தமிழில் தேசிய கீதம் பாடி ஒருமைப்பாட்டை வெளிப்படுத்திய சமூக செயற்பாட்டாளர்கள்

0 661

72 ஆவது சுதந்­திர தினக் கொண்­டாட்­டத்தில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் சிங்­க­ளத்தில் மட்­டுமே தேசிய கீதம் இசைக்­கப்­ப­டு­மென அறி­வித்­த­தை­ய­டுத்து மக்கள் பல­த­ரப்­பட்ட எதிர்­வி­னை­களை வெளிக்­காட்­டினர். நிச்­ச­ய­மாக இந்த முடிவு சிங்­கள பெளத்­த­ரி­டையே மகிழ்ச்­சி­யையும் சிறு­பான்­மை­யி­ன­ராக இருப்­போ­ரிடம் விஷே­ட­மாக தமி­ழ­ரி­டையே சிறு கோபத்­தையும் தூண்­டி­யி­ருக்­கி­றது. இதனை மன­திற்­கொண்டு கடந்த பெப்­ர­வரி நான்காம் திகதி பொரளை மயான சுற்று வட்­டா­ரத்தில் அர­சாங்­கத்தின் முடி­வுக்குத் தமது உடன்­பா­டின்­மையை வெளிப்­ப­டுத்­து­மு­க­மாக ஒரு குழு­வினர் ஒன்­றாக இணைந்து தேசிய கீதத்தை தமி­ழிலும் சிங்­க­ளத்­திலும் பாடினர்.

அந்தக் குழு­வி­ன­ரோடு பேசிய போது,

கொள்கை எம்மை அழிக்­கி­றது

நடை­பெற்ற சுதந்­தி­ர­தின நிகழ்வில் சிங்­க­ளத்தில் மட்டும் தேசிய கீதம் பாடப்­பட்­டதை எதிர்த்தே நாம் அரச கரும மொழி­க­ளான சிங்­க­ளத்­திலும் தமி­ழிலும் பாடு­வ­தற்கு ஏற்­பாடு செய்­துள்ளோம்.

தமிழ் பேசும் மக்­களின் மொழி சார்ந்த கட்­டுப்­பா­டு­க­ளினால் ஏற்­ப­டு­கின்ற துன்­பத்தை நாம் புரிந்­து­கொள்­கிறோம். கடந்த மூன்று தசாப்­தங்­க­ளாக சிங்­களம் மட்டும் என்ற கொள்­கை­யினால் இன ரீதி­யான பிரச்­சி­னைகள் எழுந்து நாடு அழிந்­தது. நாம் சுதந்­தி­ர­மான, சமத்­து­வ­மான இலங்­கை­யையே எதிர்­பார்க்­கிறோம். அர­சினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற திட்­டங்­களில் சமத்­து­வமும் நீதியும் பேணப்­ப­டும்­வரை எமது போராட்­டத்தை தொட­ரு­வோ­மென சமூக செயற்­பாட்­டா­ளரும் நிகழ்வின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரு­மான மரிஸா டி சில்வா குறிப்­பிட்டார்.

அர­சியல் யாப்பு

ஒரு நாட்டின் சுதந்­திர தின­மா­னது எல்லாக் குடி­மக்­க­ளுக்கும் தனித்­து­வ­மான நாளொன்­றாகும். தேசிய கீதம் அத்­தி­னத்தின் சின்­ன­மாக விளங்­கு­கி­றது. அர­சியல் யாப்பும் தேசி­ய­கீதம் தமிழ் மற்றும் சிங்­கள மொழி­களில் பாடப்­பட வேண்­டு­மெனக் கூறு­கி­றது. ஆனால், கோத்­தா­பய ராஜபக் ஷ அர­சாங்கம் தமிழ் பேசும் மக்கள் தேசிய கீதத்தை தமது தாய்­மொ­ழியில் பாட முடி­யா­தென தடை விதித்­துள்­ளது. அர­சாங்­கமும் சுதந்­தி­ர­தின நிகழ்வில் அப்­படிப் பாட முடி­யுமா? முடி­யா­தா­வென மிகத் தெளி­வாக அறி­விக்­க­வில்லை.
அத­னா­லேயே நாமின்று ஒன்­று­கூடி இரு மொழி­க­ளிலும் தேசிய கீதத்தை பாடி தமிழ் மக்­க­ளுடன் இணைந்து நிற்­பதை வெளிக்­காட்­டி­யுள்ளோம் என கூறு­கிறார் சிறி­துங்க ஜய­சூ­ரிய – ஐக்­கிய சோச­லிச கட்சி

