சவூதி சட்டத்தை மீறிய 50 இலங்கையர்கள் சிறையில்

சவூதியிலுள்ள இலங்கை தூதரகம் தகவல்

0 812

இலங்­கை­யி­லி­ருந்து சவூதி அரே­பி­யா­வுக்கு தொழில்­வாய்ப்பு பெற்றுச் சென்று அங்கு ஷரீஆ சட்­டத்தை மீறி பல்­வேறு குற்றச் செயல்­களில் ஈடு­பட்­ட­தாகக் கூறப்­படும் இலங்­கை­யர்கள் சுமார் 50 பேர் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டு அந்­நாட்டின் சிறைச்­சா­லை­களில் தண்­டனைஅனு­ப­வித்து வரு­வ­தாக சவூதி அரே­பி­யாவின் தலை­ந­க­ரான ரியா­தி­லுள்ள இலங்கைத் தூத­வ­ரா­லய தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இவர்­களில் 18 பேர் கொலை மற்றும் இஸ்­லாத்­துக்கு எதி­ரான குற்றச் செயல்­களில் ஈடு­பட்டு மிகவும் பாரிய குற்றச் செயல்­களைப் புரிந்­த­வர்கள் என்ற அடிப்­ப­டையில் மூன்று வரு­டங்­க­ளுக்கு மேற்­பட்ட சிறைத்­தண்­டனை அனு­ப­விப்­ப­வர்­க­ளாவர். இவர்­களில் மூவர் பெண்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும் தங்­க­ளது எஜ­மா­னர்­க­ளது பணம் மற்றும் பொருட்­களை கள­வெ­டுத்­தமை, முறை­கே­டாக நடந்து கொண்­டமை போன்ற சிறிய குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு உட்­பட்டு அக்­குற்­றங்கள் நிரூ­பிக்­கப்­பட்டு 8 பெண்கள் ஒரு வருட கால சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்டு அந்­நாட்டின் சிறைச்­சா­லை­களில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்கள் அனை­வரும் கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்­த­வர்­க­ளெ­னவும் இலங்கைத் தூது­வ­ரா­லய தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இந்த எட்டுப் பெண்­களின் 8 பிள்­ளை­களும் அவர்­க­ளுடன் சிறைச்­சா­லை­களில் இருப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அத்­தோடு வீட்டுப் பணிப்பெண் வேலை­வாய்ப்பு மற்றும் பல வேலை­வாய்ப்பு பெற்று சவூதி அரே­பி­யா­வுக்குச் சென்று, தாம் வேலை செய்த இடங்­க­ளி­லி­ருந்தும், வீடு­க­ளி­லி­ருந்தும் தப்பி வெளி­யே­றிய மேலும் 50 பெண்கள் ரியா­தி­லுள்ள இலங்கை தூது­வ­ரா­லயம் நடாத்தும் பாது­காப்பு இல்­லத்தில் (Safe House) தங்­கி­யி­ருப்­ப­தாக இலங்கை தூது­வ­ரா­லயம் தெரி­வித்­துள்­ளது.

அவர்கள் தாங்கள் பணி­பு­ரிந்த எஜ­மா­னர்­க­ளினால் பல்­வேறு துன்­பு­றுத்­தல்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­வர்கள். அத்­தோடு உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட சம்­பளம் வழங்­கப்­ப­டா­த­வர்­க­ளாகும். இத­னா­லேயே அவர்கள் தாம் வேலை செய்த இடங்­க­ளி­லி­ருந்தும் தப்­பி­யோடி வெளி­யா­கி­யுள்­ளனர். இவர்கள் 4, 6, 8, 9 மாதங்கள் மற்றும் ஒரு வரு­ட­கா­ல­மாக பாது­காப்பு இல்­லத்தில் தங்­கி­யி­ருந்­தனர்.

இந்தப் பெண்­க­ளது தேவைகள் மற்றும் உணவுகளை இலங்கைத் தூதுவராலயமே வழங்கி வருகிறது.

இவர்கள் தொடர்பிலான சட்ட ரீதியான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டதன் பின்பு அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கைத் தூதுவராலயம் ஈடுபட்டுள்ளது.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.