சாய்ந்தமருதுக்கு நகர சபை அலகு

தேர்தலுக்கு முன்னர் பிரகடனப்படுத்துவதாக பிரதமர் மஹிந்த உறுதியளிப்பு

0 939

இது­வரை காலம் கல்­முனை மாந­கர சபையின் அதி­கா­ரத்தின் கீழி­ருந்த சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­துக்­கென தனி­யான புதிய நகர சபை­யொன்­றினை நிறு­வு­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.‘முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் இது­வ­ரை­காலம் சாய்ந்­த­ம­ருது மக்­களை ஏமாற்றி வந்த காலம் மலை­யே­றி­விட்­டது. எங்­களை நாங்­களே ஆளப்­போ­கிறோம். இது எமது நீண்­ட­காலப் போராட்­டத்தின் வெற்றி, எல்லாப் புகழும் அல்­லாஹ்­வுக்கே’ என்று சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் வை.எம்.ஹனிபா தெரிவித்தார்.

கிழக்கு மாகாண மக்கள் பிர­தி­நி­திகள், சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் பிர­தி­நி­திகள், கல்­முனை மாந­கர சபையின் சுயேச்­சைக்­குழு (தோடம்­பழ சின்னம்) உறுப்­பி­னர்கள் மற்றும் அரச அதி­கா­ரி­க­ளுக்கும், பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவுக்­கு­மி­டையில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போதே இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்ற இக்­க­லந்­து­ரை­யா­ட­லின்­போது கல்­முனை வடக்கு உப­பி­ர­தேச செய­லக காரி­யா­ல­யத்தை தர­மு­யர்த்­து­வது தொடர்­பான சிபா­ரி­சு­களை முன்­வைப்­ப­தற்­கென குழு­வொன்­றினை நிய­மிப்­ப­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்­திற்கு புதிய நகர சபை­யொன்­றினை குறு­கிய காலத்­துக்குள் தேர்­த­லுக்கு முன்பு நிறு­வித்­த­ரு­வ­தாக பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷ உறு­தி­ய­ளித்­த­தா­கவும் சாய்ந்­த­ம­ருது பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் வை.எம்.ஹனிபா தெரி­வித்தார். அவர் ‘விடி­வெள்ளி’ க்கு தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

‘சாய்ந்­த­ம­ரு­து­வுக்கு தனி­யான உள்­ளூ­ராட்சி மன்றம் ஒன்­றினை அமைத்துத் தரு­வ­தாக முஸ்லிம் கட்­சி­களும், முஸ்லிம் அமைச்­சர்­களும் தொடர்ச்­சி­யாக வாக்­கு­று­தி­களை வழங்கி வந்­தார்கள். ஆனால் அவர்­க­ளது வாக்­கு­று­திகள் எவையும் செய­லுருப் பெற­வில்லை. சாய்ந்­த­ம­ருது மக்கள் தொடர்ச்­சி­யாக ஏமாற்­றப்­பட்டே வந்­தார்கள். தற்­போ­தைய பிர­தமர் மஹிந்த ராஜபக் ஷவும், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக் ஷவும் தாங்கள் பத­விக்கு வந்தால் எங்­க­ளுக்கு தனி­யான சபை­யொன்­றினை உரு­வாக்கித் தரு­வ­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்­தார்கள். அந்த வாக்­கு­று­திகள் இன்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. எமக்கு தனி­யான நகர சபை­யொன்று உரு­வாக்­கப்­ப­ட­வுள்­ளது.

இதற்­காக நாம் பிர­த­ம­ருக்கும் ஜனா­தி­ப­திக்கும், பஷில் ராஜபக் ஷவுக்கும் இதற்கான முயற்சிகளை முன்னெடுத்த முன்னாள் அமைச்சர்

அதாவுல்லாவுக்கும் நன்றி கூறக் கட­மைப்­பட்­டுள்ளோம். இந்த அரசின் மீது முஸ்­லிம்கள் நம்­பிக்கை கொள்ள வேண்டும் என்றார். இந்தச் சந்­திப்பில் பொது நிர்­வாகம், உள்­நாட்­ட­லு­வல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் அமைச்சர் ஜனக பண்­டார தென்­னகோன், இரா­ஜாங்க அமைச்­சர்­க­ளான விம­ல­வீர திசா­நா­யக்க, லசந்த அழ­கி­ய­வன்ன, மஹிந்த சம­ர­சிங்க, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான அங்­கஜன் ராம­நாதன், சிறி­யானி விஜே­விக்­ரம, உள்­ளூ­ராட்சி அமைச்சின் செய­லாளர் எஸ்.ஹெட்டி ஆரச்சி, கிழக்கு மாகாண ஆளுநர் அநு­ராதா யஹம்பத் ஆகியோர் உட்­பட அரச அதி­கா­ரிகள் கலந்து கொண்­டனர்.

இதே­வேளை தெஹி­யத்­த­கண்­டிய பிர­தேச செய­லாளர் பிரிவின் கீழ் தற்­போது 13 ஆக உள்ள கிராம சேவை­யாளர் பிரி­வு­களை 46 ஆக அதி­க­ரிப்­பது தொடர்பில் அமைச்­ச­ரவைப் பத்திரமொன்றினைச் சமர்ப்பிக்கும்படி பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ பொது நிர்வாக அமைச்சருக்கு ஆலோசனை வழங்கினார்.

குறிப்பிட்ட கிராம சேவையாளர் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்து சட்டரீதியாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை 13 கிராமசேவையாளர் பிரிவுகளையும் 46 ஆக கருதி ஒதுக்கீடுகளை வழங்கும்படியும் பிரதமர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.-Vidivelli

  • ஏ.ஆர்.ஏ.பரீல்

Leave A Reply

Your email address will not be published.