடிநீருக்காக ஏங்கும் களுத்துறை மாவட்ட கிராமங்கள்

0 776

நாட்டில் தற்­போது நிலவும் வெப்­ப­மான கால­நி­லை­யியை கருத்­திற்­கொண்டு பாட­சாலை மாண­வர்­களை 11.00 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிக்­கள செயற்­பா­டு­களில் ஈடு­ப­டுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது.

அது மாத்­தி­ர­மல்­லாமல், இந்த வெப்ப கால­நி­லை­யினால் பல மாவட்­டங்­களில் குடி­நீ­ருக்கு நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ள­தாக இடர் முகா­மைத்­துவ நிலை­யமும் அறி­வித்­துள்­ள­துடன் நீரை சிக்­க­ன­மாகப் பாவிக்­கு­மாறும் தெரிவித்­துள்­ளது.

அடிப்­படைத் தேவை­களில் ஒன்­றான நீர் இன்று மக்­க­ளுக்கு இன்­றி­ய­மை­யாத தேவை­களில் ஒன்­றாக மாறி­யுள்­ளது. எனினும், எதிர்­கா­லத்தில் இந்த நீருக்­கான தட்­டுப்­பாடு ஏற்­படுமென ஆராய்ச்­சி­யா­ளர்கள் ஏற்­க­னவே எதிர்வு கூறி­யுள்­ளனர்.

இந்த வெப்பநிலை அதி­க­ரிப்­பினால் நாட்டின் பல பிர­தே­சங்­களில் தற்­போது அதி­க­மான வரட்சி நில­வு­கின்­றது. இதனால் குடி­நீ­ருக்­கான நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது. களுத்­துறை, இரத்­தி­ன­புரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்­டங்கள் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வா­றான நிலையில், களுத்­துறை மாவட்­டத்தின் கரை­யோர பிர­தே­சங்­க­ளான களுத்­துறை, பயா­கலை, பேரு­வளை, அளுத்­கம மற்றும் தர்கா நகர் ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்பு சபை­யினால் கடந்த சில வாரங்­க­ளாக விநி­யோ­கிக்­கப்­படும் நீர், உப்புத் தன்­மை­யான உவர் நீரா­கவே காணப்­ப­டு­கின்­றது.

அதா­வது, களுத்­துறை நக­ரி­லுள்ள களு கங்­கை­யி­லி­ருந்து பெறப்­பட்ட நீர், சுத்­தி­க­ரிப்பு செய்­யப்­பட்டு குறித்த மாவட்­டத்தின் கரை­யோரப் பிர­சேங்­களில் வாழும் மக்­க­ளுக்கு நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்பு சபை­யினால் குழாய் மூலம் விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றது.

தற்­போது நாட்டில் ஏற்­பட்­டுள்ள வரட்­சியின் கார­ண­மாக களு கங்­கையின் நீர் வற்­றி­யுள்­ளது. இதனால் களு கங்­கையில் கடல் நீர் கலக்­கப்­ப­டு­கின்­றது. இதன் கார­ண­மா­கவே உவர் நீர் கலந்த குடி­நீரே அப்­பி­ர­தேச மக்­க­ளுக்கு தற்­போது விநி­யோ­கிக்­கப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

“இந்தப் பிரச்­சினை நேற்று, இன்று தோன்­றி­ய­தல்ல. சுமார் 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக இந்தப் பிரச்­சி­னை­யை நாங்கள் தொடர்ச்­சி­யாக எதிர்­நோக்கி வரு­கின்றோம்” என தர்கா நக­ரினைச் சேர்ந்த 40 வய­தான எஸ்.எம்.றியாஸ் தெரிவித்தார்.

குறித்த பிர­தேச மக்கள் உப்புத் தன்ை­மை­யான நீரை பயன்­ப­டுத்­து­வதன் கார­ண­மாக குறித்த பிர­தேச மக்கள் மத்­தியில் பல்­வேறு வகை­யான நோய்கள் பர­வு­வ­தற்­காக வாய்ப்­புகள் அதிகம் உள்­ள­தாக வைத்­தி­யர்கள் தெரி­விக்­கின்­றனர்.

