ரிஷாத்தின் சர்ச்சைக்குரிய காணி கொள்வனவு தொடர்பில் 227 ஆவணங்கள் சிக்கியுள்ளன

அமைச்சர் விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு

0 803

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் காணி கொள்­வ­னவு செய்­தது தொடர்பில் 227 ஆவ­ணங்­களின் மூலப்­பி­ர­தி­களும், 8 முதல் பிர­தி­களும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ருக்கு கிடைக்கப் பெற்­றுள்­ளன. இவை தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­னரும், பதில் பொலிஸ்மா அதி­பரும் முறை­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்­டு­மென்று குறிப்­பிட்ட அமைச்சர் விமல் வீர­வன்ச, 52 நாட்கள் அர­சியல் நெருக்­கடி நில­விய காலப்­ப­கு­தியில் அவ­ரது அமெ­ரிக்க வங்கி கணக்­கிற்கு இலங்­கை­யி­லி­ருந்து ஒரு இலட்சம் அமெ­ரிக்க டொலர் வைப்­பி­லி­டப்­பட்­டி­ருப்­பது தொடர்பில் விசா­ரணை நடத்­து­மாறும் தெரி­வித்தார்.

சிறிய மற்றும் நடுத்­தர அள­வி­லான தொழில்­துறை மற்றும் தொழில் முயற்சி அபி­வி­ருத்தி அமைச்சில் நேற்று திங்­கட்­கி­ழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் இதனைத் தெரி­வித்த அவர் மேலும் கூறு­கையில், குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு கிடைக்­கப்­பெற்ற தக­வல்­க­ளுக்­க­மைய ஞாயிற்­றுக்­கி­ழமை நப­ரொ­ரு­வ­ரு­டைய வீட்டை சோத­னைக்­குட்­ப­டுத்­தி­ய­போது, அந்த வீட்­டி­லி­ருந்து பல ஆவ­ணங்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. அவற்றில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் வெவ்­வேறு நபர்­களின் பெயர்­களில் கொள்­வ­னவு செய்­துள்ள நிலங்கள் தொடர்­பி­லான ஆவ­ணங்­களின் 227 மூலப்­பி­ர­திகள் கிடைக்கப் பெற்­றுள்­ளன. அதே­போன்று உண்­மை­யான ஆவ­ணங்கள் எட்டும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. மீட்­கப்­பட்ட 227 மூலப்­பி­ர­தி­க­ளி­லி­ருந்து எத்­தனை ஏக்­கர்கள் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டி­ருக்கும் என்று கணிப்­பிட முடியும்.

இவை மாத்­தி­ரமின்றி சதொச விற்­பனை நிலை­யத்தின் மூலம் கடந்த அர­சாங்­கத்தால் முன்­னெ­டுக்­கப்­பட்ட மோச­டிகள் தொடர்­பி­லான ஆவ­ணங்­களும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­னரால் மீட்­கப்­பட்­டுள்­ளன. உதா­ர­ண­மாக மின்­பி­றப்­பாக்கி இயந்­திரம் ஒன்றை கொள்­வ­னவு செய்­யும்­போது பெறு­மதி குறைந்த இயந்­தி­ரத்தை கொள்­வ­னவு செய்து, அதற்கு கூடிய விலையை காண்­பித்தல் போன்ற பல்­வேறு மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. இவற்றை பற்றி மாத்­திரம் ஆராய்ந்து கொண்­டி­ருப்­பதில் பிர­யோ­ச­ன­மில்லை. எனவே பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­ன­ரிடம் கோரிக்­கை­யொன்றை முன்­வைக்­கின்றோம். கடந்த 2018 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் முதல் நில­விய 52 நாட்கள் அர­சாங்­கத்தின் போது ரிஷாத் பதி­யு­தீ­னு­டைய அமெ­ரிக்க வங்கி கணக்­கிற்கு இலங்­கை­யி­லி­ருந்து ஒரு இலட்சம் அமெ­ரிக்க டொலர் பணம் வைப்­பி­லி­டப்­பட்­டுள்­ளது. இரண்­டா­வது தடவை இவ்­வாறு வைப்­பி­லிட முற்­படும் போது சந்­தே­கத்தின் பேரில் அது தடுத்து நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு ஒரு இலட்சம் அமெ­ரிக்க டொலர் ஏன், எதற்­காக வைப்­பி­ட­லி­டப்­பட்­டது என்பது தொடர்பில் தீர்க்கமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது ரிஷாத் பதியுதீன் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவை தொடர்பான முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.-Vidivelli

 

Leave A Reply

Your email address will not be published.