கொரோனா: உயிரிழந்தோர் தொகை 1358 ஆக உயர்வு

புதன் கிழமையன்று 242 பேர் மரணம்

0 700

சீனாவின் ஹுபே சுகா­தார அதி­கார சபை கடந்த புதன்­கி­ழமை மாத்திரம் 242 கொரோனா வைரஸ் தொற்­று­டை­ய­வர்கள் மர­ண­ம­டைந்­த­தா­க தெரிவித்துள்ளது. அதனால் உல­க­ளா­விய ரீதியில் கொரோனா வைர­ஸினால் மர­ணித்­தோரின் எண்­ணிக்கை நேற்றுடன் 1,358 ஆக உயர்ந்­துள்­ளது. இதில் ஒரு பிலிப்பைன் நாட்­ட­வரும் ஒரு ஹொங்கொங் நாட்­ட­வரும் அடங்­குவர் என சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

ஹுபே வைத்­தி­ய­சா­லையில் 33,893 பேர் வைரஸ் தொற்­றுக்­குள்­ளாகி அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­துடன் அவர்­களுள் 1,437 பேர் கவ­லைக்­கி­ட­மான நிலையில் இருப்­ப­துடன் 3,441 பேர் குண­ம­டைந்து வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து வெளி­யே­றி­ய­தா­கவும் ஹுபே சுகா­தார அதி­கார சபை தெரி­விக்­கி­றது.

உலக சுகா­தார ஸ்தாபனம் கொரோனா வைரஸ் தாக்­க­மா­னது உல­கத்­திற்­கான மரண அச்­சு­றுத்­த­லா­கவே காணப்­ப­டு­கி­றது. மேலும் உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் தலைவர் டெட்ரோ அதனொம் கெப்­ர­யோஸஸ் உலகின் எந்த தீவி­ர­வாத செயலுக்கும் இல்­லாத சக்­தி­வாய்ந்த பின் விளைவை இந்த வைரஸ் கொண்­டு­வரும் என தெரி­வித்­துள்ளார். தொற்­றிற்­கான தீர்வை இறு­தி­யி­லேயே இல­கு­வாகப் பெற­மு­டியும். இப்­போ­தைய இத்­தொற்று வேறு திசை­களில் செல்ல வாய்ப்­புகள் அதிகம் என சுகா­தார ஸ்தாப­னத்தின் நிர்­வாக அதி­காரி கருத்து தெரி­விக்­கிறார்.

ஆரம்ப கட்ட சிகிச்­சைக்­காக நான்கு வெக்­ஸின்­களை பயன்­ப­டுத்­து­கிறோம். நாம் சீக்­கி­ர­மாக கொரோனா வைர­ஸுக்­கான தீர்­வாக வெக்­ஸி­னொன்றைக் கண்­டு­பி­டிப்போம். அதற்கு சிறிது கால­மாகும். ஒரே இரவில் வெக்­ஸி­னொன்றை உரு­வாக்­கிட முடி­யாது என சுகா­தார ஸ்தாப­னத்தின் தலைமை விஞ்­ஞா­னி­யான செள­மியா சுவா­மி­நாதன் ஊட­க­வி­ய­லா­ள­ரிடம் கூறினார்.

மேலும் உலக சுகா­தார ஸ்தாபனத்தின் அறிக்­கை­யின்­படி கொரோனா வைர­ஸா­னது மத்­திய கிழக்கின் சுவா­சநோய் (MERS CoV), (SARS CoV) போன்ற வைரஸ்­களை போன்றே சாதா­ரண தடிமன் முதல் மரணம் வரை­யிலும் உடல் நலத்தைப் பாதிக்கக் கூடிய இதற்கு முன் மனி­தரில் இனம் காணப்­ப­டாத வைர­ஸாகும்.

வைரஸ் தொற்­றிற்கு ஆளான ஒரு­வ­ருக்குப் பொது­வான நோய் அறி­கு­றிகள் சுவாச தொகு­தியில் வெளிக்­காட்­டப்­படும். அவை காய்ச்சல், இருமல், சுவா­சித்­தலில் கஷ்டம் ஏற்­படல் என்­ப­ன­வாகும். நிலைமை தீவி­ர­ம­டை­யும்­போது நியூ­மோ­னியா, கடு­மை­யான சுவா­ச­நோய்கள், சிறு­நீ­ரகச் செய­லி­ழப்பு மட்­டு­மின்றி உயி­ரி­ழப்பும் ஏற்­ப­டலாம்.

