கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சீனாவின் வூஹான் நகரிலிருந்து விஷேட ஸ்ரீலங்கன் விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு தியத்தலாவை இராணுவ முகாமில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கும் 33 மாணவர்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
33 மாணவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறி இன்மையால் அவர்கள் விஷேட வைத்திய கண்காணிப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தொற்று நோய்களுக்கான விஷேட வைத்திய நிபுணர் சுஜித் சமரவீர தெரிவித்தார்.
இந்த மாணவர்கள் கடந்த முதலாம் திகதி சீனாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு அன்று முதல் தொடர்ந்து வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நாளை அவர்களது விஷேட வைத்திய கண்காணிப்பு கால எல்லை நிறைவுக்கு வருகிறது. அவர்களுக்கு 2019ncov வைரஸ் தொற்று இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர்களைத் தொடர்ந்தும் முகாமில் தடுத்து வைப்பதற்கு அவசியமில்லை எனவும் டாக்டர் சுஜித் சமரவீர தெரிவித்தார்.-Vidivelli
- ஏ. ஆர்.ஏ. பரீல்