அம்பகந்தவில விவகாரத்திற்கு சமாதான தீர்வு வேண்டும்

0 1,146

சுமார் நூறு வரு­டங்­க­ளாக சிலாபம் – அம்­ப­கந்­த­வில பகு­தியில் அடக்­கஸ்­தலம் ஒன்­றினை மைய­ப்ப­டுத்தி முஸ்­லிம்கள் வரு­டாந்தம் நடத்­தி­வரும் கந்­தூரி வைப­வத்­திற்கு சிலாபம் நீதிவான் நீதி­மன்ற நீதிவான் தடை­யுத்­த­ர­வொன்­றினைப் பிறப்­பித்­தி­ருந்தார். இத­னை­ய­டுத்து கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெ­ற­வி­ருந்த கந்­தூரி வைப­வத்­துக்கு நீதி­மன்றம் தடை விதித்­தி­ருந்­தது.

சிலாபம் அம்­ப­கந்­த­வில பகு­தியைச் சேர்ந்த கத்­தோ­லிக்க மக்­களும், கத்­தோ­லிக்க தேவா­லய அருட் தந்­தையும் தெரி­வித்த எதிர்ப்­பி­னை­ய­டுத்தே இக்­கந்­தூரி வைபவம் தடை­செய்­யப்­பட்­ட­தாக சிலாபம் நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ‘இந்­திய முஸ்லிம் ஹன­பி­ பள்­ளி­வாசல்‘ என்­ற­ழைக்­கப்­படும் சிலாபம் பஸார் பள்­ளி­வாசல் தலைவர் எஸ்.எம்.ஜே.பைஸ்­தீ­னுக்கு கடிதம் மூலம் அறி­வித்­தி­ருந்தார்.

அம்­பகந்­த­வில பகு­தியில் அமைந்­துள்ள அடக்­கஸ்­தலம் சுமார் 60 அடி நீளம் 5 அடி அக­லத்­தினைக் கொண்­ட­தாகும். சுமார் ஒரு ஏக்கர் நிலப்­ப­ரப்­பினைக் கொண்­டுள்ள காணியில் அமைந்­துள்ள அடக்­கஸ்­த­லத்­துக்கும், காணிக்கும் வேலி அமைக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. கடந்த நூறு வரு­டங்­க­ளாக இங்கே கந்­தூரி வைபவம் இடம்­பெற்று வந்­துள்­ளது. கந்­தூரி வைப­வத்தில் வரு­டாந்தம் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் கலந்து கொள்­வது வழ­மை­யாகும்.

‘‘கந்­தூரி வைபவம் இடம்­பெற்றால் கிரா­ம­வா­சி­க­ளுக்கு இடையில் கல­வரம் ஏற்­படும் நிலை உரு­வாகும். அத்­தோடு அமை­திக்கும் சமா­தா­னத்­திற்கும் பாதிப்பு ஏற்­படும்‘‘ என சிலாபம் பொலிஸார் சிலாபம் நீதிவான் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தி­ருந்­த­தை­ய­டுத்தே சிலாபம் நீதிவான் நீதி­மன்றம் கந்­தூரி வைப­வத்­துக்கு தடை­யுத்­த­ரவு பிறப்­பித்து நிறுத்­தி­யது. இந்தக் கந்­தூரி வைப­வத்தில் பல்­லாண்­டு­கா­ல­மாக கிறிஸ்­தவ மக்­களும் பங்­கு­கொண்டு வந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

முஸ்லிம் மக்­களால் வரு­டாந்தம் நடாத்­தப்­பட்­டு­வரும் இந்த சமய நிகழ்­வுக்கு அம்­ப­கந்­தவில பிர­தேச கத்­தோ­லிக்க மக்­க­ளும், கத்­தோ­லிக்க ஆலய குரு­மார்­க­ளும் எதிர்ப்பு வெளி­யி­ட்­டுள்­ளதால் இந்த சமய நிகழ்வு இடம்­பெறும் தினத்­தன்று கிராம மக்­களால் கல­வ­ரங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்டு அசா­தா­ரண நிலை ஏற்­ப­டலாம் என சிலாபம் பொலிஸார் நீதி­மன்­றுக்கு அறிக்கை சமர்ப்­பித்­துள்­ள­தாக நீதிவான் நீதி­மன்ற நீதிவான் சிலாபம் பஸார் பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத் தலை­வ­ருக்கு கடிதம் மூலம் அறி­வித்­துள்ளார். 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்­ற­வியல் சட்­டக்­கோவை 106 (1) பிரிவின் கீழ் குறிப்­பிட்ட கந்­தூரி வைப­வத்­துக்கு தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் பள்­ளி­வாசல் நிர்­வாக சபைத் தலை­வ­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெ­று­வ­தற்கு முன்பு மார்ச் மாதம் குறிப்­பிட்ட அடக்­கஸ்­தலம் (சியாரம்) அமைந்­துள்ள இடத்­துக்கு அண்­மையில் 10 அடி தூரத்தில் பலாத்­கா­ர­மாக கிறிஸ்­த­வ சிலை­யொன்­றினை வைத்­துள்­ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிலை­யொன்­றினை நிறு­வி­யது மட்­டு­மல்­லாமல் அவர்கள் சந்­தியா விளை­யாட்டு மைதானம் என முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான காணியை பிர­க­ட­னப்­ப­டுத்தி பெயர்ப்­ப­ல­கை­யொன்றும் நிறு­வி­யுள்­ளனர். சிலாபம் பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தின் கீழ் இருக்கும் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­யையும் அடக்­கஸ்­த­லத்­தையும் பிரதேச கிறிஸ்­தவர்கள் சிலர் அப­க­ரிக்க முயற்­சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்­நாட்டில் நூற்­றாண்­டு­ கா­ல­மாக முஸ்­லிம்கள் ஒற்­று­மை­யா­கவே வாழ்ந்து வரு­கி­றார்கள். இந்­நி­லையில் முஸ்­லிம்­களின் சமய இடங்கள், காணிகள் பலாத்­கா­ர­மாக அப­க­ரிக்க முற்­ப­டு­வது இந்­நாட்டில் நல்­லி­ணக்­கத்­துக்கும் சக வாழ்­வுக்கும் குந்­த­க­மா­கவே அமையும்.

நூற்­றாண்­டு­காலம் பழமை வாய்ந்த இந்த அடக்­கஸ்­த­லத்தில் நடை­பெற்று வந்த கந்­தூரி வைப­வத்­துக்கு கத்தோலிக்க மக்களும் அருட்தந்தையும் எதிர்ப்பு தெரிவித்து தடைசெய்துள்ளமை தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தரீக்கா கவுன்ஸில் அறிவித்துள்ளது. இந்நகர்வு வரவேற்கத்தக்கதாகும்.

இனங்களுக்கிடையில் நிலவும் பிரச்சினைகளுக்கு வன்முறைகளினாலன்றி சமாதானமாக பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும். முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பு இதுவேயாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.