சி.ஐ.டி.யினர் எனக்கூறி வீட்டுக்குள் புகுந்து கொள்ளை

உங்களுக்கு ஐ.எஸ். உடன் தொடர்பிருக்கிறது என்றும் அச்சுறுத்தினர்

0 947

நாங்கள் சி.ஐ.டி யினர், உங்­க­ளுக்கு ஐ.எஸ் அமைப்­புடன் தொடர்­பி­ருக்­கி­றது என தக­வல்கள் கிடைத்­துள்­ளன. உங்கள் வீட்­டைச்­சோ­த­னை­யிட வேண்டும் என வீட்­டுக்குள் புகுந்த  ஆறு கொள்­ளை­யர்கள் 40 பவுண் தங்க நகை­க­ளையும் 29 இலட்சம் ரூபா பணத்­தையும் கொள்­ளை­யிட்டுச் சென்­றுள்­ளனர்.

இச்­சம்­பவம் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு 9.00 மணி­ய­ளவில் அக்­கு­றணை அம்­பத்­தென்ன – பூஜா­பிட்டி வீதியில் அமைந்­துள்ள வீடொன்றில் இடம்­பெற்­றுள்­ளது. இச்­சம்­பவம் தொடர்பில் அல­வத்­து­கொட பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­துடன் சந்­தே­கத்தின் பேரில் ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இச்­சம்­பவம் பற்றி தெரி­விக்­கப்­ப­டு­வ­தா­வது வீட்டு உரி­மை­யாளர் அக்­கு­ற­ணையில் நகைக்கடை­யொன்­றினை நடத்தி வரு­ப­வ­ராவார்.அவர் அன்று இந்­தி­யா­வுக்கு சென்­றுள்ளார். வீட்டில் அவ­ரது மனைவி மற்றும் மனை­வியின் தந்தை குடும்­பத்­தினர் இருந்­துள்­ளனர்.

அன்று இரவு 9.00 மணி­ய­ளவில் வீட்­டுக்கு வந்த அறுவர் தம்மை சி.ஐ.டி யைச் சேர்ந்­த­வர்கள் என அறி­மு­கப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர். சி.ஐ.டி அடை­யாள அட்­டை­க­ளையும் காண்­பித்­துள்­ளனர். வீட்டு உரி­மை­யா­ள­ரையும் விசா­ரித்­துள்­ளனர். அவர் இந்­தி­யா­வுக்குச் சென்­றுள்­ள­தாக அவ­ரது மனை­வி­யினால் தெரி­விக்­கப்­பட்­டது. அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளான ஐ.எஸ் பயங்­க­ர­வா­திகள் டுபாயில் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னனர். அது தொடர்பில் விசா­ரணை நடத்த வேண்டும் எனக்­கூறி அவ­ரது மனை­வி­யிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொண்­டுள்­ளனர்.

அறு­வரில் இருவர் வாக்கு மூலம் பெற்றுக் கொண்­டி­ருக்­கையில் ஏனைய நால்­வரும் வீட்­டினை சோத­னைக்­குட்­ப­டுத்­தி­யுள்­ளனர். வீட்­டினை சோதனை நடத்­திய பின்பு சிறிது நேரத்தில் இது தொடர்பில் மீண்டும் அழைப்­ப­தாகக் கூறி­விட்டு வெளி­யேறிச் சென்­றுள்­ளனர்.

பின்பு வீட்டின் கீழ் மாடி­யையும் மேல்­மா­டி­யையும் சென்று பார்த்த போது தங்க நகை­களும் பணமும் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­டுள்­ளமை தெரிய வந்­துள்­ளது. சிவில் உடையில் வந்­த­வர்கள் தாங்கள் சி.ஐ.டி எனக்­கூறி அடை­யாள அட்­டை­க­ளையும் காண்­பித்­தனர். நாங்கள் அவர்­களை சி.ஐ.டி யினர் என்று நினைத்து ஏமாந்து விட்டோம் என நகைக்­கடை உரி­மை­யா­ளரின் மனை­வியின் தந்தை எம்.எம்.எஸ்.ஏ.பரீட் தெரி­வித்தார். உடன் இது தொடர்பில் அல­வத்­து­கொட பொலிஸில் முறைப்­பாடு செய்தோம். சந்­தே­கத்தின் பேரில் வவு­னி­யாவைச் சேர்ந்த ஒரு­வரை கைது செய்­துள்­ள­தாக பொலிஸார் கூறினார்கள் என்றார். அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலீம் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று சம்பவம் தொடர்பில் விசாரித்தார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.