ஏற்­க­னவே, அனு­ரா­த­புரம் மற்றும் பொல­ந­றுவை மாவட்ட மக்கள் சுத்­த­மான குடி­நீரை நுக­ரா­மை­யினால் சிறு­நீ­ரகம் உள்­ளிட்ட பல நோய்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்தப் பிரச்­சி­னையை முடி­வுக்கு கொண்டு வர நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்பு சபை பல்­வேறு செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக சபையின் மேல் மாகா­ணத்தின் தெற்கு பிரி­விற்கு பொறுப்­பான பிரதி பொது முகா­மை­யா­ள­ரான பொறி­யி­ய­லாளர் எம்.டி.எம்.றாசீல் தெரிவித்தார்.

களுத்­துறை, வாதுவ, மத்து­கம, அளுத்­கம, பேரு­வளை மற்றும் பயா­கலை ஆகிய பிர­தேச பொறி­யி­ய­லாளர் அலு­வ­ல­கங்­க­ளுக்கு உட்­பட மக்கள் இந்தப் பிரச்­சி­னை­யினால் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார்.
இந்தப் பிரச்­சி­னைக்­கான உட­னடித் தீர்­வாக பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களில் நீர்த் தாங்­கிகள் வைக்­கப்­பட்டு எமது நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்பு சபை­யினால் சுத்­த­மான குடிநீர் வழங்­கப்­ப­டு­வ­தாக பிரதிப் பொது முகா­மை­யாளர் கூறினார்.

பிர­தே­சங்களும்  நீர்த் தாங்­கி­களின் எண்­ணிக்கையும் 

  • களுத்­துறை 100
  • வாதுவ 94
  • மத்து­கம 12
  • அளுத்­கம 66
  • பேரு­வளை 88
  • பயாகலை 24
  • மொத்தம் 384

இந்த செயற்­றிட்டம் குறித்த பிர­தே­சங்­க­ளி­லுள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுடன் இணைந்து மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் மற்றும் நீர் வழங்கல் வடி­கா­ல­மைப்பு சபை ஆகி­ய­வற்றின் பவு­சர்­களின் ஊடா­கவே பொது இடங்­களில் வைக்­கப்­பட்­டுள்ள நீர்த் தாங்­கி­க­ளுக்­கான சுத்­த­மான குடிநீர் வழங்­கப்­ப­டு­கின்­றது என அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும், இது பிர­தேச மக்­களின் தேவைக்குப் போது­மா­ன­தாக இன்­மை­யினால் அவர்கள் – நன்னீர் கிண­று­க­ளையும் போத்­தலில் அடைக்­கப்­பட்ட குடி­நீரையும் நாடிச் செல்­கின்­றனர். எனினும், நன்னீர் கிணறு வசதி, குறிப்­பிட்ட சில வீடு­களில் மாத்­தி­ரமே உள்­ள­மை­யினால் அதற்­கான கேள்­வியும் அதி­க­ரித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. “நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்பு சபை­யினால் உப்புத் தன்­மை­யான நீர் வழங்­கப்­ப­டு­கின்ற காலப் பகு­தியில் பல கிலோ மீற்றர் தூரம் சென்று கிணற்று நீரை எடுத்து வந்து பயன்­ப­டுத்­து­வ­தாக” றியாஸ் குறிப்­பிட்டார்.

இந்தப் பிரச்­சினை கார­ண­மாக போத்­தலில் அடைக்­கப்­பட்ட நீருக்­கான கேள்வி தற்­போது அதி­க­ரித்­துள்­ள­தாக சில்­லறைக் கடை உரி­மை­யா­ள­ரான எம்.நாஸீர் தெரிவித்தார்.

பெரும்­பா­லான மக்கள் போத்­தலில் அடைக்­கப்­பட்ட நீரை வாங்கிச் செல்­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

தர்கா நகர், மீஹி­ரிப்­பென்ன ஜும்ஆ பள்­ளி­வா­ச­லுக்கு முன்­பாக உள்ள வீடொன்­றி­லுள்ள நன்னீர் கிணற்றின் மூலம் மக்­க­ளுக்குத் தேவை­யான நீர், கடந்த பல வரு­டங்­க­ளாக தொடர்ச்­சி­யாக வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.