கீதத்தின் அர்த்தம்

சிலரால் தேசிய கீதத்தின் அர்­த்தத்தைச் சரி­வரப் புரிந்­து­கொள்ள முடி­யா­துள்­ளது. அத­னா­லேயே தமிழ் மக்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்கு முக­மாக இரு மொழி­க­ளிலும் தேசிய கீதம் பாடப்­ப­டு­கின்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டேன் என்­கிறார் சட்­டத்­த­ர­ணி­யான ஷனிகா சில்வா.

இது ஒரு முன்­னு­தா­ர­ண­மான முடிவு

சிங்­கள மக்­களைப் போன்றே தமிழ் பேசும் மக்­களும் அர­சினால் பார்க்­கப்­பட வேண்டும். அத­னா­லேயே அரசின் அறிக்­கைக்கு எமது உடன்­பா­டின்­மையை வெளிப்­ப­டுத்­து­கிறோம். இந்த நாட்டின் சக பிர­ஜை­க­ளாக தமிழ்­மொழி பேசு­ப­வர்­க­ளுக்கு துணையாக நிற்க வேண்டுமென இளம் ஆய்வாளர் பஸன் ஜயசிங்க தெரிவித்தார்.

மக்கள் பிள­வு­பட்­டி­ருக்­கின்­றனர்

தேசிய கீதம் சிங்­கள மொழியில் மட்­டுமே பாடப்­பட வேண்­டு­மென்ற அரசின் அறி­வித்தல் பற்றி நாம் கரி­சனை கொண்டோம். நான் இந்­நாட்டின் ஒரு பிர­ஜை­யா­கவே வந்தேன். ஒரு குழு­வி­னரால் தேசி­ய­கீதம் பாடப்­பட முடி­யா­தெனில் எம்­மாலும் அது பாட முடி­யா­தென நான் நம்­பு­கிறேன். எமது நாட்டின் வர­லாற்றில் எமது மக்கள் மொழியால் வேறு­பட்­டி­ருப்­பதைக் காண­மு­டி­கி­றது.
நாம் பல கல­வ­ரங்கள் ஏற்­ப­டு­வதை தடுக்கப் போரா­டி­யிருக்­கிறோம். என்னைப் பொறுத்­த­வரை எமக்குத் தேவை­யா­னது ஒரு கீதமோ கொடியோ அல்ல. எம் அனை­வ­ராலும் தேசிய கீத­மென்­பது பாடப்­படக் கூடி­ய­தாக இருக்க வேண்டும். தமிழ் மக்கள் மீதான எமது அன்பை வெளிப்­ப­டுத்த வேண்டும் என செனல் வன்­னி­யா­ரச்சி கருத்து தெரி­வித்தார்.

பன்மைத்துவ நாடு

தமிழில் தேசியகீதம் பாடப்படுவதைத் தடுக்கின்ற சில காரணிகள் காணப்படு கின்றன. நாம் பன்மைத்துவம் கொண்ட நாட்டில் வாழ்கிறோம். இன ரீதியான அடையாளங் களை மதிக்கவும் பாதுகாக்கவும் முன்வரும் முதிர்ந்த சமூகமாக நாமிருக்க வேண்டுமென கிறிஸ்தவ மதபோதகர் சரத் இத்தமல்கொட கூறினார்.

நன்றி: டெய்லி மிரர்-Vidivelli

  • ஆங்கிலத்தில்: காமந்தி விக்ரமசிங்க
    தமிழில்: ஷிப்னா சிராஜ்

Leave A Reply

Your email address will not be published.