ஹஜ் யாத்திரை 2020 : இறுதித் தீர்மானம் நாளை

ஹஜ் முகவர் பிரதிநிதிகள் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை

0 969

இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ நாளை தனது இறுதித் தீர்­மா­னத்தை அறி­விக்­க­வுள்ளார். அரச ஹஜ் குழுவும், ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் பிர­தி­நி­தி­களும் நேற்று முன்­தினம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டினர். முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தலை­மையில் இக்­க­லந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றது.

அரச ஹஜ் குழு­வினால் ஹஜ் முக­வர்­க­ளுக்கு இரு வேறு­பட்ட ஹஜ் பொதி (Package) அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அரச ஹஜ் குழு இதன் அடிப்­ப­டை­யிலே ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது.
குறிப்­பிட்­ட­இரு வேறு­பட்ட பெக்­கேஜ்­களில் அரச ஹஜ் குழு வரை­ய­றுத்­துள்ள நிபந்­த­னைகள், வச­தி­களின் கீழ் ஹஜ் முக­வர்கள் ஹஜ் ஏற்­பா­டு­க­ளுக்கு இணக்கம் தெரி­வித்தால் பிர­த­ம­ருடன் கலந்­து­ரை­யாடி பிர­தமரும் இணக்கம் தெரி­வித்தால் ஹஜ் ஏற்­பா­டுகள் முக­வர்­க­ளுக்கு வழங்­கப்­படும் என அரச ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தெரி­வித்தார்.

5 இலட்சம் ரூபா கட்­ட­ணத்தில் ஒரு ஹஜ் பொதியும், 6 ½ இலட்சம் ரூபா கட்­ட­ணத்தில் மற்­றுமோர் ஹஜ் பொதியும் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. 5 இலட்சம் ரூபா ஹஜ் பொதி 30 நாட்­களைக் கொண்­டதும் துல்­கஃதா 15 இல் ஆரம்­பித்து துல்ஹஜ் 15 வரை­யாகும். 6 ½ இலட்சம் ரூபா கட்­ட­ணத்­தி­லான ஹஜ் பொதி துல்ஹஜ் 4 இல் ஆரம்­பித்து துல்ஹஜ் 24 இல் நிறை­வுறும் ஹஜ் பொதி­யாகும். இது 20 நாட்­களைக் கொண்­ட­தாகும்.

இலங்­கை­யி­லி­ருந்து அழைத்துச் செல்­லப்­படும் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் மக்­காவில் ஹரம் ஷரீ­புக்கு 300 மீற்றர் எல்­லைக்குள் ஐந்து நட்­சத்­திர ஹோட்­டலில் தங்க வைக்­கப்­பட வேண்டும். மதீ­னா­விலும் ஐந்து நட்­சத்­திர ஹோட்­டலில் தங்க வைக்­கப்­பட வேண்டும். மினாவில் B பிரிவு முஅல்லிம் கூடா­ரத்தில் தங்­க­வைக்­கப்­பட வேண்டும் உட்­பட பல வச­திகள் நிபந்­த­னையில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன. இந்த ஏற்­பா­டுகள் தொடர்பில் ஹஜ் முக­வர்கள் சங்­கத்தின் முன்னாள் தலைவர் எம்.எம்.அஹமட் நிஜாரை தொடர்பு கொண்டு வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

ஹஜ் குழு சவூதி அரே­பி­யா­வுக்கு சென்று முஅல்லிம் சம்­மே­ள­னத்­துடன் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கி­றது. ஹஜ் குழு­வுக்கு சவூதி விமான சேவை பயணச் சீட்டு 2000 ரியால்­க­ளுக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

ஆனால் இலங்­கையில் நாம் இதற்­காக 3000 ரியால் பய­ணச்­சீட்­டுக்கு மாத்­திரம் செலுத்த வேண்­டி­யுள்­ளது. இதே­போன்று மினாவில் கூடா­ரத்­திற்கு (B பிரிவு) நாம் 2000 ரியால் செலுத்த வேண்­டி­யுள்­ளது. ஆனால் இந்தக் கட்­டணம் ஹஜ் குழு­வுக்கு 1500 ரியா­லுக்கு வழங்க உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் ஹஜ் குழு குறிப்­பிட்­டுள்ள கட்­ட­ணங்கள் தொடர்பில் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

ஆனால் ஹஜ் குழு சில அனு­ப­வ­முள்ள முக­வர்­களைத் தெரிவு செய்து ஹஜ் கோட்­டாவை அதிக எண்­ணிக்­கையில் வழங்­கினால் குறிப்­பிட்ட கட்­ட­ணத்தில் ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முடியும். இந்­நி­லையில் ஏனைய ஹஜ் முக­வர்­களின் நிலை குறித்தும் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது என்றார்.

நாளை வியாழக்கிழமை அரச ஹஜ் குழு பிரதமரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளது. ஹஜ் முகவர் சங்கம் முன்வைக்கும் ஆலோசனைகளும் சிபாரிசுகளும் பிரதமரிடம் கையளிக்கப்படும். பிரதமரே இறுதித் தீர்மானம் மேற்கொள்வார் என ஹஜ் குழுவின் தலைவர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.