இந்த கிணற்று நீரை பெறு­வ­தற்­காக பேரு­வளை, அளுத்­கம மற்றும் தர்கா நகர் உள்­ளிட்ட பல்­வேறு பிர­தேச மக்கள் வரி­சையில் நின்று நீர் பெற்­ற­தை என்னால் அவ­தா­னிக்க முடிந்­தது.

தனி­யா­ருக்கு சொந்­த­மான இந்த வீட்­டி­லுள்ள கிணற்று நீர், மோட்டார் இயந்­தி­ரத்தின் ஊடாக நீர் தாங்­கிக்கு ஏற்­றப்­பட்டு, குழா­யி­னூ­டாக ஊடாக இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­வ­தாக பிர­தேச மக்கள் தெரிவித்­தனர். இக்­காலப் பகு­தியில் குறித்த வீட்­டாரின் மாதாந்த மின்­சாரக் கட்டணம் 200,000 – 300,000 ரூபா­வாகும் என அவர்கள் குறிப்­பிட்­டனர். இந்த நன்னீர் கிணற்றின் ஊடாக இப்­பி­ர­தே­சத்தில் சமூ­கங்­க­ளுக்கு இடையில் நல்­லி­ணக்கம் ஏற்­பட்­டுள்­ள­தாக சிங்­களப் பெண்­ம­ணி­யொ­ருவர் குறிப்­பிட்டார்.

தர்கா நக­ரிற்கு அண்­மை­யி­லுள்ள வரப்­பிட்­டிய எனும் சிங்­கள கிரா­மத்­தைச் சேர்ந்தவர்­களும், முஸ்­லி­ம் ஒருவருக்கு சொந்­த­மான இந்த வீட்­டி­லி­ருந்து குடிநீர் பெறு­தாக குறித்த பெண்­மணி தெரிவித்தார்.

இந்த வீட்­டி­லி­ருந்து 24 மணி நேரமும் இல­வ­ச­மாக எந்­த­வித பிரச்­சி­னை­யு­மின்றி குடிநீர் வழங்­கப்­ப­டு­வ­தாக குறித்த சிங்­களப் பெண்­மணி குறிப்­பிட்டார்.

இதே­வேளை, அளுத்­கம கந்த விகா­ரைக்கு அருகில் களு­வா­மோ­தர எனும் பிர­தே­சத்தில் அஜித் எனும் தனி­ந­ப­ரி­னாலும் இல­வ­ச­மாக குடிநீர் வழங்­கப்­ப­டு­தாக தர்கா நகர், ஸாஹிரா கல்­லூரி வீதி­யினைச் சேர்ந்த சித்தி நிலுபா தெரிவித்தார்.

இங்கு தினமும் வந்து குடி­நீ­ரினை எடுத்துச் செல்­வ­தாகத் தெரிவித்த அவர், இன, மத வேறு­பா­டுகள் எது­வு­மின்றி அனைத்து மக்­க­ளுக்கும் நீர் வழங்­கப்­ப­டு­வ­தாக அவர் குறிப்­பிட்டார்.

தனது குடும்­பத்­திற்கு தேவை­யான தின­சரி குடி­நீ­ரை இங்­கி­ருந்து கொண்டு செல்­வ­தாக குறித்த பெண்­மணி மேலும் கூறினார்.

குறித்த குடி­நீரை வழங்கும் தொழி­ல­திபர் அஜி­த்தை சந்­தித்தபோது, மக்­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­கு­வ­தற்கு தேவை­யான குடி­நீரை பலப்­பிட்டி பிர­தே­சத்­தி­லி­ருந்த தினமும் பவு­ஸ­ரி­லி­ருந்து எடுத்து வந்து வழங்­கு­வ­தாக குறிப்­பிட்டார். எனினும் இதற்­காக செல­வ­ழிக்கும் நிதி­யை குறிப்­பிட மறுத்­து­விட்டார்.

