இலங்கை-இந்திய ஒப்பந்தமே முஸ்லிம்கள் இன ரீதியான காட்சிகளை ஆரம்பிக்க காரணம்

இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க சுட்டிக்காட்டு

0 801

 

இந்­நாட்டில் முன்னர் முஸ்­லிம்கள் மத்­தியில் இன ரீதி­யா­கவோ மத ரீதி­யா­கவோ அர­சியல் கட்­சிகள் இருக்­க­வில்லை. அவ்­வா­றான ஒரு கட்சி உரு­வாக 1982 இல் ஏற்­பட்ட இலங்கை – இந்­திய ஒப்­பந்­தமே கார­ண­மா­கு­மென அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்தார்.

நேற்று முன்­தினம் கண்டி பிர­தே­சத்தில் இடம்­பெற்ற கட்சி ஆத­ர­வாளர் சந்­திப்­பொன்­றின்­போதே அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,

1987க்கு முன்னர் இந்­நாட்டில் முஸ்­லிம்கள் மத்­தியில் மத ரீதி­யா­கவோ இன ரீதி­யா­கவோ அர­சியல் கட்­சி­யொன்­றி­ருக்­க­வில்லை. முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன ஆட்சிக் காலத்தில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் பிரச்­சினை உக்­கி­ர­ம­டைந்த கால­கட்­டத்தில் ஜே.ஆர்.ஜய­வர்­த­னவும் காமினி திஸா­நா­யக்­கவும் இந்­தி­யா­வுடன் செய்­து­கொண்ட இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தின் கார­ண­மாக இடம்­பெற்ற மாகாண சபை­க­ளுக்­கான தேர்­த­லின்­போதே காலஞ்­சென்ற முன்னாள் அமைச்சர் அஷ்ரப் அவர்­களால் முதன் முத­லாக முஸ்லிம் பெயரில் முஸ்லிம் காங்­கிரஸ் என்ற அர­சியல் கட்சி உரு­வாக்­கப்­பட்­டது.

அதன் பிறகே முஸ்லிம் மதத்தின் பெயர்­க­ளாலும் முஸ்லிம் இனங்­களின் பெயர்­க­ளாலும் பல அர­சியல் கட்­சிகள் உரு­வாக்­கப்­பட்­டன. இதற்கு காரணமானவர்கள் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும் காலஞ் சென்ற காமினி திஸாநாயக்க ஆகியோர்களுமே என்றும் அவர் தெரிவித்தார்.-Vidivelli

  • செங்­க­ட­கல நிருபர்

 

Leave A Reply

Your email address will not be published.