நோய்த் தொற்­றி­லி­ருந்து பாது­காப்புப் பெற தொடர்ச்­சி­யாக கைகளை கழுவல், இருமல் மற்றும் தடிமன் உள்­ளோ­ரி­ட­மி­ருந்து விலகி இருத்தல், தும்மும் போதும் இருமும் போதும் மூக்­கையும் வாயையும் மூடிக்­கொள்­ளுதல் மேலும் இறைச்சி, முட்டை போன்­ற­வற்றை முறை­யாக சமைத்தல் போன்ற வழி­மு­றை­களைப் பின்­பற்­று­மாறும் உலக சுகா­தார ஸ்தாபனம் அறி­வு­றுத்­து­கி­றது. மேலும் அதன் கணிப்­பீட்டின் படி கொரோனா வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­னோரில் 82% ஆனோர் சாதா­ரண நிலை­மையில் இருப்­ப­தா­கவும் 15% ஆனோர் கடு­மை­யான பாதிப்­பிற்கும் 3% ஆனோர் தீவிர கட்­டா­ய­மான நிலையில் இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சீனா­வுக்கு வெளியில் 25 நாடு­களில் மேற்­படி கொரோனா வைரஸின் தாக்கம் காணப்­ப­டு­கி­றது. சீனா­விற்கு அடுத்­த­தாக அதிக தொற்­றுள்­ள­வர்­களை கொண்ட நாடுகள் ஜப்பான் மற்றும் ஹொங்கொங் என்­ப­ன­வாகும். பிரித்­தா­னி­யாவின் ஒன்­ப­தா­வது தொற்­றுள்ள நபர் கடந்த புதன்­கி­ழமை இனங்­கா­ணப்­பட்டார்.

எம்எஸ் வெஸ்­டடர்ம் கப்­ப­லா­னது 2,000 இற்கும் மேற்­பட்ட பய­ணி­களை கொண்­டுள்­ளது. 5 நாடு­களின் துறை­முக அனு­மதி மறுக்­கப்­பட்டு வந்த நிலையில் கம்­போ­டியா அரசு குறித்த கப்­ப­லுக்கு அனு­மதி அளித்­துள்­ளது. இது குறித்து உலக சுகா­தார ஸ்தாபன தலைவர் டெட்ரோஸ் அடனொம் கெப்­ரே­யஸஸ் கம்­போ­டியா சுகா­தார அமைச்­ச­ருக்கு நன்றி தெரி­வித்­துள்ளார். குறித்த கப்­பலில் கொரோனா தொற்­றுள்ள எவரும் இருக்­கா­த­போ­திலும் குறித்த கப்­பலை நிறுத்தி வைக்க தாய்­லாந்து, ஜப்பான், தாய்வான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மறுப்பு தெரி­வித்­தன.

மேலும் ஜப்பான் துறை­மு­கத்தில் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்ள டைமன்ட் பிரின்ஸஸ் அதி சொகுசு கப்­பலில் 3,700 பய­ணிகள் உள்ள நிலையில் அதில் இது­வ­ரையில் 135 கொரோனா வைரஸ் தொற்­றுள்­ள­வர்கள் இனம்­கா­ணப்­பட்­டுள்ள அதே­வேளை அனைத்து பய­ணி­களும் இது­வ­ரையில் தொற்றைக் கண்­ட­றியும் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பில் அனே­க­மான பெரும் தொலை­பேசி நிறு­வ­னங்கள் அச்சம் வெளி­யிட்­டுள்­ளதால் சர்­வ­தேச தொலை­பேசி தொழில்­நுட்ப காங்­கிரஸ் மாநாடு தொலை­பே­சி­க­ளுக்­கான சர்­வ­தேச அமைப்பு (GSMA) இனால் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது.

இம்மாநாடு பாது­காப்­பா­னதும் ஆரோக்­கி­ய­மா­ன­து­மான சூழலில் நடை­பெற வேண்டும் என விரும்­பு­வ­தாக GSMA இன் நிர்­வாக அதி­காரி ஜோன் ஹொப்மன் அறிக்கை வெளி­யிட்­டுள்ளார்.

மேலும் அவுஸ்­தி­ரே­லிய அரசு சீனா­வி­லி­ருந்து பய­ணிகள் வரு­வ­தற்­கான தடையை பெப்­ர­வரி மாதம் 22 ஆம் திகதி வரையில் நீடித்­துள்­ளது.
ஹொங்­கொங்கின் உல­க­ளா­விய பிர­சித்தம் பெற்ற விளை­யாட்டு நிகழ்­வான ரக்பி ஸெவன் மற்றும் சிங்­கப்பூர் ஸெவன் ஆகி­யன ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சீனாவின் பல மாகா­ணங்­களின் பாட­சா­லை­களும் பெப்­ர­வரி மாத இறுதி வரை­யிலும் மீள திறக்­கப்­பட மாட்­டா­தென அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

செஞ்­சி­லுவை சங்கம் வட கொரி­யா­விற்கு நிதியைக் கொண்டு தேவை­யான உப­க­ர­ணங்­களை பெறவும் பரி­சோ­தனைக் கரு­வி­க­ளையும் பாது­காப்பு உடை­களைப் பெறவும் தடையை அகற்­றும்­படி வேண்­டுகோள் விடுத்­துள்­ளது. சீனாவின் வூஹான் மாநி­லத்தில் இனம்­கா­ணப்­பட்ட கொரோனா வைர­ஸ் உலகின் பல பாகங்­க­ளிலும் பல்­வே­று­பட்ட மாற்­றங்­க­ளையும் ஏற்படுத்தியுள்ளது.-Vidivelli

  • ஷிப்னா சிராஜ் 

Leave A Reply

Your email address will not be published.