”இறை­வ­னுக்­காவே இந்தப் பணி­யினை நான் மேற்­கொள்­கின்றேன். இதனால் எனது இந்த பணிக்கு எந்­த­வித விளம்­ப­ரத்­தி­னையும் நான் எதிர்­பார்க்­க­வில்லை” என்றார் தொழி­ல­திபர் அஜித்

இந்தப் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காணும் வகையில் அளுத்­கம, அக­ல­வத்த, மத்­து­கம குடிநீர் திட்டம் எனும் செயற்றிட்­ட­மொன்று தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்பு சபையின் மேல் மாகா­ணத்தின் தெற்கு பிரி­விற்கு பொறுப்­பான பிரதி பொது முகா­மை­யா­ள­ரான எம்.டி.எம்.றாசீல் தெரிவித்தார்.

இந்த செயற்றிட்­டத்தின் மூலம் களு­கங்­கையில் கடல் நீர் கலக்­கப்­ப­டு­கின்ற காலப் பகு­தியில் குடா கங்­கை­யி­லி­ருந்து கொட்­டி­கேன நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­திற்கு நீரைக் கொண்டு வந்து சுத்­தி­க­ரித்து விநி­யோ­கிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார்.

இது­வொரு குறு­கிய கால தீர்வுத் திட்­ட­மாகும். இந்த திட்டம் இந்த வருட இறு­தியில் நிறை­வ­டை­ய­வுள்­ளது. இதனை அடுத்து குடிநீர் விட­யத்தில் களுத்­துறை மாவட்­டத்தின் கரை­யோரப் பிர­தேச மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடியும் என அவர் கூறினார்.

32,278 மில்­லியன் ரூபா உத்­தேச செலவில் நிர்­மா­ணிக்­கப்­படும் இந்த செயற்­றிட்டம் கடந்த 2018 ஒக்­டோபர் 22ஆம் திகதி கொட்­டி­கேன நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தில் ஆரம்­பித்து வகைக்­கப்­பட்­டது.

இந்­தி­யாவின் எக்சிம் வங்கி மற்றும் இலங்கை அர­சாங்கம் என்­பன இணைந்து இதற்­கான நிதிப் பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்­ளன. இந்த திட்­டத்தின் மூலம் களுத்­துறை மாவட்­டத்தின் கரை­யோரப் பிர­தே­சத்தில் வாழும் மக்­களின் நீண்ட காலக் கன­வான சுத்­த­மான தூய குடி­நீ­ரை வழங்க முடியும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அத்­துடன் இந்த நீர் வழங்கல் திட்­டத்தின் ஊடாக சுமார் 32,000 புதிய நீர் இணைப்­புக்­களை வழங்க முடியுமென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதே­வேளை, ” களு­கங்­கையில் கடல் நீர் கலப்­ப­தனை தடுக்கும் வகையில் களு­கங்­கையை மறைத்து தடுப்பு அணையை நிர்­மா­ணிப்­பதே இந்தப் பிரச்­சி­னைக்­கான நிரந்தரத் தீர்­வாகும் என பொறியியலாளர் குறிப்பிட்டார். இதற்கு பாரிய பணத் தொகை தேவைப்படும். இந்த செயற்றிட்டத்தை மேற்கொள்வது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்துடன் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டு அவர்களினால் மேற்கொள்வது என இணக்கம் காணப்பட்டது. எனினும், அந்த நடவடிக்கை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

இதேவேளை, மாத்தறையிலுள்ள நில்வளா கங்கை, காலியிலுள்ள கிங் கங்கை மற்றும் ஹம்பாந்தோட்டையிலுள்ள வளவ கங்கை ஆகியவற்றில் கடல்நீர் கலப்பதனை தடுக்கும் வகையில் தடுப்பு அணை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணி நீர்ப்பாசனத் திணைக்களத்தினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற செயற்றிட்டமொன்றினை களுகங்கையில் மேற்கொள்வதன் ஊடாகவே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை பெற முடியும். ஆகவே, களுத்துறை மாவட்ட கரையோர பிரதேச மக்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்த அடிப்படையில் தீர்வு காண்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் உடனடியாக முன்னெடுத்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.-Vidivelli

  • றிப்தி அலி 

 

Leave A Reply

Your email address will not be published.